Posts

Showing posts from February, 2020

பசி கவிதைகள்

Image
பசி கவிதைகள் 1 தாலத்தை எடுத்து வையுங்கள் அம்மா பசிக்கிறது தாலத்தில் சோறினை போடுங்கள் அம்மா பசிக்கிறது பிறக்கும் முன்பிருந்தே பசிக்கும் பசி 2 ஹெல்மெற்றுக்குள் இருக்கும் நண்பனுக்கு பல சௌகரியங்கள் முகம் தெரியாது என நினைத்துக் கடந்துவிடலாம் இந்த சனியனா வருகிறான் என ஒதுங்கி விரைந்து விடலாம் தெரியவா போகிறது தெரிந்தால் தெரியட்டுமே காறியுமிழ்ந்து கடக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஹெல்மற்றுக்குள் நண்பனின் தலை வேறொன்றாக இருக்கிறது நாம் பொதுவாக அறியாத வேறொரு தலை அது எல்லா வசதியும் இருந்தும் நெளிந்து வளைந்து இறங்கி நான்தான் என்று ஹெல்மற்றை இறக்கி நின்று கொண்டிருக்கிறான் பாருங்கள் ஒரு நண்பன் அவன்முகத்தில் அவனிங்கே பிழைக்க வந்ததன் ரேகையே இல்லை ### கணநேர வித்தியாசம் 1 சிலையாக இருந்தால் கற்பனை செய்யமுடியும் நீயோ சிலையிலிருந்து வெளிவந்து ஆளாக நிற்கிறாய் கற்பனைகளை முழுவதுமாக இழந்து இழந்து முற்றிலும் கைவிடச் சொல்லிய இடத்தில் நீயாக இருக்கிறாய் இதற்கு சிலையாகவே இருந்திருக்கலாம் இந்த கற்சிலை 2 நானும் சிலையாக இருந்தேன் கற்சிலையாக

இந்துக்கள் தி.மு.கவை ஆதரிக்கக் கூடாது

Image
இந்துக்கள் தி.மு.கவை ஆதரிக்கக் கூடாது கிறிஸ்தவர்கள் வீடுகளில் பேசப்படுகிற இந்து எதிர்ப்பு வசைகளை அப்படியே மேடைகளில் கொள்கை முழக்கமாக முன்வைத்தவர்கள் தி.மு.கவினர். உள்ளடக்கத்தில் கிறிஸ்தவக் கட்சி தி.மு.க .அவர்களுடைய தற்போதைய இந்து ஆதரவு நிலைப்பாடு பாசாங்கு.வாக்கிற்கான பாசாங்கு.இந்துக்கள் இவற்றில் மயக்கம் அடையாது விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.இல்லையெனில் தற்போது அவர்கள் எடுக்கும் பாசாங்கான இந்து ஆதரவு நிலையை பின்னாட்களில் தங்கள் அரசியல் சாணக்கியத்தனத்தில் சேர்த்துக் கொள்வார்கள். சமகாலத்தில் பல கட்சிகளின் கொள்கை நிலைப்பாடுகளும் எது சார்ந்தவை என்பதெல்லாம் எல்லோரும் அறிந்தவை .எல்லோரும் நிர்வாணமாக நிற்கிற காலம் இது.தி.மு.க வை வெளிப்படையாக அது ஒரு கிறிஸ்தவ நிலைப்பாடு கொண்ட கட்சி என்று சொல்ல முடியும்.கடந்த காலங்களில் வேறுவேறு கொள்கைகள் முகமூடிகள் என்று அவர்கள் தங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள்.இன்று அனைத்தும் கரைந்து விட்டது.அனைத்து தரப்பு சாயங்களும் இன்று வேலை செய்வதில்லை.எல்லாம் வெளிப்படையாக இருக்கின்றன .தி.மு.க தன்னுடைய இரட்டைத் தன்மையிலிருந்து விடுபட வேண்டுமானால் ; அவர்கள் த