Posts

Showing posts from May, 2019

எனக்கு சொல் உயரத்தில் இருந்து கிடைக்கிறது

Image
எனக்கு சொல் உயரத்தில் இருந்து கிடைக்கிறது 1  இந்த சாலையிலிருந்து  அடுத்த சாலைக்கு  அனைத்தையும் மாற்றிக் கொண்டேன்  விதி விலகி  வழிவிட்டது  2  வாழ்க்கையை மாற்றிக் கொள்ளாமல்  வெறுமனே பேசிக் கொண்டிருப்பவன் பீடை  3  ஐந்தடி தூரத்தில் இருக்கலாம்  உனக்கான சுனை  4  ஊழ் நிரந்தரமாக பற்றிக் கொண்டிருப்பதில்லை  தொட்டு எடுத்து  விடத்  தெரிய வேண்டும்  அவ்வளவே   5  ஒவ்வொன்றையும் மாற்ற வேண்டும்  ஒன்றை விட்டு வைத்தாலும் அது வந்து  மற்றதை  பிடித்துக் கொள்ளும்  6  மாற்றிக் கொண்டிருப்பவனுக்கு  மட்டுமே  ஒவ்வொன்றும்  அமுதென தோன்றும்  விட்டதும் அமுதம்  பட்டதும் அமுதம்  இன்று நின்று பார்ப்பதும்  அமுதமே  7  உன்னை மாற்றி கொள்ள முடியவில்லையெனில்  எதற்காக  சித்தாந்தம் பேசித் திரிகிறாய் ? 8  எனக்கு சொல் உயரத்தில் இருந்து  கிடைக்கிறது  எழும்பி விடுகிறேன்  அடுத்த சொல் கிடைக்கும் போது  பறந்து  செல்கிறேன்  9  என் பொறுப்பு எதையும்  நான் ; என் பொறுப்பில்  வைத்துக் கொள்வதில்லை  10 

பகைவன் இல்லாத மனம் காற்றைப் போலிருக்கிறது

Image
பகைவன் இல்லாத மனம் காற்றைப் போலிருக்கிறது 1 எனக்குள்ளிருந்தான் பகைவன் அழித்தேன் வெளியிலிருந்த பகைவரெல்லாம் அழிந்தனர் அவனை கண்டறிய வயதில் பாதியாயிற்று எவ்வளவு பேர்களென ஆச்சரியமாக இருந்தது விரைவில் பகைவனைக் கண்டடைந்து விடு இளைஞனே பாதி வயது மிச்சமாகும் மீதி வயது உனதாகும் 2 உள்ளில் இருக்கும் பகைவனுக்கு முதலில் சோறு போடுவதை நிறுத்து நான்கு நாளில் ஓடிப்போவான் நீருற்றுவதை நிறுத்து இரண்டு மணிநேரத்தில் மாறி விடுவான் மூச்சுக்கு ஒருதரம் நினைப்பதை நிறுத்து கணத்தில் விலகிவிடுவான் நீ அவனை காதலிக்கிறாய் என்பது தெரிந்து நானிதை உனக்குச் சொல்கிறேன் 3 பகைவன் ஒருபோதும் உன்னைத் தேடுவதில்லை நீதான் சதா அவனைத் தேடித் கொண்டிருக்கிறாய் 4 எத்தனை பகைவன் எத்தனை பகைவன் என்பதுதானே உன் பிரச்சனை ? அத்தனை பகைவனும் ஒருவனே உன்னகங்காரன் 5 பகைவன் இல்லாத மனம் காற்றைப் போலிருக்கிறது 6 உனக்கு இரண்டு பாத்திரங்கள் உண்டு அதிலொன்று உன்னுடைய பகைவனின் பாத்திரம் 7 நீ சோறு வைத்தால் மட்டுமே எடுத்துத் தின்னும் அளவிற்கு உன் பகைவன் பலகீனமானவன் 8 பகைவன் பகைவ

பிரான்சிஸ் கிருபா விஷயம் தொடர்பாக சில விளக்கங்கள்

Image
பிரான்சிஸ் கிருபா விஷயம் தொடர்பாக சில விளக்கங்கள் இந்த விளக்கம் கவின்மலர் போன்ற நிரந்தர வெறுப்பின் தரப்பை ஒருங்கிணைத்து பாடுபொருள் தேடும் நபர்களுக்கு அல்ல.தமிழ் சூழலின் பொது வெறுப்பின் சூழலுக்கு அவர் ஒரு குறியீடு போன்றவர்.என் தொடர்பான எல்லா விஷயங்களிலும் எதிர்நிலைப்பாடு எடுத்து ஒருங்கிணைக்கும் கருத்து நிலைப்பாட்டின் குறியீடு அவரைப் போன்றவர்கள்.எவ்விதமான விளக்கங்களும் பொருள் தராத ஒரு அரியாசனம் அவர்கள் அமர்ந்திருக்கும் மேடை.அவர்கள் மீது எவ்விதமான மதிப்பும் எனக்கு இல்லை.அவர்களின் செயல்பாடுகள் அனுபவத்தில் பொருட்படுத்தும் படியானதாகவும் பெரும்பாலும் இருப்பதில்லை.என்னுடைய விளக்கம் பிரான்சிஸ் கிருபா என்னும் அரிய தமிழ் கவிஞனின் படைப்புகளை கற்று ,நடைபெற்ற சம்பவங்களில் ஆழ்ந்த துயருற்ற வாசகனுக்கானது ... ஊட்டியில் குரு நித்யா - ஆய்வரங்கில் பங்கேற்று காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு சென்று நானும் நண்பர் சூர்யாவும் திரும்பு வழியில் 5 -ம் தேதி,நண்பர் பால்முகிலிடமிருந்து அழைப்பு வந்தது .அவர் எனக்கும் நண்பர்,பிரான்சிஸுக்கும் நண்பர்.நண்பர் என்றால் வெறும் வார்த்தைக்கு மட்டும் சொல்லத் தகுந்த நண்பர் அல்

சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது

Image
சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது 1 நான் சும்மா இருக்கையில் அனைத்தும் நிகழத் தொடங்குகின்றன கொந்தளிக்கையில் அணைந்து விடுகின்றதத்தனையும் 2 ஊரையெல்லாம் அறிந்து திண்ணையில் வைக்கிற பெரியவரிடம் உங்களை அறிந்து கொண்டீர்களா என்று கேட்டேன் 3 சும்மா இருக்கையில் ஒரு நட்சத்திரம் உள்ளிறங்கிச் செல்கிறது 4 அனைத்து சந்தடிகளும் ஆசைகள் 5 சந்தடியில் சிக்கியவன் ஆற்றினைக் கடந்து செல்கிறான் சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது 6 மனித வெடிகுண்டு பேராசையின் வடிவம் 7 எத்தனை அடிபட்டாலும் கவிதையே என்னைக் கரையேற்றுகிறது 8 வெளியூர் சென்று திரும்பி குளிக்கிறேன் மொத்த வெயிலும் நீராய் இறங்கி பூமியில் மறைகிறது 9 தண்ணீரில் எவ்வளவு மறைபொருட்கள் ? 10 எல்லாம் அப்பட்டமாக வெளியே புலப்படுவது போல தான் தோன்றச் செய்கிறது மாயை 11 சும்மா இருக்கத் தெரிந்தவன் ஒரு போதும் சும்மாவே இருப்பதில்லை நான் என்னை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் ? 1 வீழ்த்த நினைக்கிறோம் என்பது வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும் அதற்குப் பெயரே யுத்த தர்மம் 2 ஒவ்வொ