மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம்

மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம் ஆன்மீக அரசியல் என்கிற ரஜினியின் முதல் பன்ச் டயலாக்கே நன்றாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் இருபது வருடங்களுக்கு பன்ச் டயலாக்கிற்கும் குறைவில்லை.செய்தித்தாள்களில் கேளிக்கைக்கும் குறைவில்லை.தமிழர்கள் பொதுவெளியரசியலிலும் கேளிக்கை குன்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ரஜினிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் தமிழர்கள் கொள்கை அரசியலை ஏற்று கொள்ளவில்லை என்பது ரஜினியின் அரசியல் பிரவேசம் மூலம் வரலாற்று ரீதியாக மீண்டும் நிரூபணம் ஆகிறது.கொள்கை அரசியல் பேசுவோர் தனிநபர் அரசியலை முன்வைப்பவர்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மக்களின் நம்பகத்தன்மையை பெறுவது கடினமாக இருக்கிறது.கொள்கை அரசியல் தங்களை முற்றிலுமாக ஏமாற்றிவிடுகிற அதிகாரம் என்றே மக்கள் கருதுகிறார்கள் . இதற்கான உளவியல்,சமூகவியல் காரணங்கள் எளிமையாக கடந்துவிடக் கூடியவை அல்ல.அதிலிருக்கும் உண்மையின் மூர்க்கத்தன்மை பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது.ரஜினியின் அரசியல் பிரவேசம் அடுத்த காலகட்டத்திற்குள் எம்.ஜி.ஆர்.நுழைவதனை ஒத்த நிகழ்வு.இது தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில், அரசியல் குழப்பம்...