Posts

Showing posts from June, 2020

வெளியிலிருந்து உள்ளே ஓடி விடலாம்

Image
ஊழ் வினை இன்றி வியாதியில்லை 1 யாருக்கும் நோயென்று ஏதுமில்லை யாருக்கும் மருந்தென்றும் ஏதுமில்லை நோய்க்குத் தக்க மனம் மனதிற்கு தக்க மருந்து வியாதி அனைத்தும் ஊழ்வினை தானே 2 வினையறுபட்டால் வியாதி விடுபடும் 3 சந்தனக் குடமெடுத்தாலும் உன் வினை வேறொருவன் தோளுக்கு இடம் மாறுவதில்லை 4 உடல் ஒத்துழைப்பது அது ஏறி அமர்ந்திருக்கும் மனதினைப் பொறுத்தது 5 மனம் குப்பையானால் உடலது குப்பைக் கூடை 6 தனித்து வந்து தாக்கினாலும் சரி கூட்டமாய் வந்து தொற்றினாலும் சரி ஊழ் வினை இன்றி வியாதியில்லை ### 2  அந்தச் சிறுவன் அப்படி ஏங்கி நிற்கிறான் எவ்வளவு உயரம் என்று பார்க்கிறான் நீங்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறீர்கள் இதுவே உயரமென்றால் அவன் எவ்வளவு பள்ளத்திலிருக்கிறான் பார்த்தீர்களா ? அவன் இரண்டுமாடி போட்டுவிட்டான் இவன் கார் வாங்கியாச்சு புனித அன்னை பத்துநாள் திருவிழாவில் பத்து நாளும் புதுத்துணி வாங்குகிறார்கள் இந்தத் தெருவில் எப்படி வாழமுடியும் ? சொல்லுங்கள் அண்ணா என்று கேட்கிறான் எந்த வேலை வேண்டுமாயினும் இருக்கட்டும் முதலில் இச்சிறுவன் பார்க்கும் உயரம் குறைத்து பள்ளம் நிரப்புங்கள் ஆண்டவரே அவன் இடம்பெயருவதைப் பற்றிகூட ஒன