Posts

Showing posts from July, 2021

தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 12

Image
  கமலாம்மா அரிதாகச் சிலரே தங்களுடைய தேவதைத்தன்மையைத்  தவிர்த்து பிறவற்றை பிறருக்கு வெளிப்படுத்தாத தன்மையைப் பெறுகிறார்கள்.அதற்கு மிகவும் மனத் துணிச்சலும் ,வாழ்க்கை மீதான நிதானமான பார்வையும் தேவை.ஆழ்  சமுத்திரம் போலும் சலனமின்மை அவசியம்.  நான் அவ்வாறாக உணர்ந்த ஒருசிலரில் கமலாம்மா ஒருவர்.அவர் நிச்சயமாக தேவ பிரகாசம். அவரை கடைசியாக ஒரு பொது நிகழ்ச்சியொன்றில் பார்த்தேன்.பல வருடங்கள் இருக்கும் .இப்போது நண்பர் ஒருவர் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.ஸ்ரீனிவாசன் நடராசன்.அவரின் தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். எவ்வளவோ நினைவலைகள். சுராவின் மறுபக்கம் கமலாம்மா. அவருடைய மன அலைவரிசையில் அவ்வளவு தூரத்திற்கு நெருங்கிக் கைகோர்த்திருந்தவர் கமலாம்மா.பெரிய ஆளுமைகளின் துணையாக அமைவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிரமங்கள் நிறைந்ததுதான்.நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் வந்து தங்கி உரையாடி மீண்டும் கூடும் வண்ணம்  வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வீட்டை நிர்வாகம் செய்தவர் அவர்.எட்டு வருடங்கள் அந்த வீட்டோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த நான் ஒருபோதும் முகமலர்ச்சியற்றோ ,நிதானமற்றோ கமலாம்மாவை கண்டதி

25 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
  1 பிறந்த குழந்தை மடியில் கனவு காண்கிறது தூங்கி விளையாடுகிறது அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல சுய நினைவற்று மெல்ல ஆடுகின்றன தாய் மடியில் தாயின் தொடைகள் தாய் மடியாக எவ்வளவு விரிகிறது இந்த மடி பிரபஞ்சம் அளவிற்கு பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி ஆணிடம் வரும் போது சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி சிறு யோனியின் அளவிற்கு ஒரு துளையாகிறது அதை பிரபஞ்சம் அளவிற்கு பெரிதாக்குகிறது பூமியில் பிறந்தவுடன் குழந்தை 2 டியூஷன் முடிந்து குழந்தைகள் சென்றபின் இருக்கைகள் கலைந்திருக்கின்றன அமர்ந்திருந்த குழந்தைகள் வளைத்த விதத்தில் சரிப்படுத்தச் சென்ற கரங்களைப் பின்வலிக்கிறேன் அவை அவ்வாறே இருப்பதுதானே நன்று? 3 இந்த காலையை உருவாக்க சில பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. ஒருத்தி முற்றத்தில் எழுப்புகிற கோலம் பாடலுக்கு ஒத்தாசை செய்கிறது. டிப்பர் லாரி இன்னும் புலரவில்லை அதன் நெற்றியில் நேற்றைய பூளை கோவில் மணிச் சத்தம் இந்த காலையைத் தொடங்கி முடிக்கவும் தயாரான காலையை தனது சாக்குப்பைக்குள் சிறுகச் சிறுக சேமித்த வண்ணம் கடினம் இழுத்துக் கொண்டோடுகிறான் இன்றைய நாளின் பைத்தியம். 5 உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் போது வாருங்கள்