Posts

Showing posts from July, 2022

நாடார்களின் முத்தாரம்மை வழிபாடு

Image
நாடார்களின் முத்தாரம்மை வழிபாடு   குமரிமாவட்ட நாடார்கள் முத்தாரம்மன் கோயில்கள் வழியாகவே ஊர் நிர்வாகம் என்கிற அமைப்பைக் கண்டடைந்தார்கள்.ஏகதேசமாக ஊர் நிர்வாகமும் முத்தாரம்மன் வழிபாடும் ஒரே சமயத்தில் நாடார்களிடம் தோற்றம் கொண்டவை.எதுவானாலும் ஊர் கூடி முடிவெடுப்பது என்கிற முறை உருவானது.ஊர் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்று ஆனது.தனிமுடிவுகளுக்கும் கூடி எடுக்கிற முடிவுகளுக்கும் அதிசயிக்கத் தக்கவிதத்தில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டென்பதை எகதேசம் அனைத்து நாடார்களும் அறிந்து கொண்டார்கள் வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட நாட்டாமை முறைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.ஒருவிதத்தில் சொன்னால் நாட்டாமை முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு இது என்று சொல்லலாம்.பணம் ,அதிகாரம் போன்றவற்றின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பபடி ஊர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். தொல்குடிச் சடங்குகள் மட்டுமே ஒரு சமுகத்திற்கு போதுமானதல்ல என்கிற கூட்டுணர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்திற்குள் நாடார்கள் நகர்ந்தார்கள். ஊர் அம்மன் கோயில்கள் உருவாக்கம் அதற்கு வழி செய்தது. தொல்குடிச் சடங்கு