Posts

Showing posts from May, 2018

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

Image
கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து வர வேண்டிய பேருந்துகள் வரவில்லை.பின்னர் இடைகிராமங்கள் வரை சென்று கடற்கரைகளைத் தொட்டு விடாமல் திரும்பும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது.காவல் வளையங்கள். மீறி பேருந்துகளில் ஏறுகிற கடற்கரை மக்கள் காவலர்களால் இறக்கி விடப்படுகிறார்கள்.இது என்ன வகையான ஒடுக்குமுறை என்பதே விளங்கவில்லை.ஊடகங்கள் இதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றன. மணக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சரக்கு பெட்டக துறைமுக வேலைகளுக்கு எதிராக மக்கள் இன்று; மாவட்டத்து தலைநகரான நாகர்கோயிலுக்கு சென்று மனு கொடுக்கவிருக்கிறார்கள் என்பதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை.கடலோர கிராமங்களை சிறை வைக்கும் நடவடிக்கை.பொய் வழக்குகள்,தனி மனிதர்களை சிறை வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மிஞ்சும் விதத்தில் இந்த அரசின் கடலோர கிராமங்கள் சிறை வைப்பு நடவடிக்கை .அரசின் அடக்குமுறைகள் நாள்தோறும் புதுப்புது வடிவங்களை அடைந்து வருவதற்கு சான்று இந்த நடவடிக்கை.இது அப்பட்டமான மக்கள் விரோதம் என்பதில் யாத

உங்களைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்

Image
உங்களை ச்  சுற்றிலும் அமைதி நிலவட்டும் பாலகுமாரன் உதவி இயக்குனர்களைப் பற்றி ஏதோ  தவறுதலாகச் சொல்லிவிட்டார் என்று ; சேரன் தலைமையில் ஒரு சமயம் பாலகுமாரன் வீடு  நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள்.அப்போது சேரனை நோக்கி கண்ணீரோடு இருகை கூப்பித் தொழுது மன்னிப்பு கேட்கிற அவருடைய  புகைப்படம் ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.அந்த புகைப்படம் என்னை அந்த நேரத்தில் மிகவும் கதிகலங்கச் செய்தது.ஒரு எழுத்தாளன் அப்படி நிற்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது .சேரனுக்கும் பின்னர் அதுபோல பொதுவில் கதிகலங்கி கண்ணீரோடு நிற்கும் சந்தர்ப்பம் வந்தது.இரண்டினையும் இந்த சந்தர்ப்பத்தில் தொடர்புபடுத்தவில்லை . ஆனால் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு  தவிர்க்க இயலவில்லை . மறைய மறுத்து...அந்த புகைப்படமும் எனது மனதில் பதிந்திருக்கிறது.எழுதுகிறவனுக்கு இது போன்ற தண்டனைகளை சமூகம் ஒருபோதும் தரக்கூடாது.அது நிச்சயமாக நல்லதல்ல என்று நினைப்பவன் நான் . அவருடைய பக்தியெழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.எந்த பிரபல இதழிலோ, சாதாரண பக்தி அல்லது ஜோதிட இதழ்களிலோ கட்டுரைகள் வெளியாகியிருந்தாலும் கூட அவற்றில் ஒன்றிரெண்டு வர

ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள்

Image
ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள் "பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன் வனம் விட மனமின்றி காட்டுமாட்டின் ரூபத்தில் பனிப்புகை மூட்டமாய் பின்தொடர்ந்து வருகிறது சிறுபொட்டாய் எனை எடுத்து அதற்கொரு திலகமிட்டேன் நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும் இவ்வனத்தில் வனம் முளைக்கும் என் முற்றத்தில் திலகமும் வனமும் இருவேறிடங்களில் இருந்தாலும் " விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே பங்கேற்றிருக்கலாம் என்கிற எண்ணம்; இப்போது கலந்து கொண்ட போது தோன்றியது.அவ்வளவிற்குச் சிறப்பு. எவ்வளவோ காலங்களை வீண் விரயம் செய்திருக்கிறேன்.செய்திருக்க வேண்டியவற்றைச் செய்யவில்லை.இனியேனும் சில காரியங்களை செய்ய வேண்டும் என்கிற தூண்டுதலை இந்த முகாம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இந்த உளத் தூண்டுதல் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு மிகப் பெரிய படைப்பாளியின் இருப்பு எப்போதும் இலக்கிய இயக்கங்களுக்கு ;அது தனது சாரத்தில் தகுதி கொள