Posts

Showing posts from September, 2018

முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

Image
முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு கிறிஸ்தவ மதம் வேறு கிறிஸ்தவக்   கருத்தாக்கம் என்பது வேறு .கிறிஸ்தவ மதம் என்பது கிறிஸ்தவராக மதம் மாறியவர்களை பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்யக் கூடியது.கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது அனைத்து துறைகளையும் தன்னுடைய கருவிகளால் மேலாண்மை செய்யவும் ,மூழ்கடிக்கவும் திறன் கொண்டது.இந்திய முற்போக்குகள் பெரும்பாலும் அருந்ததி ராய் உட்பட ,ரொமீலா தாப்பர் உட்பட கிறிஸ்தவக் கருத்தாக்கங்களை தங்களுடைய உள்ளடக்கமாகக் கொண்டவர்கள்.இந்திய இடதுசாரிகள்,பகுத்தறிவுவாதிகள் அனைவரும் இந்த கருத்தாக்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களே.அதிலும் குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் சிக்கியிருப்பவர்கள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.இங்குள்ள அதிரடி முற்போக்குகள் பலருக்கும் இப்படித்தான் சிக்கியிருக்கிறோம் என்பது கூட விளங்குவதில்லை. பிராங்பர்ட் மார்க்சியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.உதாரணமாக இந்தியாவில் அஜீஸ் நந்தி , டி.ஆர் .நாகராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம்.துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இங்கே மார்க்சியர்களாகவே கருதப்படுவதில்லை.அஜீஸ் நந்தி ஓரிடத்தில் வெளிப்படையாகவே இந்த குறையை சுட்டிக் காட்ட

தாமிரபரணி புஷ்கரம் கவிதா நிகழ்வு

Image
தாமிரபரணி புஷ்கரம் கவிதா நிகழ்வு சந்ரு மாஸ்டர் ஒருங்கிணைப்பில் அக்டோபர்  - 10  பாபநாசத்தில்  நடைபெறுகிறது.பத்து நாட்கள் விழாவாக நடைபெறும் இவ்விழாவில் அக்டோபர் -10  கவிஞர்கள் தாமிரபரணியைப் பாடும் நிகழ்வு பகல் பன்னிரண்டு மணிக்கு நடைபெறும்.கவிஞர்கள் யார் வேண்டுமாயினும் வந்து இந்நிகழ்வில் தாமிரபரணியைப் பாடலாம் . நீள் கவிதையாக ,புதிய முயற்சியாக தாமிரபரணியை எழுதிப்பார்க்க இது ஒரு வாய்ப்பு என கவிஞர் கண்டராதித்தன் வர ஒப்புக் கொண்டிருக்கிறார்.நானும் கண்டராதித்தனும் இந்நிகழ்வில் பங்கேற்கிறோம். தாமிரபரணியை பாட கவிகள் யார் வேண்டுமாயினும் வாருங்கள் .எங்களுக்கு சாதி ,சமய,பால்,அரசியல் வேறுபாடுகள் உட்பட ஏதுமில்லை. தங்குவதற்கும் ,கலந்துரையாடலுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்பிற்கு இந்த எண்ணில் அழைக்கவும் - 9362682373

என் சாமிதான் .என் குருதான் . ஆனால் எனக்கு மட்டுமல்ல

Image
என் சாமிதான் .என் குருதான் . ஆனால் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சந்திப்பின் போதும் அகம் புதிதாய் இருக்க முயன்று கொண்டே இருப்பார் சுந்தர ராமசாமி.ஒருவாரத்திற்கும் முன்புதான் பார்த்திருப்பீர்கள் , அடுத்த வாரத்தில் பார்க்கும்போது முந்தைய வாரம் பார்த்தவர் போல் இல்லையே எனத் தோன்றும்படி செய்வார்.ஒரு புத்தகத்தைப் பற்றியோ,ஒரு நபரைப் பற்றியோ,ஒரு இடத்தை பற்றியோ,ஒரு விந்தையை பற்றியோ புதிதாக ஏற்படுத்துவார்.அவரை அலங்காரப் பிரியன் எனலாம்.அலங்காரம் என்பது பௌடர் அதிகம் பூசிக் கொள்வதல்ல.அகத்தை அழகு குன்றாமல் பார்த்துக் கொள்வது.புதுப்பிக்க , ஏற்க மனம் கொண்டிருப்பது. வயது வித்தியாசம் உட்பட பேதங்கள் எதுவும் அவரிடம் கிடையாது.பழகும் ஒவ்வொருவரைப் பற்றியும் சித்திரமாக அவருக்குத் தெரியும்.அவர்கள் அவரிடம் பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட விஷயங்களில் அவற்றின் இன்றைய நிலை என்ன என்பது பற்றி ,அவற்றில் உண்மையான அக்கறை கொண்டு நினைவு கொண்டிருக்கவும்,விசாரிக்கவும் தவறுவதே இல்லை.தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள பிறரை வற்புறுத்துவதைக் காட்டிலும் பிறரைக் கூடுமானவரையில் புரிந்து கொள்ளமுயலும் விரிந்த காது கொண்டவர் அவர