Posts

Showing posts from October, 2021

கொலையாளி விட்டுச்சென்ற சட்டை - சிறுகதை

Image
  கொலையாளி விட்டுச்சென்ற சட்டை - லக்ஷ்மி மணிவண்ணன் அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது .பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது .தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது .பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது . சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந்த சட்டையை விட்ட

21 கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
21 கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன் 1 நானிந்த பிறவி எடுத்தது எவ்வளவு நல்லது எப்படியும் புத்திசாலித்தனமாக முடித்து விடுவேன் அல்லவா? நானிந்த பிறவி எடுத்தது எவ்வளவு நல்லது என்னுடைய புத்திசாலித்தனத்தின் அளவை அறிந்து கொண்டேன் அல்லவா? நானிந்த பிறவி எடுத்தது எவ்வளவு நல்லது என்னுடைய புத்திசாலித்தனம் எதுவுமே என்னுடையதல்ல என்பதைத் தெரிந்து கொண்டேன் அல்லவா ! இல்லையெனில் தெரியாது இருந்திருப்பேன் நானிந்தப் பிறவி எடுத்ததை அறியாமல் இருந்திருப்பேன் இல்லையா? 2 எடுத்ததுதான் எடுத்தேன் நற்பிறப்பாய் எடுத்தேன் கவிழ்த்ததுதான் கவிழ்த்தேன் அப்பிறப்பைக் கவிழ்த்தேன் எப்பிறப்பும் எடுக்காத நற்பிறப்பைக் கவிழ்த்தேன் 3 சந்தித் தெருவில் நின்றாடிச் சுற்றி பலபேரைப்பகைத்து சிலபேரை இனித்து சென்றுறங்கும் இடம்தேடிச்செல்கிறாள் என்ன வயது இருக்குமோ ? நின்றாடிச் சுற்றி சந்தித் தெருவில் பலபேரைப் பகைத்து சிலபேரை இனித்து சென்றுறங்க இடம்தேடும் வயதிருக்கும் இல்லையா? 4 இந்தச் சேவல் ஒரு துணை உயிருக்காக வந்து சேர்ந்தது சனிக்கிழமையில் மரித்த ஒருத்தியின் துணை உயிராக அது செல்லவிருக்கிறது அவளுடைய மடியில் அமர்ந்து அமரர் மேடைக்குள் இறங்குகிறது