சித்திரக்கூடம் [ கதை ]
சித்திரக்கூடம் கட்டிடம் வெளித்தோற்றத்திற்கு நேராக அடுக்கடுக்காக அமைந்திருப்பது போல தோன்றியது. ஆனால் எப்போதும் அது பாலித்தீன்பை போல வளைந்திருக்கிறது என்பதையே பார்த்தேன். அது உருவத்தை மாற்றியமைத்தபடியிருந்தது. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது என்றாலும் புலப்பட்ட தோற்றங்களை மட்டுமே ஒவ்வொருவரும் அதன் நிரந்தரத் தோற்றமாகக் கற்பனை செய்து கொண்டார்க்ள். கற்பனைக்கு மாறாக அவற்றின் தரைப்பகுதி சாய்வாக இருந்தது. சாய்வாக இருந்தது யாருக்கும் பொருட்டாகவும் இருக்கவில்லை. ஒரு வகையில் அது சாய்வாக இல்லாமல் சமதளத்தில் இருப்பதாகவே கற்பனை செய்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் உள் நுழைந்ததும் அது ஒவ்வொரு விதமாக வளைவதைப் பார்த்தேன். பெரிய எந்திர உருவங்களில் அசைந்து கொண்டிருந்தது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. கட்டிடத்தின் அபாயத்தை யாரும் உணராமல் இருந்தது குறித்துக் கவலைப்பட்டேன். அறைகள் வளைவதை அவர்களிடம் தெரிவித்தால் எனக்கு மனநிலை சரி இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் கருதக்கூடும். ஏன்றாலும் அந்தக் கட்டிடம் வளைந்திருப்பதைத் தெளிவாகப் பார்த்தேன். இது சம்பந்தமாக புகாரை எழுப்ப வேண்டும் என்றும், அது எனது ம...
Comments
Post a Comment