கடலொருபக்கம் வீடொருபக்கம்

அச்சுஅசல் ஒரு நாய்க்குட்டி குழந்தையைப் போலவே இருக்கிறது குழந்தையைப் போலவே விளையாடுகிறது குழந்தையைப் போலவே குதிக்கிறது ஆர்ப்பரிக்கிறது குழந்தையைப் போல கனவு காண்கிறது ஏதோ ஒரிடத்தில் இருந்து குழந்தை நாயாகிறது குழந்தை பூனையாகிறது நரியாகிறது எலியாகிறது மனிதனாகிறது பல ஊர்களுக்கும் பிரியும் முச்சந்தி போலொரு இடம் அதனதன் ஊர்களுக்கு அதிலிருந்து திரும்பிச் செல்கின்றன பல ஊர்களுக்கு பல கிளைகளுக்கு குழந்தை தன்னில் நீங்கியதும் உரியவை வந்து எடுத்துச் செல்கின்றன தங்கள் தங்கள் மிருகங்களை 2 போலீஸ் சாலையில் காவல் நிற்கிறாள் போலீஸ்காரி நளினம் வற்றா உடல் அதிகாரம் ஏறாத அவயங்கள் குதிரை இடுப்பு சுற்றி வெட்கம் சுழலும் கண்கள் நெரித்து ஏறும் கூட்டத்தை நெறிப்படுத்தவேண்டும் இப்படி வாங்க அங்க போகாதீங்க என சத்தமாகச் சொல்லும் அவள் உதடு மெதுவாக அப்படி போகாத இப்படியா போ என ஒருமுறை தயக்கத்துடன் பேசிப் பார்க்கிறது இப்படி போடே அப்படி போகாதடே என்பது நோக்கி அவள் சொற்கள் இழுபடுகின்றன ஆசையாசையாய் இழுபடும் வார்த்தைகளைக் கண்டு ரசிக்கிறாள் போலீஸ்காரி முதல் தயக்கத்தின் தலைமீது ஏறிக்கடக்கிறது புத்தம்புதிய வாகனம் சாலையின் குறு...