அய்யா வைகுண்டர் இதிகாசம் -24 அய்யா மனிதப் பிறப்பு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -24 அய்யா மனிதப் பிறப்பு -4 ஊர் குடிமகள் மாலையில் வந்தாள்.தகவல் சொல்லியிருந்தார்கள்.நாள் வேலைக்கு சென்று திரும்பி அவள் வந்து சேர வேண்டும்.நாவிடிச்சி,வைத்திச்சி,ஊர் குடிமகள் என்பதெல்லாம் அவள் பெயர்களே.வெளியில் வைக்கப்பட்டிருந்த சாய்ந்த மண் குடத்தில் நீரலம்பி விட்டு குனிந்தே குடிலுனுள் நுழைந்தாள்.அவளுக்கு வலியின் கறுப்பு நிறம்,வலியின் உருவம்,அவள் வருகை வலி நிறைந்ததாக எப்போதும் காணப்பட்டது.கிராமத்தின் அனைத்து வலியுணர்ச்சிகளிலும் அவள் சம்பந்தபட்டிருந்தாள்.வலியற்ற ஒரிடத்திலும் அவள் காணப்படுவதே இல்லை.ஒருவேளை வலியில்லாத இடங்களில் அவள் காணபட்டாலும் கூட அவள்தான் இவள் என்று உணரப்படுவதில்லை.வலி நிரம்பிய இடகளில் அவள் உருவம் பெரிதாக இருந்தது. வலியுணர்ச்சி அந்த காலத்தில் மிகவும் அதிகம்.வலி உண்மையே.அது அதிகமாகத் தோன்றும் காலம்.ஏனெனில் எல்லாவிதமான வலி உணர்வுகளும் மரணத்தின் சாயலில் வந்தன.ஊர் குடிமகளுக்கும் அந்த சாயல் இருந்தது.ஏற்படும் வலியிலிருந்து மரணத்தைப் பகுத்து வைக்க அவளுக்குத் தெரியும்.விருப்பும் வெறுப்பும் இல்லாதவள்.இனிமையாக பேசியபடியே கடுமையாக நடந்து கொள்வாள்.எனவே அவள் ...