"பொன்பரப்பி"எழுத்தாளர்கள் -கலைஞர்கள் கூட்டறிக்கை

எதற்காக பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலைக்  கண்டனம் செய்கிறோம்  ?

[ இவைதான் காரணங்கள்.உங்களுக்கும் இதில் ஒப்புதல் இருக்குமெனில் நீங்கள் பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்கள் கண்டன கூட்டத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் நீங்கள் இருப்பினும் கூட ; இப்பதிவின் கீழே உங்கள் பெயரினை கருத்தில் தெரியப்படுத்துங்கள்.வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. கூட்டறிக்கையில் உங்களையும் சேர்த்துக் கொள்கிறோம் ]

பொன்பரப்பி  தலித் குடியிருப்புகள் மீதான தாக்குதலை கண்டித்து
எழுத்தாளர்கள் -கலைஞர்கள் கூட்டறிக்கை

நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டிலுள்ள பொன்பரப்பி
என்கிற கிராமத்தில் இரு கட்சிகளுக்கிடையிலான மோதல் ;தலித்
குடியிருப்புகளை கூட்டமாகச் சென்று தாக்குவதில் சென்று
முடிந்தது.தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் குழந்தைகள்,முதியவர்கள்
செய்வதறியாது பரிதவித்தனர் . கூட்டமாக சென்று குடியிருப்புகளை தாக்குவது
என்பது வெறும் தேர்தல் கலவரமாகக் கொள்ளத் தக்கதன்று.மேலாதிக்க சாதியினர்
தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிறுவி தலித்துகளை அச்சத்தில் உறைய வைக்க
காலம்காலமாக மேற்கொள்ளும் கீழ்த்தரமான முறை இது.

தலித்துகளை உளவியல் அச்சத்திற்குள்ளாக்கும் ஒரு முறை இது.தலித்
ஒடுக்குமுறையின் பிரதானமான அம்சம் இந்த உளவியல் அம்சமாகும்.வன்னியர்கள்
தொடர்ந்து இந்தவகையிலான தாக்குதலை தலித்துகள் மீது நிகழ்த்தி
வருகிறார்கள்.இதனை சிவில் சமூகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது
என்பது தலைகுனிவையும் ,அவமானத்தையும் ஏற்படுத்துகிற தீமை நிறைந்த
காரியமாகும்.எழுத்தாளர்களாகிய கலைஞர்களாகிய நாங்கள் இதன் காரணமாகவே இந்த
தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.எந்த தரப்பிலும் வருங்காலங்களிலும்
இத்தகைய அநாகரீகமான குடியிருப்புகள் மீதான தாக்குதல் சம்பவங்கள்
நடைபெறுதல் கூடாது.அரசாங்கம் அதற்குரிய நடைமுறைகளை வெளிப்படை தன்மையுடன்
சரியாகச் செய்ய வேண்டும்.

தவறாக வழிநடத்தப்படும் மேலாதிக்க சாதியை சார்ந்த இளைஞர்கள்  அறியாமையில்
,கல்வியில் அனைத்திலும் அற வீழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பதை இத்தகைய
தாக்குதல் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.மேலாதிக்க சாதிகளின்
தலைவர்களால் அவர்கள் சுய நலன்களுக்காக அவர்கள் தூண்டிவிடப் படுகிறார்கள்.
அவர்களுக்கு ஆற்றுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஆகும்.

காவல் துறைக்கோ,  ராணுவத்திற்கோ கூட கூட்டாகச் சென்று
சிவில் குடியிருப்புகளைத் தாக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது எனும்
போது இந்த மேலாதிக்க சாதி அப்பாவி இளைஞர்கள் ;தங்கள் சாதிக்கு  தாக்குதல்
நடந்தும் அதிகாரம் இருப்பதாக  கருதிக் கொள்ளுவதை தடுக்க அரசாங்கமே
பொறுப்பெடுக்க வேண்டும்.

சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் நிறைய உள்ளன.மேலாதிக்கச் சாதிகள் இத்தகைய
கூட்டு தாக்குதல்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு சட்டத்தின் மூலமாக
அதிகபட்ச தண்டனைகள் வழங்க வேண்டும்.இத்தகைய தாக்குதல்களுக்கு அரசாங்கமும்
பொறுப்பு என்பதால் பாதிக்கப்படுபவர்களுக்கான இழப்பீடுகளும் சமரசங்கள்
இன்றி அதிகப்படியானவையாக இருத்தல் அவசியம்.

நடைமுறையில் இத்தகைய மேலாதிக்க சாதியினரின் ,இடைநிலை சாதியினரின்
தலித்துகள் மீதான அனைத்து வகையான தாக்குதல்களின் போதும், அரசு
தலித்துகளுக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கிறது என்பதே உண்மை. இதற்கு
இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று பெரும்பாலும் இன்றைய அரசு அதிகாரம் என்பது
இடைநிலை சாதிகளின் அதிகாரமாக உள்ளது.இதனால் அரசு அமைப்புகளும் ஆதிக்கம்
செலுத்துவோருக்கே சாதகமாக செயல்படுகிறது.

இரண்டாவதாக அரசியல் தலையீடுகள் இல்லாத நிலையில் கூட காவல் நிலையங்களில்
அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மை சாதியினரே அல்லது,ஆதிக்க சாதியினரே அதிக
எண்ணிக்கையில் காவலர்களாக பணிபுரிகிறார்கள்.தங்கள் சொந்த சாதிய பார்வைகளே
அவர்களிடம் இதுகாறும் செயல்படுகிறது.இது குறித்து இதுநாள் வரையில்
அவர்களுக்கு போதிய கல்வியோ ,வழிகாட்டுதல்களோ அரசால் வழங்கப்பட்டதில்லை.

மூன்றாவதாக அரசியல் தலையீடுகள் காரணமாக மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்கள்
இதுபோன்ற விஷயங்களில் முடக்கப்படுகிறார்கள்.ஒரு தலைப்பட்சமாக  அதன்
காரணமாக செயல்படுகிறார்கள்.

முடிவாக எழுத்தாளர்களாக ,கலைஞர்களாக நாங்கள் இந்த அரசையும் ,மக்களையும்
கேட்டுக் கொள்ள விரும்புவது ...

1 .பொன்பரப்பி தலித்  குடியிருப்புகளின் மீது தாக்குதல் நடத்திய வன்னிய
சாதியை சார்ந்த இளைஞர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு  சட்டத்தின்
முன்பாக நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக வேண்டும்   .

2 தலித்துகள் மீதான ஆதிக்கசாதிகளின் தாக்குதல்கள் மேலும் நடைபெறா வண்ணம்
அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

3  பொன்பரப்பி தலித் குடியிருப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்ட
குழந்தைகள்,முதியவர்கள் ,பிறர் என அனைவருக்கும் அதிகபட்ச இழப்பீடுகள்
செய்ய வேண்டும்.வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட
வேண்டும்.

4  இதுபோன்ற வழக்குகளில் அரசு,அரசியல் தலையீடுகள் மிகவும் அநாகரீகமானவை
.சட்டம் வெளிப்படை தன்மையுடன் சரியாக செயல்பட அரசே இடையூறாக நிற்கக்
கூடாது.

5  சாதி மேலாண்மை மனோபாவத்துடன் நடத்தப்படுகிற தாக்குதல்கள் அனைத்துமே
தீண்டாமைக்கு குற்றங்களே ...கடுமையான தண்டனைகள் மூலம் இத்தகைய தீண்டாமை
குற்றங்கள் நம்மில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படுதல் வேண்டும்.

கையெழுத்துக்கள்

1

நாஞ்சில் நாடன் [ சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ]

2

லக்ஷ்மி மணிவண்ணன் [ சிலேட் சிற்றிதழ் ஆசிரியர் ]

3

அசதா


- - -




நிகழ்வு பற்றிய விபரம்

"இப்புவியே
தன் பிரத்யட்ச தரிசனமெனக் கண்டு
பாடப்படுகிறது
பாடல்"
- தேவதேவன்

"பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து"
எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,ஓவியர்கள் கண்டனக் கூட்டம்

நாள் - 27 -04 -2019
இடம் - அம்பேத்கர் திடல் ,நூறடி சாலை ,அசோக் நகர் ,[ லக்ஷ்மன் சுருதி அருகில் ],சென்னை

காலை பத்து மணி முதல் ஓவியர்கள் பொன்பரப்பி குறித்த ஓவியங்களை அங்கேயே வரைந்து காட்சிப்படுத்துகிறார்கள்

மாலை - சரியாக 4 மணி முதல் 9 மணிவரையில்
எழுத்தாளர்கள்,கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டனக் கூட்டம்

தீபம் ஏற்றுதல் -
நிகழ்வு ஒருங்கிணைப்பு - லிபி ஆரண்யா

தலைமை - ஓவியர் சந்ரு அவர்கள்
வரவேற்புரை - லக்ஷ்மி மணிவண்ணன்
கூட்டறிக்கை வாசித்தல் - அசதா

காலத்தின் சாட்சிகளாக பங்கேற்கும் கலைஞர்கள்

ஜெயமோகன்
சாரு நிவேதிதா
கோணங்கி
தமிழச்சி தங்கபாண்டியன்
லீனா மணிமேகலை
சோ.தர்மன்
ராமானுஜம்
V.சிவராமன்
வெளி .ரங்கராஜன்

ஷங்கர்ராம்சுப்ரமணியன்
கண்டராதித்தன்
சபரிநாதன்
வாஸ்தோ
ரெங்கையா முருகன்
தளவாய் சுந்தரம்
அதீதன்
வே.நீ .சூர்யா
பெரு.விஷ்ணுகுமார்
ராம்தாஸ் சென்றாயன்
ரோஸ் ஆன்றா
கார்த்திக் நேகா
செந்தூரன் ஈஸ்வரநாதன்

நிஷா மன்சூர்
ஜெயக்குமார் மண்குதிரை
வேடியப்பன்
சுகுணா திவாகர்
அரச முருகபாண்டியன்
ஆகாசமுத்து

வெற்றி சங்கமித்ரா
யாழன் ஆதி
வெண்ணிலவன்

பிரசன்னா ராமசாமி
தயாளன் சண்முகம்
பாக்கியம் சங்கர்

மற்றும் பல எழுத்தாளர்கள்,கலைஞர்கள்

நன்றி - கௌதம சன்னா

Comments

  1. தலித் மீது தாக்குதல் நடத்திய வன்னிய சாதி இளைஞர்கள் சட்டத்தின் முன் நிறுத்துங்க தப்பில்லை..

    அந்த வன்முறையை தூண்டிய தலித்துகள் பற்றி உங்க திருவாயை ஏன் திறக்கல????

    உங்க வன்மம் வன்னியசாதி மேலயும் தலித் மேல துளியும் கரிசனமும் இல்லையே!

    இந்த பிழைப்பு தேவைதானா???

    இதற்கு பெயர் நடுநிலையா!

    ஊனமுற்ற எழுத்தாளர் கவிஞர்கள் ஓவியர்கள் கூட்டமா இது!???

    ReplyDelete
  2. என் காத்திரமான ஆதரவைத் தெரிவிக்கிறேன்.
    ச.வை.சுப்ரமணியன்.
    சிவகாசி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"