ஊழில் விலகுதல்

ஊழில் விலகுதல் அத்தனைக்கு எளிமையான காரியமில்லை அது.கடுமையான பிரயத்தனம் உள்ளும் புறமும் இருந்தால் சாத்தியமாகும் காரியம் இது. இருவேறு மனிதர்களாக நாம் இருக்கிறோம் எண்ணம் செயல்கள் வழியே ஊழைப் பின் தொடர்வோராக மட்டுமே இருப்பவர்கள் முதல் வகை.பெரும்பாலும் இவர்களே அதிகம்.எங்கு கொண்டு விட்டாலும் திரும்பி நினைவின் திண்ணையில் வந்து படுத்திருக்கும் நாயைப் போல இவர்கள் ஊழில் புரள்வோர். ஊழில் மட்டுமே புரண்டு கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஊழில் விலகத் தெரிந்தவன் தன்னைச் சு ற்றி அனைத்தையும் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறான். யோகம் ஒரு வழிமுறை.படைப்பு மற்றொரு வழிமுறை . குப்பைகளை விலக்குவதற்கு இவையிரண்டும் கற்றுத் தருவதால் இவை ஊழை விலக்குவதற்கும் உதவுகின்றன. பிறவழிகள் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை.பின்னாட்களில் உங்களுக்கு உபயோகப்படுவேன் என்கிற பாவனையோடே குப்பைகள் நம்மைப் பற்றிப் பிணிக்கின்றன.உண்மையில் தற்போது உதவாத எதுவுமே பின்னாட்களில் உதவாது .குப்பை இந்த பண்பு கொண்டு நம்மைப் பிணித்து ஊழில் கொண்டிணைக்கிறது. ஊழில் நம்மைப் பற்றி பிணைக்கும் இரண்டு மிருகங...