Posts

Showing posts from November, 2018

எவ்வளவு செலவு ?

Image
கேட்கவே மாட்டான் கவிதைகள் - 18 1 என்னைப் போலிருப்பவனை பிடிக்கமாட்டேன் என்கிறது பயந்து முகம் திருப்பி விடைபெற்று விரைகிறேன் என்னைப் போலிருப்பவனிடம் இருந்து என்னைப் போலிருப்பவனிடமிருந்து எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் அவ்வளவு இடைவெளி இருக்கிறது பராபரமே இருவருக்கும் என்னைப் போலிருப்பவன் என்னைப் போலவே இருக்கிறான் இன்னும் எவ்வளவு தூரம் கடந்து கல்லும் முள்ளும் சவுட்டி என்னிடம் வந்து சேர வேண்டும் இந்த என்னைப் போலிருப்பவன் ? 2 என்னையே எவ்வளவு நேரம் உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருப்பது ? அதனால்தான் வெளியே வந்து ஒருமுறை வானத்தைப் பார்த்தேன் ஆச்சரியம் வானம் நான் ஆனது இப்போது 3 ஒரு ரயில் நிலையம் ஒரு போதும் ஒரு ரயில் நிலையமாக இருப்பதில்லை அதற்கு ஆயிரம் முகங்கள் அதில் ஒன்று அனாதை பையனுடையது 4 கண்டு வெறுக்கும் தன்மையில் இங்கே தெருவில் நடக்கிறார்கள் பாருங்கள் சாலையில் திரிகிறார்கள் பாருங்கள் கண்டு வியக்கும் அத்தனைபேரும் இப்படித்தான் இருந்தார்கள் 5 பேராசை அவனுக்கில்லை இரண்டு பிடி சோறு தேவை ஒன்றை எடுத்து அவனுக்கு கொடு பேராசைய

பொடிப்பொடி பொடி கவிதைகள் பத்து

Image
பொடிப்பொடி பொடி  கவிதைகள் பத்து  1 ஏராளம் ஈசல்கள் வந்து நிறைகின்றன  அதற்குத் தக்க பல்லிகள் எல்லா ஈசல்களும் ஒரு ஈசல் தான் என்பது போல  தொட்டு நக்கி  எல்லா பல்லிகளும்  சுவரிலிருந்து காணாமற் போகின்றன  நாங்கள் அத்தனை பல்லியும் ஒரே பல்லி தான் என்பது போல 2 அடித்துப் பெய்கிறது பேய்மழை  அனைத்தும் நிறைகிறது  ஊற்றின் தாய்மடி நிறைகிறது  ஊருணி நிறைகிறது  எண்ணங்கள் நனைகிறது அடுத்து எறும்புப் புற்றுக்குள்  காலடி எடுத்து நனைக்கையில்  மொத்த மழையையும் தடுத்து நிறுத்துகிறது  சிறிய எறும்பு  புற்றின் வாயிலில் 3 அசுரர்கள் எப்படி அசுரர்கள் ஆனார்களோ  அப்படியே  தேவர்களும் தேவர்கள் ஆகிறார்கள்  அனுபவம் கிளர்ந்து அடிக்க அடிக்க அசுரனாகிக் கொண்டே இருக்கிறான் அசுரன்  வலிக்க வலிக்க தேவனாகிக் கொண்டேயிருக்கிறான் தேவன் 4 நானொரு கைப்பிடியளவு சாம்பல் பேசுகிறேன்  வாழ்க்கையென்பது தித்திக்க தித்திக்க தேன் . நானொரு துளி தேன் பேசுகிறேன்  கைப்பிடியளவு சாம்பலின் வயிற்றுக்குள்  எவ்வளவு ருசி 5 கடைசியாகத் திரும்பிய பல்லியிடம்  நான் கேட

எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ?

Image
எவ்வாறு இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது ? திருநெல்வேலியில் ஜெயமோகன் ஆற்றிய உரை மிகச் சிறந்த உரை.சு.ராவின் மொழியில் சொன்னால் ஆகச் சிறந்த உரை எனலாம்.எளிமையான வடிவத்தின் பால் அமைந்திருந்த அந்த உரை ஏராளம் கிளை வாயில்களை கொண்டு அமைந்திருந்தது.அதிலிருந்து கிளைத்து எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.திரும்பும் ஒவ்வொரு திசைகளிலும் கண்டடைய பல விஷயங்கள் உண்டு. பன்முகத்தன்மையை தன் முழுமையில் நிறைத்திருந்த உரை அது.நவீனத்தின் குறுகிய சந்தில் இருந்து விடுபட்டு வெகுதூரம் பயணித்த உரை.பெரும் தரிசனம் என்றால் அதில் பிழையில்லை.இரண்டு மணிநேரம் அந்த உரையை கேட்டவர்கள் இருபது வருடங்கள் செலவு செய்தாலும் அடைய முடியாத தரிசனத்தைப் பெற்றிருப்பார்கள் .இதனை ஒரு அடிப்படை தரிசனம் என்பேன்.இதனை உணரும் ,காணும் தன்மை பெறாதவர்களின் விமர்சனங்கள் ,எதிர்வினைகள் ,செயல்கள் அனைத்தையும் வீணானவை அல்லது பொறுப்படுத்த லாயக்கற்றவை என்று சொல்லி விடலாம். சு .ராவின் பெரும்பாலான உரைகளை கேட்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்.கச்சிதத்தன்மையோடு , தான் கொண்ட பொருளில் விலகாத தன்மையுடன்; அவருடைய கட்டுரைகளுக

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

Image
விபத்திற்குப் பின்னர் ஓடுகிற கார் ஊருக்குப் புறத்தே சாலையோரத்தில் நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது விபத்தில் பழுதடைந்த கார் சுற்றி செடிகொடிகள் முளைத்து ... ஓட்டுனரின் ஜன்னல் வழியே பிரண்டைக் கொடி தளிர் நீட்டி வெயில் பார்க்கிறது பின்னிருக்கையில் பால அரசு பாலாம்பிகை கோலம் நீங்கள் தூரத்திலிருந்து பார்த்து விட்டு கடந்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள் காட்டுக்குள் நின்று கொண்டிருப்பது போல நினைவுகள் மூடிக் காத்திருக்கிறது அது நீங்கள் ஊர் பைத்தியம் என நினைத்து ஒருவனை விரட்டியனுப்பினீர்களே அவன்தான் இத்தனை தாவரங்களையும் அழைத்துக் கொண்டு தினமும் அந்த வண்டியை விபத்திற்குப் பிறகு ஓட்டிக் கொண்டிருக்கிறான் பின்னிருக்கையிலிருந்து பயணம் செய்கிறார்கள் விபத்தில் இறந்தவர்கள் அதுவொன்றும் சும்மா நின்று கொண்டிருக்க வில்லை நினைப்பது போல 2 "பத்மா டீச்சர்" எப்படி இங்கு வந்து சேர்ந்தார் ? வீட்டிலிருந்து இந்த வெட்டவெளியை வந்தடைய எவ்வளவு தூர பிரயாணம் தேவைப்பட்டிருக்கும் ? வெளியூர் பேருந்து நிலையத்தின் ஓரத்தில் மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில் படுக்க

தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று

Image
தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று " ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணுவே நம " தீராத நோய்களில் உழல்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.குணமாகும்.மந்திரங்களை எப்படி முறையோடு உச்சரிக்க வேண்டுமோ அப்படி,விரதம் மேற்கொண்டு உச்சரித்தால் பலன் அதிகம்.சில விஷயங்களை காரணம் கேட்காமல் கடைப்பிடித்து பலன் தெரிந்து கொள்வதே நல்லது.கடைபிடிப்போருக்கு காரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ;  மெல்ல மெல்ல விளங்கி விடும். தன்வந்திரியை மறந்தால் தன்வந்திரியும் உங்களை மறந்து விடுவார்.தன்வந்திரி என்றில்லை யாரானாலும் இப்படித்தான்.நினைக்க மறப்பதை அடையவும் முடியாது.தன்வந்திரி மஹா விஷ்ணுவின் அவதாரம்.அவருடைய அம்சம்.எதுவெல்லாம் உயரியதாக உள்ளதோ,அருங்காரியமாக அமைகிறதோ அவையெல்லாமே மஹா விஷ்ணுவின் அம்சங்களே.நம்மிடமும் மஹா விஷ்ணுவின் அம்சம் உண்டு.சதானந்தமே அது.சதானந்தத்தில் இருந்து கீழிறங்கும் போது நோய்கள் மிக எளிதில் தாக்குகின்றன. எவர் ஒருவருக்கும் வேண்டாத நோய்கள் ஏற்படுவதில்லை.நம்முடைய வேண்டுதல்கள் ஒவ்வொன்றிலும் தீராத பல நோய்களும் அடங்க

கவிஞன் பிறரில் மேன்மையானவன்

Image
தன்னை மாறுதலுக்குட்படுத்திக் கொண்டிருக்கும்  கவிஞன் பிறரில் மேன்மையானவன் தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான்.மேம்பட்டவனாகிறான்.தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை  அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன் கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் தேவதச்சனின் கவிதைகள் அவர் ஏற்கனவே தன்னை நிறுவிய விதத்திலிருந்து வேறுவிதமாக அமைந்திருக்கின்றன.சரஸ்வதியை மையமாகக் கொண்டு நெடுங்கவிதையின் தோற்றத்திலிருக்கும் இந்த கவிதைகள் தனித்தனியாகவும் சிறப்புடன் உள்ளன. தேவதச்சன் கவிதைகள் சிறப்பு தருணங்களையும் கொண்டிருப்பவையே ஆனாலும் கூட அதற்காக காத்திருப்பவை என்று சொல்வதற்கில்லை.பல சந்தர்ப்பங்களில் அ

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது

Image
கல்குதிரை இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள் அந்த குழந்தைக்கு வயது ஐம்பது ( 15  கவிதைகளின் தொகுப்பு ) - லக்ஷ்மி மணிவண்ணன் 1 அவளிடம் அம்மனைப் போல இருக்கிறாய் என்று சொன்னபோது உண்மையாகவே அம்மனைப் போலவே இருந்தாள் குனிந்து கீழே பார்த்தவள் கீழே கிடந்த அவள் அம்மனை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு நகர்ந்தாள் எம்மாடி எப்போதடி எடுத்துக் கொள்வாய் என்றிருந்தேன் என்றாள் அவள் எடுத்து சூடிக் கொண்ட அம்மன் 2 நேற்றைய காலையில் என தொடங்கினாள் அது ஏன் இன்றைய காலையில் வந்து அமர்ந்திருக்கிறது என்றேன் வேறொன்றுமில்லை இன்றைய காலையை நேற்றைக்குள் தள்ளி விட முடியுமா என முயல்கிறேன் என்கிறாள் இரண்டு காலைகளை வைத்திருக்கும் கனம் இருவரிடமும் மண்டியிட்டு அமர்ந்து கொள்கிறது பொழுதிற்கு ஒரு பொழுது என்பதெல்லாம் ஒரு அர்த்தமாகுமா என்ன ? 3 வேகமாக வந்து மோதிய பட்டாம்பூச்சியை அடிக்க ஓங்கிய கையைத் தடுத்து மெல்ல இறக்கினேன் மார்பில் சிறிது நேரம் இருந்த அது பின் பறந்து சென்றது மார்பில் தேன் ஊறி ஒழுகுவதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது ஓங்கிய கை காம்பை நீட்டி சுவைக்கத் தருகிறேன்