Posts

Showing posts from September, 2022

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

Image
  1 ஒரு சிறிய கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் ஒவ்வொரு சிறியவற்றிலும் இருக்கிறார் இருந்து தலை அசைக்கிறார் சிறிய அளவுக்கு ஒவ்வொரு பெரியவற்றிலும் இருக்கிறார் ஒரு பூவின் அளவுக்கு யானையிலும் அமர்ந்து சவாரி செய்கிறார் அவரிடத்தே பாரபட்சமெல்லாம் ஏதுமில்லை அவரால் முடிந்தது ஒரு சிறிய அளவுக்கு எல்லாவற்றிலும் இருப்பது 2 ஒருவரை நேசிப்பதற்கு நல்லவர் கெட்டவர் என்பதொன்றும் தேவையில்லை ஒருவரை வெறுப்பதற்கும் நல்லவர் கெட்டவர் என்பதொன்றும் தேவையில்லை நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வெற்றுச் சும்மா காரணங்கள் எதனால் நேசிக்கிறோம் எதனால் வெறுக்கிறோம் என்பதற்கு எந்த துல்லியமுமில்லை நேசிப்பவருக்குள் நேசிக்கும் சமயத்தில் நேசம் இருக்கிறது அவ்வளவுதான் அதற்கு முன்னும் பின்னும் நேசம் கனிவதற்கு முன்னும் பின்னும் கனிந்த நேரத்தில் சரியாக வந்தவன் காக்கப்படுகிறான் அமையாத நேரத்தில் வந்து அமர்ந்தவன் அல்லல் படுகிறான் 3 ஒரு தர்க்கம் உங்களுக்குள் உருவாகும் போது எவரேனும் ஒருவரிடம் பேசிக் காட்டுகிறீர்கள் அந்த ஒருவர் வேறு யாருமில்லை நீங்கள் தான் உங்கள் முன்னால் நீங்களே நின்று வெளிப்படுவது அது உருவாதபோது ஏற்பட்ட இடர் அப்போதே த