Posts

Showing posts from February, 2021

மற்றது தின்றது போக

Image
  1 மற்றது தின்றது போக ஆமைக் குஞ்சில் ஆயிரத்தில் ஒன்று தேறும் மற்றது தின்றது போக பறவைக் குஞ்சில் நூற்றில் பத்து தேறும் விலங்கில் பத்தில் ஒன்று வாழ்வது வீடெனில் விதிவசம் தானே தின்றது போக மனிதனுக்கு லட்சத்தில் ஒன்று தேறும் மீதம் நீறும் 2 ஆடுகடித்து காயம் பட்ட சரக்கொன்றையை மிசுறு எறும்புகள் கூடி காப்பாற்றுகின்றன ஒரு காரணத்திற்குள் ஒன்று ஒன்று மற்றொன்று என நீள்கிறது யாத்திரை யாருடைய காரணத்திற்காகவோ நீங்கள் என்னுடைய காரணத்திற்காக அவர் அவருடைய காரணத்திற்காக மற்றொருவர் என ஒரே பொதிதான் பிரிக்க பிரிக்க பொதி பொதியாக வருவது 3 உடல் விடர்த்து தளிர்க்கும் அரசமரம் மரத்தின் எலும்புக்கூடென நிற்கிறது அதன் மேல் அமர்ந்திருக்கும் காகங்கள் கிளிகள் கொக்குகள் அரசின் கனிகள் போல தொங்குகின்றன அடுத்த பருவம்இவை உதிர்த்து பச்சயம் பூக்கும் எல்லாமே வெட்ட வெளியில் நடக்கின்றன ஒளிவு மறைவு என்று ஒன்றுகூட இல்லை பிரதான சாலையோரம் இது 4 இருக்கும் போதே இறந்தவன் இறந்து போனான் உதிர்ந்த மாலைகள் கொண்டு அவனுடைய தேர் அலங்கரிக்கப்படுகிறது. புதிய புதிய மாலைகள்தாம் ஏனிப்படி உடனுக்குடன் உதிர்கின்றன ? விழாக்களுக்கு அவன் வந்து செல்லும் ப

நினைவின் தாய்க்கோழி

Image
நினைவின் தாய்க்கோழி இதோ இங்குபேட்டரில் அடைகாக்கபட்ட குஞ்சுகள் இரைபிடிக்கின்றன யாரும் சொல்லித் தரவில்லை யாரும் பாதுக்காக்கவில்லை கால்களால் தரையை கிளறுகின்றன அபாய அனக்கங்களுக்கு நின்று சிணுங்குகின்றன எல்லாமே செய்கின்றன தாய்க்கோழி சற்று தள்ளி நிற்குமோ என தோன்றும் படி நடக்கின்றன இங்குபேட்டருக்குப் பிறந்த கோழிக்குஞ்சுகள் கிருஷ்ணபருந்து நோட்டமிடுகையில் சுழன்று சிதறி பதுங்கி உருவான கலவரத்தில் தாய்க்கோழியின் சத்தமும் எங்கிருந்தோ கேட்பதுபோலத்தான் இருக்கிறது நினைவின் தாய்க்கோழி ### இரண்டுபேராக நின்றார்கள் ஒருவர் அறிமுகம் இல்லாதவர் கைகளை அசைத்து வணக்கம் என்றேன் அறிமுகமற்றவர் கைகளை அசைத்து வணக்கம் சொன்னார் எனினும் அவரில் நமக்குதானா ? என்கிற எண்ணம் தலைதிருப்பி அறிமுகமுள்ளவரை பார்த்தார் அவரிடம் அசைவில்லை அப்படா தப்பித்தோம் என்றிருந்தது நடுங்கி நின்ற வணக்கத்திற்கு ### பருவம் ஒவ்வொரு வாசலாகத் திறந்து செல்லும் ஒருவழிப்பாதை ஐம்பது வயது வரையில் சமதளத்தில் அதன் வாசல்கள் திறக்கின்றன ஐம்பதிற்கு பிறகு அதன் வாசல் நீருக்குள் திறக்கிறது மங்கி தெரிந்தவை தெளிவாக தெளிவானவை மங்கலாக நீருக்குள்ளும் அமைகின்றன இறுதிவா