Posts

Showing posts from March, 2022

எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன் 1 நான் என்னைப் பற்றி ஒன்றை நினைத்து வைத்திருக்கிறேன் அது அப்பழுக்கு இல்லாதது அது குற்றங்கள் புரியும் தவறுகள் செய்யும் பிழை புரியும் ஆனால் அமிர்தமானது ஒருவரை அழைத்தால் அங்கு நோக்கியே அழைக்கிறேன் ஒருவர் என்னைப் பிரிந்து சென்றால் அங்கிருந்தே பிரிந்து செல்கிறார் 2 ஒருவர் உயிருடன் இந்த முச்சந்தியை பார்த்துக் கொண்டு நிற்கிறார் உண்மையாகவே ஒருவர் உயிருடன் நின்று இந்த முச்சந்தியை காண்கையில் ஒரு வினோதம் நிகழ்கிறது அவர் உயிருடன் நிற்கிற வினோதம் அவர் மட்டுமல்ல இந்த முச்சந்தியும் தோன்றி நிற்கிற வினோதம். எவ்வளவு பொருள் கொடுத்தும் வாங்க இயலாத வினோதம் எத்தகைய அதிகாரத்தாலும் பறிக்க இயலாத வினோதம் அவர் வேறு எதையுமே செய்யவில்லை நின்று பார்க்கக்கூடிய வினோதத்தை நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான் தோன்றி நிறைகிறது மாபெரும் வினோதம் 3 எதிரே அமர்ந்திருக்கிறேன் ஒரு கைப்பிடியளவு முருங்கை இலைகள் கண்களில் அசைகின்றன அதுவே இப்போதைய எனது காடு அதன் மூட்டில் குழந்தை சிறுநீர் களிக்கிறாள் அதுவே இப்போதைய என்னுடைய கடல் 4 மேஜை பன்னீர் பாட்டில் நீர் எதிர்பக்கமிருந்து வருகிற விசிறி

திரு அண்ணாமலை பா.ஜ.க

Image
  திரு அண்ணாமலை பா.ஜ.க தமிழ் நாட்டில் ஒற்றைக் குரலுடன் ஒலிக்கும் அனைத்து தி.மு.க ஊடகங்களும் கழிந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பலமாக உடைக்கப்பட்டிருக்கின்றன.திரு அண்ணாமலையால் வெகுமக்கள் முன்பாக அந்த காரியம் நடைபெற்றிருக்கிறது.இது உண்மையாகவே அற்புதமான ஒரு காரியம்.எளிதானதல்ல. இந்த ஊடகங்கள் அனைத்துமே வேறு வேறு பெயர்கள் கொண்டவை.இவற்றின் உரிமையாளர்கள் வேறு வேறு நபர்கள்.அவர்களில் ஒருவர் கூட இந்த வெற்றுச் சித்தாந்திகளோடு தொடர்புடையவர்கள் அல்லர்.இதில் ஆர்வத்திற்குரிய விஷயம் இது.சென்னை ஊடகங்கள் கடந்த முப்பதாண்டுகளில் இந்த போலி சித்தாந்திகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.ஒருவகையில் சூழல் இவர்களால் கடத்தல் செய்யப்பட்டிருக்கிறது.இது முன் எப்போதையும் காட்டிலும் கடினமானது.இந்த ஒற்றைப்படையான சித்தாந்திகளை உடைத்து பொது மக்களுக்கு புரிய வைக்காமல் தமிழ் நாட்டில் எத்தகைய அரசியல் மாற்றங்களும் சாத்தியம் அற்றவை.அண்ணாமலைக்கு இந்த ஞானம் பிடிபட்டிருக்கிறது.அவர் இன்று பெருமளவில் இவர்களை உடைத்து இவர்களின் பின்னணிகளை,நோக்கங்களை பொது மக்கள் முன்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதனைச் செய்கிற அறிதலும் ,திறனும் உடைய பாஜ.க

18 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
18 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன் 1 சிறிதுக்கு வருவீர்கள் அப்போது தெரியும் சிறிது எவ்வளவு பெரியது என்று 2 என்னை சிறிதாக்கிக் கொண்டே இருக்கிறேன் ஒரு எறும்பின் முன் அமர்ந்து ஆசி கேட்கும் அளவிற்கு எறும்பு யானையின் துதிக்கை நீட்டி ஆசி வழங்கும் அளவிற்கு 3 இறந்தவள் கூட்டிய அண்டை அடுப்பை தோட்டத்தில் கிளறிக் கொண்டிருக்கிறது கோழி முதலில் பரவி விரிகிறது குப்பை குப்பையின் அடியில் குவிந்திருக்கிறது அவள் காட்டிய ருசி காலால் கிளற கிளற நெஞ்சைப் பிளக்கும் நினைவு 4 திடீரென... 1 திடீரென ஒரு பையன் வந்து பெட்ரோல் பங்கில் வேலைக்கு நிற்கிறான் திடீரென ஒரு மகள் ஒரு நகலகத்தில் வேலைக்கு சேருகிறாள் திடீரென அவர்கள் உடல் வற்றியிருக்கிறது திடீரென அவர்கள் முகம் வேலைக்காரர்கள் முகமாக மாறிக் கொண்டிருக்கிறது திடீரென அவர்கள் உலகத்தின் முன்பாக நிறுத்தப்படுகிறார்கள் திடீரென அவர்கள் உலகத்தின் முன்பாக நிறுத்தப்படுவதை இதுவரையில் யாரோ இருந்து தடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் வந்த புயலை பெய்த மழையை ஓங்கிய கரத்தை என அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் அவர்கள் திடீரென உலகத்தைப் பார்க்கின்ற இடைவெளி வழியாக தடுத