இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்

முத்தாரம்மன் கோவில்கள் என்பது இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் என்னும் மக்கள் அமைப்பு முத்தாரம்மன் கோவில்களை முன்வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றியது . நானூறு, ஐநூறு ஆண்டுகாலப் பழமை கொண்டது இந்த அமைப்பு.பின்னர் தோன்றிய பல சமூக அமைப்புகளிடமும் இந்த அமைப்பின் தாக்கம் உண்டு எனினும் இதைப் போன்று அவற்றிடம் கச்சிதம் குறைவே.இந்து நாடார்கள் சமூகம்,அரசியல் ,பொருளாதாரம் ஆ கியவற்றில் மேம்பட இந்த அமைப்பு பெரிதும் உதவிற்று. முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு தோன்றுவது வரையில் கிராம தெய்வங்கள் ,வாதைகள் வழிபாடு,இசக்கி வழிபாடு போன்றவை தனிக் குடும்பங்களின் செல்வாக்கில் இருந்தவை.பெரும்பாலும் அவை இன்றும் கூட சில விதிவிலக்குகளைத் தவிர்த்து தனிக்குடும்பங்களைச் சார்ந்தே உள்ளன. முதன்முதலாக நாடார்கள் தங்கள் சமூகத்திற்குள் கண்டடைந்த ஜனநாயக பூர்வமான அமைப்பு இந்த முத்தாரம்மன் கோவில்கள்தான்.தனிக்குடும்ப ங்களின் அதிகார ஆதிக்கம்,நிலச்சுவான்தார்கள ின் தான்தோன்றித்தனம் ,திருவிதாங்கூர் மகாராஜாக்களின் வரி முகவர்களின் அத்துமீறல்கள் போன்ற தீம...