"பொன்பரப்பி "அனைவருக்கும் என்னுடைய நன்றி நன்றி

"பொன்பரப்பி " கண்டனக் கூட்டத்திற்கு வந்து எதிர்ப்புக்குரலை வலிமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி

"இது இரு இரு அரசியல் தரப்பினருக்கு இடையேயான பூசல் அல்ல. இது ஆதிக்கம் கொண்ட ஒரு சாதியால் தலித் மக்களை ஒடுக்கி தாக்கி அச்சுறுத்தி வைத்திருப்பதைக் காட்டும் நிகழ்வு. அந்த ஒடுக்குமுறைக்கு எதிரானது இக்குரல். உண்மையான பிரச்சினை இந்தத் தாக்குதல் அல்ல . இப்படி தாக்கும் நிலையில், கைவிடப்பட்ட சூழலில் அந்த மக்கள் வைக்கப்பட்டிருப்பதே"

- ஜெயமோகன்



ஒருவார கால அவகாசத்திற்குள் நண்பர்களை ,கவிஞர்களை , எழுத்தாளர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்பது கடினமான பணி.எனினும் இத்தகைய பணிகளை அவகாசம் எடுத்து தள்ளிப் போடவும் முடியாது

அழைத்த நண்பர்களில் பலர் இக்கட்டான வேலைகளில் இருந்தார்கள் .லீனா மணிமேகலை ஒரு படத்திற்காக சிறைக்காட்சிகளை படம் பிடிக்க குறிப்பிட்ட தினத்தில் நேரம் ஒதுக்கியிருந்தார். தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் வேலைகளால் உடல்நலம் பாதிப்புற்றிருந்தார்.சோ.தர்மன் ,கோணங்கி ஒவ்வொருக்கும் வேறு வேறு பணிகள் இருந்திருக்கும் நிச்சயமாக .ஜெயமோகன் ஊட்டி முகாமிற்கான வேலைகளில் இருந்தார்.குறிப்பிட்ட தினத்திற்கு முன் தினம் அவருடைய அத்தையும் காலமானார்.அங்கே இறுதிச் சடங்குகள் வரையில் இருந்தாக வேண்டிய நிலை.எனது எத்தகைய சொந்த அவசியத்திற்காக என்றாலும் இத்தகைய சூழ்நிலைகளில் எவரையும் வற்புறுத்தியிருக்க மாட்டேன்.இங்கு வந்து சேர்ந்த பலர் இடர்பாடுகளைக் கடந்து வந்தவர்களே.எனக்கு இரு தினங்கள் கடையை அடைக்க வேண்டியிருந்தது.அத்துடன் வருவதற்கு விருப்பம் இருந்தும் கையில் பணம் இல்லாதிருப்போரே மிகவும் முக்கியமானவர்கள்.அப்படியானவர்கள் இத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும் குறைந்தது பத்துபேரேனும் இருப்பார்கள்.அவர்கள் எந்த ஊரிலிருந்து கிளம்பினாலும் அவர்கள் ஊர் திரும்புகிற வரையில் அவர்களின் திசையில் நம்முடைய ஒரு கண் இருக்க வேண்டும்.இப்படி பல நடைமுறை சிரமங்களைக் கடந்தே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

தவிர தலித் மக்களுக்கு ஆதரவான இந்த பொன்பரப்பி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதன் காரணமாக ஏராளமான வசைகளை நண்பர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன்.பெரும்பாலும் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தடுக்கப்பட்டார்கள்.போகாதீர்கள் என கடுமையான ஆலோசனைகள் கேட்கப் பெற்றார்கள்.வசைகளை பொறுத்தவரையில் சாதீயவாதிகளின் வசைகள் தான் என்றில்லை.சகல தரப்பினரின் வசைகளை அவர்கள் சந்தித்தார்கள்.சிலருக்கேனும் உண்மையின் நிறம் எத்தைகையது என்பது இதன் மூலம் புரிந்திருக்கக் கூடும்.இவையனைத்திதையும் கடந்தே அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.எல்லோருக்கும் அதற்காக இருகரம் கூப்பி என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய குரல்கள் ஒருமித்து ஒலித்ததில் வெட்கி நாணி தலைகுனிந்து நிற்கிறார்கள்.அவர்கள் தூக்கியெறிந்த அத்தனை வசைகளையும் பூக்களாக மாற்றியிருக்கிறோம்.இது மிகப் பெரிய வெற்றி

அனைவருக்கும் என்னுடைய நன்றி நன்றி 






Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"