Posts

Showing posts from June, 2018

ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி...

Image
ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி... கொஞ்சம் பேர் எட்டு வழிச் சாலையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி .கொஞ்சம் பேர் அரசின் ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அரசு அதனைக் கைவிடத்தான் வேண்டும்.அதுதான் உலகெமெங்கும் உள்ள நாகரிக அரசுகள் பின்பற்றுகிற நடைமுறை.ஊர் முழுதும் கூடியெல்லாம் எங்கேயும் எதையும் எதிர்ப்பதில்லை. நாங்கள் ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் ஏற்படுத்தும் சில ஆசிரியர்களை விசாரிக்கும் பொறுப்பில் ஒருசமயம் இருந்தோம்.இரண்டே இரண்டு பெண்குழந்தைகளும் அவர் தம் பெற்றோர் மட்டுமே புகார் அளிக்க முன்வந்தவர்கள்.அதற்கு அர்த்தம் அவர்கள் மட்டுமே சீண்டலுக்கு உள்ளானவர்கள் என்பதல்ல.இரண்டு பேர் இத்தகைய காரியங்களில் துணிந்தால் பிரச்சனை முற்றி சீழ் வடிகிறது என்பதே அதற்கு அர்த்தம். புகாருக்குள்ளான  ஆசிரியர்களில் ஒருவர் தந்து உறவினரான காவல் ஆய்வாளர் ஒருவரை பயன்படுத்தி ஒரு குழந்தையின் மீது போலியான வழக்கொன்றை பதியவும் செய்தார். இத்தனைக்கும் யோசித்துப் பாருங்கள் ...ஆசிரியர் சமூகம் அளவற்ற அதிகாரம் கொண்ட சமூகமெல

திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்

Image
 கவிதைகள் 1 உனக்கு எவ்வளவு பெரிய தோள்கள் நீ விரும்பியவாறெல்லாம் உன்மீது படர்ந்தேறும் காடுகள் மயங்கும் மஞ்சு உடலெங்கும் வெண்ணூற்றுச் சுனை எவ்வளவு ரகசிய மிருகங்கள் ? எவ்வளவு அர்த்தம் செறிந்த கர்வம் ? மாமலையே போற்றி போற்றி எனினும் உன்னை நான் அதிசயித்துப் பார்த்தால் தான் நீ மாமலை இல்லையெனில் ஒன்றுமில்லை கர்வத்தில் நினைவு கொண்டிரு வற்றாயிருப்பே 2 திடீரென ஒருநாளில் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம் சமூக விரோதிகள் என்று பட்டம் சூட்டப்பட்டோம் எப்போதும் போலவே எங்களுடைய வேலையைத்தான் செய்து கொண்டிருந்தோம் நிலங்களில் பயிரிட்டோம் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றோம் திரும்பி வந்து பார்க்கும் போது பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டிருந்தோம் துப்பாக்கிகள் எங்களைக் குறி வைத்து சுட்டன போர் விமானங்கள் எங்களை சுற்றி வட்டமிட்டன போர் எங்கள் மீது தொடங்கப்பட்டது எங்களுக்கு முன்னரே கடல்களில் மீனும் நிலத்தில் தாவரங்களும் நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டதை தெரிந்து வைத்திருந்தன போலும் உங்கள் ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கியிருந்தன நாங்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டதை கண்முன்ன

கவிஞர் கண்டராதித்தனுக்கு நல்வாழ்த்துகள்

Image
குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் கண்டராதித்தனுக்கு நல்வாழ்த்துகள்  எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் கண்டராதித்தன் "நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும் போது அச்சம் தோன்றி நிற்கிறது " கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக் கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன் முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் இது.அந்த தொகுப்பில் மிகுந்த எளிமையுடன் வாசகனின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.எளிமையெனில் கவித்துவத்தின் மெருகு கூடிய எளிமை.முற்றிலும் அனுபவங்களின் முன்பாக நிர்வாண நிலையில் நிற்க தயாராக இருக்கிறேன் என அறைகூவல் விடுப்பது போன்ற எளிமை.தன்னையே உதறி அசையில் உலர வைத்திருப்பது போலும் எளிமை. அனுபவத்தின் ஞானம் அவர் கவிதைகளில் சாறு ஏறியிருந்தது.எளிமை அனுபவம் கவித்துவம் இம்முன்றும் சரியான விகிதத்தில் வெளிப்பட்டது, ஆச்சரியமூட்டியது. . 90 - களின் பிற்பகுதி என நினைவு விக்ரமாதித்யன் நம்பியுடன் கண்டராதித்தனைக் காண சென்றிருந்தோம் .அப்போது சுயவதையிலும் , வன்முறை மனோபாவத்திலும் சி

போராட்டங்கள் பற்றி...

Image
போராட்டங்கள் பற்றி... எந்த சமுதாயம் பொருளாதாரத்தில் தங்கள் நிலை எழும்பிய பின்னரும் அரசியல் அதிகாரம் பெறுவதில் பின்னடைவு கொண்டிருக்கிறதோ ,அந்த சமுதாயமே இந்திய சமூகத்தில் போராடுகிறது.அனைத்து சமூக மக்களின் சம நிலையான அரசியல் அதிகார பங்கேற்பிற்கும் ,வளர்ச்சிக்கும் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து தேவையாகவே இருக்கின்றன.போராட்டங்களை இழிவுபடுத்தும் போது ,இழிவு படுத்துவோருக்கு பிற சமுதாயங்களின் நலங்கள்,வளர்ச்சி ,அரசியல் உறுதித்தன்மை ஆகியவற்றின் பேரில் நம்பிக்கையில்லை  என்பதே தெளிவாகிறது.ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோரும் ,அதற்கு சற்று மேம்பட்ட நிலையில் இருந்த சாதியினரும் போராடினார்கள் என்றால் இப்போது தலித்,மீனவர்கள் , சிறுபான்மையோர் ஆகியோர் இந்தியாவில் போராட வேண்டியிருக்கிறது.இப்படியில்லாமல் இந்தியாவில் சமநிலை சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்,உண்மை நிலை. போராடும் மக்களின் அரசியல் அதிகாரத்தை வெறுப்பவர்களே தொடர்ந்து இந்தியாவில்  போராட்டங்களை இழிவுபடுத்துகிறார்கள். இந்தியா முழுவதிலுமுள்ள நிலை ; ஒரு சமூகம் வளர்ச்சியடையும் போது ; பிற சமூகங்கள் பல அதற்கு கீழே கீழே என்று இருக்க

ஞானமும் சன்னதமும் ஒருங்கே அமையப் பெற்ற கவிஞன்

Image
கண்டராதித்தன் -"ஞானமும் சன்னதமும் ஒருங்கே அமையப் பெற்ற கவிஞன்"    "நீண்டகாலம் நண்பனாக இருந்து  விரோதியானவனை வெளியூர் வீதியில் சந்திக்க நேர்ந்தது  பதற்றத்தில் வணக்கம் என்றேன்  அவன் நடந்து கொண்டே  கால்மேல் காலைப் போட்டுக் கொண்டே போனான்." - கண்டராதித்தன் நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க்கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல்.இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன . வேறு எதற்காகவும் இல்லை.கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூழ்ந்த மொழி, மனப்பரப்பின் மீது தனது பாய்ச்சலை நிகழ்த்தும்போது குறைகளுக்கு அவசியம் இல்லாமற் போகிறது.திருச்சாழல் தமிழ் கவிதைப்பரப்பில் கவிதை மீது நிகழ்ந்திருக்கும் மாயம்.பன்முகத்தன்மையும் , அனுபவமும் , பகடியும் ஒரு கவியின் மொழியில் சஞ்சரிக்கும் போது என்ன நிகழ்கிறது ? அது எவ்வண்ணம் உருமாற விளைகிறது ? என்பனவற்றை அனுபவரீதியாக நம்மை கொண்டு நெருங்கித் தேற்றும் பிரவாகம் திருச்சாழல்.ஒரு மொழியில் கவியின் பாத்திரம் என்ன என்