எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை.

எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை. உள்ளடக்கமும் , கதை சொல்லுதலும் வேறு வேறு காரியங்கள்.கதையடைகிற உருமாற்றமே உள்ளடக்கம். எழுத்தாளனைக் கதை சொல்லியென இங்கே பலரும் கருதுகிறார்கள்.நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உங்களிடம் கதை சொல்வது ,கதைக்கு அப்பால் உள்ள ஒரு உள்ளடக்கத்தைப் பற்றி உங்களோடு தொடர்பு கொள்வதற்குத்தானே அன்றி கதையை மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்வதற்காக அல்ல.இந்த உள்ளடக்கம் ஒரு எழுத்தாளனிலிருந்து மற்றொருவருக்கு மாறுபட்டது.சில சமயங்களில் முற்றிலும் ம ாறுபட்டது.எதிரெதிர் நிலைகளிலும் கூட உள்ளடக்கம் அமைய முடியும்.எழுத்தாளனை content writer என்று புரிந்து கொண்டால் அதிக சிக்கல் ஏற்படாது.கதை சொல்ல எல்லா கிழவிகளுக்கும் தெரியும்.ஊர் கிழவி சொல்லுகிற கதைகளும் ஒரு எழுத்தாளன் முயலுகிற உள்ளடக்கப் பாய்ச்சலும் வேறு வேறானவை.தமிழில் உருவான அதிமுக்கியமான எல்லா எழுத்தாளர்களும் content writer தானே அன்றி வெற்றுக் கதைசொல்லிகள் இல்லை. புதுமைப்பித்தன்,மௌனி ,சுந்தர ராமசாமி,எம்.வி .வெங்கட்ராம் ,வண்ணநிலவன் ,அழ...