Posts

Showing posts from September, 2017

பெருந்தேவியின் இரண்டாம் தரிசனம்

Image
பெருந்தேவியின்  இரண்டாம் தரிசனம்  வாழ்வின் மீது அபத்தத்தின் ரசம் எந்த பதுங்கு குழியிலிருந்து  வந்து தெறிக்கிறது  என்பதை கணிக்க முடியவில்லை.அபத்தத்தின் கசந்த ருசியை அல்லது வெளிறிய அதன் தோற்றத்தை  கவிஞன் கண்டடையும் விதம் ஒரு பொது நெருக்கடியாக மாறும் தன்மை கொண்டிருக்கிறது.பெருந்தேவியின் "பெண் மனசு ஆழம்  என   99 .99  சதவிகித ஆண்கள்  கருதுகிறார்கள் "என்னும் புதிய கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அபத்தத்தின் நிறம் கொண்டவையாக இருக்கின்றன. மொத்த வாழ்வும் அபத்தமாக மாறியிருப்பதை அதன் நுண் தளத்தில் வைத்து பெருந்தேவி இந்த  கவிதைகள் மூலம் கண்டடைந்துள்ளார்.அபத்தத்தின் நடனத்தில் பெண் உடலும் சக்கையாகி வெளிறி  மிதப்பதை  இந்த கவிதைகளில் காண்கிறோம்.காமம் அனைத்து பொருட்களிலிருந்து தன்னை நீங்க எத்தனிக்கும்  கவிதைகளாக இத்தொகுப்பின்  கவிதைகள் உள்ளன.கடைசி கையறு நிலையாக அது வாழ்வின் மீது ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய விமர்சனத்தில் இருந்தும்   தன்னை விலக்கிக்  கொள்கிறது ."இறந்து விட்ட என் பெற்றோர் நானும் இறந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் ,என் காதலன் என்னை மாதாந்திர பாக்கட் நாவலென நினைக்கிறான் &

கலைஞனுடன் பயணித்தல்

Image
கலைஞனுடன் பயணித்தல் சமீபத்தில் படித்த நூல்களில் மனம் அலாதியான  உற்சாகத்தை அடைந்த நூல் ஜெயமோகனின் முகங்களின் தேசம் .ஜெயமோகன் ஒரு இடத்தையோ , பொருளையோ எட்டுவதற்கும் சற்று முன்னதாகவே அந்த இடத்தின் அல்லது பொருளின் சகல பரிமாணங்களையும் மனம் கொண்டு அறிந்து விடுகிறார்.அவர் அறிந்த பரிமாணங்களை அப்படியே அவரால் கூடுமானவரையில் சேதாரமில்லாமல் வாசகனிடத்திலும் சேர்ப்பித்து விட முடிகிறது.இப்படி வாசகன் அடைகிற அனுபவங்களை வெறும் பயண அனுபவங்கள் என்று மட்டுமே சொல்வதற்கில்லை.ஜெயமோகனின் பயண அனுபவங்கள் படைப்பனுபவங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவையாக உள்ளன. முகங்களின் தேசம் நூல் வழியாக ஜெயமோகனுடன் அவர் பிரயாணித்த இடங்களுக்கெல்லாம் வாசகனாக நாமும் இணைந்து செல்கிறோம் என்று சொல்லலாம்.ஆனால் நேரில் உடன் சென்றாலுங் கூட அடைய இயலாத அனுபவங்களை வாசிப்பில் அடைகிறோம். ஏராளமான நிலப்பகுதிகள் , ஏரிகளை கடக்கிறோம்.அவை நம்மிடம் படைப்பு வஸ்துக்களாக உருமாறிவிடுதலே இந்த நூலின் சிறப்பு .அவர் ஒட்டகத்தின் மீது ஏறி இடுப்பு இணைப்புகள் களறுவதை நம்மிடத்திலும் உணரச் செய்கிறார்.ஏரிகளின் நீலம் நம்மிடம் படிகிறது அவ்வாறே.இவையெல்லாம்  ஒரு வ