Posts

Showing posts from June, 2022

23 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
1 நான் என்னைப் பற்றி ஒன்றை நினைத்து வைத்திருக்கிறேன் அது அப்பழுக்கு இல்லாதது அது குற்றங்கள் புரியும் தவறுகள் செய்யும் பிழை புரியும் ஆனால் அமிர்தமானது ஒருவரை அழைத்தால் அங்கு நோக்கியே அழைக்கிறேன் ஒருவர் என்னைப் பிரிந்து சென்றால் அங்கிருந்தே பிரிந்து செல்கிறார் 2 ஒருவர் உயிருடன் இந்த முச்சந்தியை பார்த்துக் கொண்டு நிற்கிறார் உண்மையாகவே ஒருவர் உயிருடன் நின்று இந்த முச்சந்தியை காண்கையில் ஒரு வினோதம் நிகழ்கிறது அவர் உயிருடன் நிற்கிற வினோதம் அவர் மட்டுமல்ல இந்த முச்சந்தியும் தோன்றி நிற்கிற வினோதம். எவ்வளவு பொருள் கொடுத்தும் வாங்க இயலாத வினோதம் எத்தகைய அதிகாரத்தாலும் பறிக்க இயலாத வினோதம் அவர் வேறு எதையுமே செய்யவில்லை நின்று பார்க்கக்கூடிய வினோதத்தை நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான் தோன்றி நிறைகிறது மாபெரும் வினோதம் 3 எதிரே அமர்ந்திருக்கிறேன் ஒரு கைப்பிடியளவு முருங்கை இலைகள் கண்களில் அசைகின்றன அதுவே இப்போதைய எனது காடு அதன் மூட்டில் குழந்தை சிறுநீர் களிக்கிறாள் அதுவே இப்போதைய என்னுடைய கடல் 4 மேஜை பன்னீர் பாட்டில் நீர் எதிர்பக்கமிருந்து வருகிற விசிறியின் காற்றில் குழந்தை நடனமென அசைகிற