Posts

Showing posts from April, 2021

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

Image
  கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இங்குள்ள லிபரல்ஸ் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.அதற்குரிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்துவார்கள்.கோவிட் தொற்றும் அதற்கு விதிவிலக்கில்லை.அவர்கள் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளையும் சிறுமை செய்பவர்கள்.ஊடகங்களில் ,கட்சிகளில் என்று இன்று நிறைந்திருப்பவர்கள்.இன்று அவர்கள் தமிழ் நாட்டில் அதிகாரத்தின் ஆயிரம் கரங்கள் கொண்டவர்கள்.பிழைப்பு உடன்பாடு கொண்டவர்கள்.அசுரர்கள். அவர்கள் எழுப்புகிற வாதங்களை மனதில் கொண்டு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் இராதீர்கள்.அவர்கள் நள்ளிரவுகளில் சென்றேனும் எடுத்துக் கொள்வார்கள்.அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் எடுத்துக் கொண்டாயிற்று.மீதம் பேர் வரிசையில் நிற்கிறார்கள்.அவர்களைக் காது கொடுத்து நீங்கள் ஏமாந்து போகாமலிருங்கள்.ஏனெனில் இது உங்களுடைய ,என்னுடைய உயிர் சம்பந்தபட்ட விஷயம். கோவிட் தொற்று பற்றி நிபுணர்கள் மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.ஆனால் நம் காதுகளில் அது வந்து சேருவதற்கு முன்னரே லிபரல்ஸ் உண்டாக்கும் குழப்பங்கள் நம்மை வந்தடைந்து விடுகின்றன.தடுப்பூசிகள் வருவது வரையில் இந்தியா ஒரு நாடா ? எப்போது தடுப்பூசிக

14 கவிதைகள்

Image
  1 ஒரு காலத்தில் உன்னைப் போலவே இருந்திருக்கிறேன் முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறேன் ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன் சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன் தெய்வங்களையெல்லாம் நிந்தித்திருக்கிறேன் போவோர் வருவோரையெல்லாம் தாக்கியிருக்கிறேன் அடியாரை அடித்திருக்கிறேன் உடன் ஒருவன் இருந்தால் போதும் சாமியைத் தோள் எட்டி மிதித்திருக்கிறேன் எதற்கும் முயற்சித்ததில்லை எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் ஒருகாலத்திய கலகக்கடவுள் நானிருந்த இடத்தில் நீ வந்து முளைத்திருக்கிறாய் அப்படியே உனக்கு என் வாலிப முகம் அதே ஆற்றல் அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது முற்போக்கு கலகமுகம் கழுவி வீட்டு நெல்லி மரத்திற்கு தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி முதலில் இருந்து புறப்பட்டு களத்திற்கு வந்து சேர நான்கு கடல் தூரம் இருக்கிறது தாங்குவாயா தம்பி ? 2 எட்டு மரப்பலகைகள் கொண்ட கடை நீலவேணி அக்காவுடையது வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள் குளிர்ந்த பானை மோர் சுற்றுப் பீடிகள் சுருட்டு வெம்மை சாலை சிறுக சிறுக உயர்ந்ததில் திண்ணை இரண்டடி பள்ளத்தில் மாட்டிக் கொண்டது நீலவேணி அக்கா பாதி உயரத்தில் நின்று தெரிகிற