Posts

Showing posts from May, 2021

காது [ சிறுகதை ]

Image
  காது சங்கர வடிவு மாமி என்னை அழைத்து விட்டிருந்தார்.அவரிடம் என்னுடைய அழைப்பு எண் உள்ளது.ஆனால் அதில் அவர் அழைக்க மாட்டார்.ஏதேனும் ஒரு காரியத்தின் பொருட்டு இரண்டு பேரிடம் சொல்லி அனுப்புவார்.முதல் நபர் தகவலாகச் சொல்வார்.இரண்டாவது நபரிடம் அவர் சொல்லியனுப்பும் விதம் சற்றே கோணலாக இருக்கும்.நாம் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டது போன்ற நொதி சேர்ந்திருக்கும்.அந்த நொதி வந்ததும் என்ன வேலைகள் ஆயினும் கிடக்கட்டும் என போட்டு விட்டு ஓடிச் சென்று பார்ப்பேன் என்ன மாமி தேடினிய போலிருக்கு ? என்றபடி வண்டியை வாசலின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன்.அவருக்கு சற்றே காது கேட்பதில்லை.அப்படித்தான் அனைவரும் சொல்கிறார்கள்.மாமியின் ஒரே மகன் சௌந்தர்யன் உட்பட்.ஆனால் அனைத்து மீஒலிகளும் அவளுக்கு கேட்கும் என்பதே என்னுடைய அனுபவம்.அதனால் நான் அதனை நம்புவதில்லை.அவள் மிகவும் சன்னமாகவே பேசுவாள்.அதில் மூச்சுக் காற்று மட்டும்தான் வரும்.ஒலி வராது.ஆனால் எனக்கு விளங்கும்.அதுபோலவே நானும் அவளிடம் சன்னமாகவே பேசுவது,அதுவும் அவளுக்கு விளங்கும். என்ன மக்கா வந்துட்டியா? இங்க வந்து பாரு..என்ன நாடகம் நடத்திருகானுவன்ன