Posts

Showing posts from November, 2021

எனக்குச் சொல்ல உள்ளவை - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
எனக்குச் சொல்ல உள்ளவை - லக்ஷ்மி மணிவண்ணன் 1 நான் வெளியுலகத்திலிருந்து வந்திருக்கிறேன் விருந்துண்ண வந்திருக்கிறேன் வாய்த்த உடல் முதல் விருந்து வாய் வைத்த முலை இரண்டாவது விருந்து வாய்த்ததோர் உலகு மூன்றாவது இத்தனைக்கும் அது பெரிய உலகத்துக்குள் உள்ள சின்ன உலகம் சிறு குமிழ் வடிவம் அதுவுடைந்தால் நானுடைவேன் நானுடைந்தால் அது உடையும் அத்தனைக்குச் சிறிது ஆனால் அதனுள் இருப்பதோ எனது பந்தி பெரிதினும் பெரிது 2 தின்று போட்ட மீதி போல கிடந்தார் மரக்கறிக்கடை பலவேசம் ஏனிப்படி ? காய்ச்சல் குணமாகும் உடல் தேறும் அத்தனைக்குக் கடும் அறிகுறி ஏதுமில்லை தின்று போட்ட மீதம் ஆனது என்னவாகும் ? யார் தின்று இப்படியெறிந்தார்கள் மனைவியா மக்களா சமூகமா அண்ணன் தம்பிகளா யார் எறிந்திருந்தாலும் இப்படித்தானே ஆகும் ? வெடுக் வெடுக் என மனைவியின் சொற்கள், புறந்தள்ளும் மகளின் வார்த்தைகள் தின்றுபோட்ட இலையை நாய் இழுப்பது போலும் உணர்வு படுத்திருக்கிறார் பலவேசம் பேச்சு மூச்சில்லை காய்ச்சல் இன்றோ நாளையோ குணமாகி விடும் எந்த மாற்றமும் இல்லை 3 அவளுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு அவனை அழித்துக் கொண்டான் அவனுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு அவளு