Posts

Showing posts from March, 2020

கோடுகள் இணைய இதழில் வெளிவந்துள்ள என்னுடைய நேர்காணல்

Image
 லக்ஷ்மி மணிவண்ணனோடு ஒரு நேர்காணல் கேள்வி 1 - தேடல் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? படைப்பார்ந்த ஒரு செயல்பாட்டிற்குள் தேடல் என்பது என்ன ? பதில் - தேடல் என்பது அனிச்சையானது.குறி வைத்து தேட முடியாதது.குறி வைத்துத் தேடினால் அதற்கு வேட்டை என்று பெயர்.ஒருவரின் ஆர்வத்துடன் தேடல் தொடர்பு கொண்டதுதானெனினும் ; அதனை ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் என்றும் பொருள் கொள்ள முடியாது. எவ்வளவோ விஷயங்கள் நாள் தோறும் நடக்கின்றன.எவ்வளவோ விஷயங்களை தினமும் காண்கிறோம் .அனைத்தையும் ஆழ்மனது சேமிப்பதில்லை.சிலவற்றை நாம் அறியாதவகையில் ,அறியாத வடிவில் சேமித்து வைக்கிறது.பலவற்றைத் துப்பி விடுகிறது.ஒருவர் சேமிப்பவற்றை மற்றொருவரின் ஆழ்மனம் துப்பி விடுதலும் உண்டு.மற்றொருவர் துப்பி விடுவதை சேமிப்பதும் நடக்கும்.பொதுவாக மனித ஆழுள்ளத்தால் சேமிக்கப்படும் விஷயங்களும் உள்ளன.சில கனவுகளை எல்லோரும் பொதுவாகக் கண்டிருப்பார்கள்.பிரத்யேகமாக பல இருக்கும்.இவற்றை எல்லாம் ஏன் என அறிவது கடினம்.அப்படி அறிந்து கொண்டும் ஒன்றும் ஆவதில்லை.அறிந்ததாக நாம் சொல்வதெல்லாமே பெரும்பாலும் தோராயமான காரணங்கள் தாம்.அவற்றுக்கு பெரிய