"பொன்பரப்பி "அனைவருக்கும் என்னுடைய நன்றி நன்றி

"பொன்பரப்பி " கண்டனக் கூட்டத்திற்கு வந்து எதிர்ப்புக்குரலை வலிமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி "இது இரு இரு அரசியல் தரப்பினருக்கு இடையேயான பூசல் அல்ல. இது ஆதிக்கம் கொண்ட ஒரு சாதியால் தலித் மக்களை ஒடுக்கி தாக்கி அச்சுறுத்தி வைத்திருப்பதைக் காட்டும் நிகழ்வு. அந்த ஒடுக்குமுறைக்கு எதிரானது இக்குரல். உண்மையான பிரச்சினை இந்தத் தாக்குதல் அல்ல . இப்படி தாக்கும் நிலையில், கைவிடப்பட்ட சூழலில் அந்த மக்கள் வைக்கப்பட்டிருப்பதே" - ஜெயமோகன் ஒருவார கால அவகாசத்திற்குள் நண்பர்களை ,கவிஞர்களை , எழுத்தாளர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்பது கடினமான பணி.எனினும் இத்தகைய பணிகளை அவகாசம் எடுத்து தள்ளிப் போடவும் முடியாது அழைத்த நண்பர்களில் பலர் இக்கட்டான வேலைகளில் இருந்தார்கள் .லீனா மணிமேகலை ஒரு படத்திற்காக சிறைக்காட்சிகளை படம் பிடிக்க குறிப்பிட்ட தினத்தில் நேரம் ஒதுக்கியிருந்தார். தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் வேலைகளால் உடல்நலம் பாதிப்புற்றிருந்தார்.சோ.தர்மன் ,கோணங்கி ஒவ்வொருக்கும் வேறு வேறு பணிகள் இருந்திருக்கும் நிச்சயமாக .ஜெயமோகன் ஊட்டி முகாமிற்கான வேலைகளில் இருந்தார்.குறிப்ப...