பண்பாடு என்பதே கலப்பது

பண்பாடு என்பதே கலப்பது ஒவ்வொரு பண்பாடும் மற்றொன்றுடன் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் கணம் தோறும் கலந்தபடியே இருக்கிறது.தவிர்க்கவே இயலாத இயக்கம் இது.அது எப்படி கலக்கிறது ? தாழ்வு மனப்பான்மையால் கலக்கிறதா, மேலாதிக்கத்தின் விளைவாக கலக்கிறதா, மோஸ்தரின் விளைவாகக் கலக்கிறதா ,மேலோட்டமாகக் கலக்கிறதா ,இயல்பாகக் கலக்கிறதா ? இவையெல்லாம் பின்னர் எழுகிற விவாதங்கள்,அறிந்து கொள்ள விளையும் ஆண்களின் முயற்சிகள். ஆர்வங்கள். பெண்மையும் அதன் மனவெளியும் எப்போதும் பிறவற்றுடன் பிற பண்பாடுகளுடன் கலந்து கொண்டேயிருப்பது.சந்தேப்பது அதே அளவிற்குக் கலக்கவும் முயல்வது.கலப்பதில் மகிழ்ச்சி கொண்டது.கலப்பை முன்னெடுப்பது.அதன் இயல்பு அதுவே.இதனை புரிந்து கொண்டால் பல விஷயங்களும் எளிமையாகும்.கலக்காத மனமும் அறிவும் பாழ் .கலக்காத சமூகம் உருப்படாது. எவ்வளவு தூரத்திற்கு நாம் குளோபல் ஆகி கொண்டிருக்கிறோமோ, அதேயளவிற்கு நமது தொல்குடியின் ஆழங்களுக்குள்ளும் ஒரேநே...