Posts

Showing posts from August, 2018

நண்பர் ,திரைப்பட இயக்குனர் அய்யப்பன் தவறினார்

Image
நண்பர் ,திரைப்பட இயக்குனர் அய்யப்பன் தவறினார் அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள். சமீப காலங்களில் பழகி என்னுடன் மிகவும் நெருக்கமாகவும்,அன்பாகவும் ,மதிப்புடனும் இருந்த நண்பர் அவர்.பார்ப்பதற்காக அடிக்கடி வந்து கொண்டேயிருந்தார்.குடிக்காதீர்கள் என்று பலமுறை அவரிடம் உரிமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஏதேனும் காரணங்கள் சொல்வார்.அவர் சொல்லும் காரணங்கள் ஏற்கனவே நானும் சொல்லித் திரிந்த காரணங்களாகவே இருந்தன.ஒருவேளை ஒரு பெண் துணை அவருக்கு இருக்குமாயின் இதில் விடுதலை பெற ுவாரோ என்கிற எண்ணமும் எனக்கிருந்தது.அதற்காக தெரிந்த இலக்கிய வட்டத்தில் அவருக்கு பெண் பார்த்தோம் .சிலர் வேண்டாம் என்றார்கள்,ஒத்துக் கொண்டவர்களை இவர் மறுதலித்து விட்டார்.ஏற்பவர்களை மறுப்பது தாழ்வுணர்ச்சியின் நோய்.நமது சமூக நோய்களில் ஒன்று இது.நிராகரிப்பவர்களை காதலிக்கும் நோய் . அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "நிலம் நீர் காற்று " படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னேன்.மதுபானக்கடை படம் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் எண்பதுகளில் இரு

ஹெல்மட் சீட்பெல்ட் காண்டம்

Image
ஹெல்மட்  சீட்பெல்ட் காண்டம் தமிழ்நாட்டில் திடீரென ஹெல்மட் போடச் சொல்கிறார்கள்.திடீரென தளர்த்துகிறார்கள் .விபத்தைக் குறைக்க ஹெல்மட் அவசியம் என்கிற கருத்து இதன் பின்னால் நேர்மையுடன் அமர்ந்திருப்பதாகவே எடுத்துக் கொள்வோம்.அப்படியானால் மக்கள் எதற்காக இதனை அசௌகரியமாகக் கருத வேண்டும் ? அவர்கள் டாஸ்மாக் வருமானம் பற்றாக்குறையாக இருப்பதால் இப்படி நீதிமன்றங்கள் மூலமாக இத்தகைய வழிப்பறி ஆணைகளை கொண்டுவருகிறார்கள் என கருத வேண்டும் ? தமிழ்நாட்டில் ஒரு பெண்மணியை நடுரோட்டில் இந்த வழக்கை வைத்து போலீசார் கொலை செய்ததைத் தொடர்ந்து ஓய்விற்கு அனுப்பப்பட்டிருந்த இந்த சட்டத்தை மீண்டும் துடைத்து மேலும் பொலிவாக்கி உடன்பயணிப்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும்  என்று நீதியரசர்கள் புதுப்பித்திருக்கிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இந்த சட்டத்தால்  மண்டை உடைந்தவர்கள் தோராயமாக ஐம்பதுக்கும் அதிகமானோர்.அப்படி மண்டை உடைந்தவர்களில் சிலர் இப்போது  இப்பூவுலகில் இல்லாமலும் போயிருக்கலாம்.குலசேகரம் பகுதியில் போலீசார் துரத்தித் துரத்தி மனிதர்களை வேட்டையாடினார்கள்.நகரங்களில் அனைவரும் அணிய தொடங்கிய பிறகு கிராமங்களுக்குள

பிராமணன்

Image
பிராமணன் எவனொருவன் சமகாலத்தில் குறைவுபடாத விதத்தில் தன்னுடைய ஞானத்தைப் போற்றி பாதுகாத்து வைத்திருக்கிறானோ ; அவனே பிராமணன் . இந்த இடத்தில் ஞானத்தை அறிவு என நான் சொல்லமாட்டேன்.ஞானத்தை அறிவு என குறிப்பிடும் போது அதில் பல அம்சங்கள் குறைவு பட்டு விடுகின்றன. ஞானம் என்பது அறிவு மட்டுமல்ல.அனுபவத்தில் இருந்து பல விஷயங்களை தெளிந்து வைத்திருப்பது.கற்றவற்றின் பொருளில் தெளிந்திருப்பது.தெளிவு குருவின் திருமேனி. தெளிவின்மையில் தத்தளித்து தத்தளித்து வந்து சேர முடிகிற இடம் அது .அலட்சியத்தைக் கைவிடுவதில் தொடங்கி உருவாகிற பாதை.பிராமணர்கள் என்னும் சாதியில் தொடர்ந்து ஞானத்தின் பேரில் அலட்சியம் இல்லாத தன்மை ஓரளவுக்கேனும் இருப்பதால் சாதியில் பிறந்த பிராமணர்களில் பிராமணர்கள் அதிகம் . பிராமணர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.சாதியில் பிறந்த பிராமணர்களிடம் இருந்து கற்பதற்கும் ஏராளமான விஷயங்கள் உண்டு. தமிழர்களுக்கு பொதுவாகவே ஞானத்தின் மீது வெறுப்பு இருக்கிறது.அச்சமும் இருக்கிறது.ஞானம் அனைத்தையும் அழித்துவிடுமோ என பயப்படுகிறார்கள்.அப்படி இல்லை என்பது அவர்களுக்கு விளங்குவதே இல்ல

கேரளா மீதான இந்தியா அரசின் வஞ்சம்

Image
கேரளா மீதான இந்தியா அரசின் வஞ்சம் உதவிகள் வேண்டுவோருக்கு செய்ய இயலாமற் போவதில் ஒன்றுமில்லை.ஆனால் ஒருவர் உதவி செய்ய முன்வரும் போது ; அதனைக் காரணம் காட்டி ,கோள் மூட்டித் தடுப்பது மகா பாவம் என்கிறது குறள்.கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த உதவியை இந்திய அரசு முன்னுதாரணம் காட்டி மறுத்திருப்பது ஒரு ஈனத்தனமான செயல்  .தீயன செய்வதற்கு எதையும் பின்பற்ற வேண்டியதில்லை என நினைக்கும் இவர்கள்;நல்லன செய்வதற்கு முன்னுதாரணங்கள் சொல்வது கேடு நிறைந்த வஞ்சம் அன்றி வேறில்லை. உலகெங்கும் பரவியிருக்கும் இந்திய மக்களில் தமிழர்களை போன்றே மலையாளிகளும் உலகில் பல பகுதிகளில் தங்கள் அரும்பெரும் பங்களிப்புகளை செய்திருக்கிறார்கள்.ஐக்கிய அரபு அமீரகம் அந்த நன்றிக் கடன் சம்பந்தப்பட்டே இக்கட்டான இந்த வேளையில் நிவாரண உதவி அறிவித்திருக்கிறார்கள்.இந்த உதவி அறிவிப்பு வெளியான முதற் கொண்டு இழிவுபடுத்தும் பேச்சுக்கள் உருவாக்கப்பட்டன.பின்னர் இப்போது அந்த உதவியை இந்தியா ஈனத்தனமான காரணங்களை முன்வைத்து மறுத்திருப்பது பிற நாட்டு நல்லிணக்கத்தில் மோசமான நிலையை ,பாரபட்சத்தை தற்போதைய காவி இந்தியா பின்பற்றுகிறது என்பதற்கு சாட

தோழர் ஜீவா

Image
தோழர் ஜீவா ஆகஸ்ட் - 21 ஜீவானந்தம் பிறந்த தினம்.நமது முந்தைய தலைமுறையின் லட்சிய முகங்களில் ஒன்று ஜீவா.அந்த தலைமுறையின் நற்குணங்களுக்கு அசலான ஒரு சான்று. லட் சிய புருஷர்களில் இருவகையினர் உண்டு.தங்களின் குறிக்கோளுக்கப்பால் ஏதுமில்லை எனக் கருதுபவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் .பிற மார்க்கங்கள் எதற்கும் சிற்றிடம் கூட தங்களிடம் இல்லாதவர்கள்.இவர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கங்களுக்கு பல தியாகங்களையும் ,பங்களிப்புகளையும் செய்தவர்களாகவே இருப்பார்கள்.மார்க்கங்கள் இறுகி மக்கள் செல்வாக்கிற்கு மார்க்கங்களை நகர்த்துபவர்கள் இவர்கள்தான் பெரும்பாலும்.எல்லா மார்க்கங்களிலும் இவர்களுடைய செல்வாக்கே நமது நாட்டில் அதிகம். இவர்களின் இருப்பை அசையா சொத்தாகக் கொண்டிராத மதங்களோ,நிறுவனங்களோ,கட்சிகளோ இந்தியாவில் கிடையாது. பக்தி மார்க்கத்தின் தொடர்ச்சியில் வருகிற இவர்கள் தங்களின் தரப்பைப் புனிதத் தரப்பாக்கும் வல்லமை படைத்தவர்கள்.தாங்கள் சார்ந்த தரப்பில் சிறு சந்தேகம் கொள்ளவும் இவர்களிடம் பொறுமை கிடையாது.மதத் தலைமைகள் பெரும்பாலும் இவர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. சகல மதங்களும் அபாய

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது

Image
அந்த குழந்தைக்கு வயது ஐம்பது ( 18  கவிதைகளின் தொகுப்பு ) 1 அவளிடம் அம்மனைப் போல இருக்கிறாய் என்று சொன்னபோது உண்மையாகவே அம்மனைப் போலவே இருந்தாள் குனிந்து கீழே பார்த்தவள் கீழே கிடந்த அவள் அம்மனை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு நகர்ந்தாள் எம்மாடி எப்போதடி எடுத்துக் கொள்வாய் என்றிருந்தேன் என்றாள் அவள் எடுத்து சூடிக் கொண்ட அம்மன் 2 நேற்றைய காலையில் என தொடங்கினாள் அது ஏன் இன்றைய காலையில் வந்து அமர்ந்திருக்கிறது என்றேன் வேறொன்றுமில்லை இன்றைய காலையை நேற்றைக்குள் தள்ளி விட முடியுமா என முயல்கிறேன் என்கிறாள் இரண்டு காலைகளை வைத்திருக்கும் கனம் இருவரிடமும் மண்டியிட்டு அமர்ந்து கொள்கிறது பொழுதிற்கு ஒரு பொழுது என்பதெல்லாம் ஒரு அர்த்தமாகுமா என்ன ? 3 வேகமாக வந்து மோதிய பட்டாம்பூச்சியை அடிக்க ஓங்கிய கையைத் தடுத்து மெல்ல இறக்கினேன் மார்பில் சிறிது நேரம் இருந்த அது பின் பறந்து சென்றது மார்பில் தேன் ஊறி ஒழுகுவதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது ஓங்கிய கை காம்பை நீட்டி சுவைக்கத் தருகிறேன் தித்திக்கின்றன விரல்கள் 4 முதலில் அந்த யுவதி சுவருக்கு வெளி

இந்தியாவில் நடைபெறும் கமிஷன் அரசியல் ஆபத்தானது

Image
இந்தியாவில் நடைபெறும் கமிஷன் அரசியல் ஆபத்தானது இந்தியா நவீன ஜமீன்களை உருவாக்குமிடத்திற்கு மெல்ல மெல்ல நகர்ந்து ; இப்போது வேகமாக அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.அதற்கான தத்துவார்த்த ,அழகியல் ,கலாச்சார பின்னணிகள் எல்லாமே ஏற்கனவே உருவாகிவிட்டன.பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் இந்தியாவில் நவ ஜமீன்களை கருத்திற் கொண்டே செயல்படுகின்றன.இது சரியா தவறா என்றெல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது,ஆனால் ஒரு விஷயத்தை இதனை முன்னிட்டு சொல்ல முடியும் . நினைவுபடுத்தவும் முடியும். அது ஏற்கனவே நா ம் கடந்து வந்த பாதை . எதிர்காலத்தில் நவ ஜமீன்கள் அந்தந்த பகுதிக்கான நலவாழ்வுப் பணிகளை மேற்கொள்கிறவர்களாக உருமாறவிருக்கிறார்கள்.அதுவும் ஏற்கனவே ஜமீன்கள் செய்து வந்த காரியமே .புதிதில்லை. இரண்டு விதமான காரியங்களில் இருந்து இந்தியாவை விடுவிக்க முடியவில்லையெனில் நமது முன்னோர்களின் கனவுகளும் தியாகமும் தரைமட்டமாகப் போவது உறுதி.முதலாவதாக இப்போது நடைபெறுகிற கமிஷன் அரசியல் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இப்போதைய அரசியல் கதாபாத்திரங்களோடுதான் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.அது வெட்டியான

கருணாநிதிக்கு இழைக்கப்படுகிற பாரபட்சத்தை காலம் மன்னிக்காது

Image
கருணாநிதிக்கு இழைக்கப்படுகிற பாரபட்சத்தை காலம் மன்னிக்காது கருணாநிதி அவர்களின் இறுதி மரியாதை ,அடக்கம்  குறித்த சர்ச்சைகள் உருவாகக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிகப் பெரிய அற்பர்கள் என்பதில் சிறிய சந்தேகமும் இல்லை.மத்திய ,மாநில அரசுகள் இவ்விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கின்றன.அம்மையார் ஜெயலலிதா மறைந்த போது ஏற்படாத சட்டச் சிக்கல்களும் ,முரண்பாடுகளும் கருணாநிதி விஷயத்தில் எப்படி ஏற்பட முடியும் ? கருணாநிதி வாழும் காலத்திலேயே , இவ்வாறு  காலம் சென்ற போதும்  ஏற்படும் வாய்ப்பு உண்டு என யூகித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதில் ஏற்படுகின்ற சர்ச்சைகளை உருவாக்கியோர் அவர் இருப்பிற்கு அதிக பட்ச நியாயத்தை வழங்குகிறார்கள்.மிகப் பெரிய தீமையை மேலும் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.பாரபட்சங்களை இறப்பில் முன்வைப்போர் ஆபத்து நிறைந்தவர்கள். மற்றபடி கருணாநிதி அவருடைய எத்தகைய செயல்களாலும் என்னை சிறிய அளவில் கூட பாதித்தவர் அல்ல.இலக்கியமானாலும் சரி,அரசியல் ஆனாலும் சரி .என்னுடைய நண்பர்கள் பலர் அவர் பாதித்திருப்பதாக சொல்கிறார்கள்.