எல்லாரிடமும் அடிவாங்கி உதைவாங்கி முடிவில் பந்து போலாகிவிட்டார் நான் சொல்கிற விற்பனை பிரதிநிதி அங்கு உதைத்தால் அங்கு ஓடவேண்டும் இங்கு உதைத்தால் இங்கு ஓடவேண்டும் நான் உதைத்தால் இங்கும் அங்கும் ஓடவேண்டும் அவ்வளவு நெகிழும் தன்மை கூடி வந்திற்று சில இடைவெளிகளில் நின்று மேலும் கீழுமாக துள்ளி ஆடுகிறார் பாருங்கள் அது மட்டும் அவரே ஆடுவதுதான் # கடற்கரையில் தென்னைகளின் மறைவினூடாக கடந்து செல்கையில் சைட் அடிப்பது போல கடல் பார்த்து வந்தேன் இந்த கண்களால் தானே அது நிகழ்ந்தது ? உடல் திளைத்து தித்தித்தது இன்றைய கடல் தேவலோகத்துக் கடல் கண்டது தேவலோகத்துக் கண்கள் சின்னசிறிய குறு முலைபோல கடல் அலை எழும்பிச் சாட சின்னஞ்சிறிய கண்களால் நிகழ்ந்தது ஒரு அற்புதம் தேவலோகம் எங்கேயோ அல்ல இங்கேதான் இருப்பு # குழந்தையை அழைத்து கடைவீதிக்கு வந்த அப்பன் முதலில் இல்லாததை கேட்டான் ஆனால் என்னிடம் அது இருந்தது இருக்கிறது என்றேன் இருந்ததில் இல்லாததைக் கேட்டான் ஒவ்வொன்றாக எடுத்து முன் வைத்தேன் எல்லாமே இருந்தது இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா என்றான் மீண்டும் உண்டு என்றேன் இருப்பதில் இல்லாத ஒன்று வைத்துக் கொள்ளச் சொல்லி குழந்தையைத்
உடன் பிறந்தவர் - லக்ஷ்மி மணிவண்ணன் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இருக்கும். சுந்தர ராமசாமி பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றினை எதேச்சையாகப் படித்தேன்.யார் எழுதினார்கள் என்பது என்னுடைய நினைவில் இல்லை.ஆனால் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது நினைவில் தங்கியது.சுந்தர ராமசாமியின் மாணவர்கள் இருவர் ,ஒருவர் ஜெயமோகன் .மற்றொருவர் லக்ஷ்மி மணிவண்ணன் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.அப்படிகூட இல்லை.சரியாக சொல்வதாயின் ஜெயமோகன்,லக்ஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் குரு சுந்தர ராமசாமி என்று ஆங்கிலத்தில் அதில் சொல்லப்பட்டிருந்தது.யோசித்துப் பார்த்தால் சுந்தர ராமசாமி தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு துறை சேர்ந்தவர்களையும் என எடுத்துக் கொண்டால் ஐநூற்றுக்கும் அதிகமானவர்களைப் பார்த்திருப்பார்.அதில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு எங்களை ஒப்ப அணுக்கம் இருந்திருக்கும்.பிற்காலங்களில் அவரிடம் ஏராளமானோர் வந்து தங்களை புதிதாகவும் ஒட்டிக் கொண்டார்கள்.அது இயல்பானதும் தானே? அதிலிருந்து எங்கள் இருவரையுமே அந்த குறிப்பை எழுதியவரின் மனம் சேகரித்திருக்கிறது.அடையாளம் கண்டிருக்கிறது.காலம் கண்டறியும் அடையாளம் என்பது இதுதான்.