Posts

ஆண்டாளின் கண்ணாடி அறை

Image
ஆண்டாளின் கண்ணாடி அறை ------------------------------ ---------------  ஆண்டாளை முதலில் பார்க்கச் சென்றபோது  பார்க்கத்தான் சென்றேன்  கவிக்கரம் குவித்து  ஆண்டாளின் கண்ணாடி அறை  தொங்கும் திரைச்சீலை கொண்டு  அடைக்கப்பட்டுள்ளது போன்று  அணங்கி அசைகிறது. கிசுகிசுப்பில் ரங்கன் தொட்டுத் தொட்டு பேசும் பிம்பங்கள்  அகத்துக்குள் எதிரொளிக்கின்றன தேவதையின் அகம்  எடுத்துத் திரும்பும் வழியெங்கும்  பேய்முலைச் சுரப்பு  கீசுகீசென்று  பேச்சரவம்  பிம்பங்கள் உருள  மனச்சாயல் தடுமாற தூமணி மாடத்து சுற்றும் விளக்கொளி  இப்படியிருந்தால் எப்படியம்மா வெளியேறுவான்  பார்க்கவந்தவன் ? ஆண்டாளைப் பார்க்கத் தான்  சென்றேன் உள்ளிழுத்து இறுக அடைத்துக் கொண்டதோ  மினுமினுங்கும்  மாயக்  கண்ணாடி அறை திருமேனிக் குடமுடைந்து சிந்த  நீ சூடிக் கொடுத்தாலும்தான் என்ன ? வாடிக் கொடுத்தாலும்தான் என்ன?   பெரியாழ்வாருக்கு மட்டும்தானோ   இத்தனை பெரிய  பெருந்...

ஜோக்கர்

Image
ஜோக்கர் தமிழில் திரைவடிவம் கண்டிருக்கும் வீதிநாடகம் வீதி நாடக குணம் கொண்ட தமிழ் திரை வடிவம் ஜோக்கர் சினிமா.தமிழ் சினிமா இன்று கொள்ளும் புதிய கோலங்களில் , சின்னஞ்சிறு மாற்றங்களில் இத்தகைய நாடகத்தன்மையும் கணக்கில் கொள்ளப்படவேண்டியதே.வீதி நாடகம் என்கிற வடிவம் பாதல் சர்க்கார் போன்ற உயரிய கலைஞர்களிடமிருந்து தோன்றி வங்காளத்திலிருந்து இங்கு வந்தது.முற்போக்கு முகாம்களிடம் சரிந்து பின் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரம் வரையில் முகமாற்றம் பெற்று பின் மறைந்து போன தமிழின் கலைவடிவம்.பாதல் சர்க்காரின் நாடகங்களை நேரடியாக கண்ணால் கண்டவர்களுக்கு அது எவ்வளவு சிறந்த கலைவடிவம் என்பது தெரிந்திருக்கும்.ஒரு கலைவடிவம் மறையும் போது அதற்கு மறுமலர்ச்சி வேறுவிதமாக தேவை. அந்த வகையில் நண்பர் ராஜு முருகனுக்கும் அவர்தம் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.வீதிநாடகத்தின் புதிய இடம்பெயர்வு இந்த சினிமாவில் சாத்தியமாகியிருக்கிறது. பவா.அருள் எழிலன் ஆகியோரை தேர்ந்த நடிகர்களாக திரையில் கண்டது மகிழ்ச்சியைத் தந்தது.பவா.செல்லத்துரை இலக்கியத்தின் பக்கம் இருந்து நடிப்புத்துறைக்கு சென்றவர்களில் ,கவிஞர் ஜெயபாலனைப் போல சி...

பாதரச சிம்னி

Image
பாதரச சிம்னி சுற்றுபுறத்தம்மன்களுக்கெல்லாம் தாலி செய்து கொடுத்த தங்கப் பட்டறை மீதேறி அமர்ந்திருக்கின்றன டாப் பப் கார்டுகள் AIR TEL ,BSNL ,IDEA 4G NET WORK வெங்கலச் சிற்பி கோலப்ப ஆசாரி கருப்பு வெள்ளை சட்டகத்திற்குள்ளமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். குறுங்கட்டி மேஜையில் சாமிகளுக்குத் தடவிய தங்கமெழுகு மீதிகள் டிராயரின் உள்பக்கம் மூடப்பட்டிருக்கும் கருவிகள் பாதரச சிம்னி புல் டாக் டைம் விசாரணையை "தங்கம் இன்றென்ன விலை ஆசாரியாரே " என எதிர்கொண்டு உற்றுப் பார்க்கும் உமைதாணு பேரன் தேவதச்சன் ஜனனீ ஜென்ம சௌக்கியனாம் வர்தனீ குலசம்பத்தாம் பாலசுப்பிரமணியன் புண்ணிய புத்திரன் முகம் பார்க்க மறுக்கும் கட்டி லென்ஸ் கண்ணாடி அணிந்திருக்கிறார். கட்டிய தாலியில் களிம்பு ஏறுகிறதே என்று உள்ளிருந்து கதறும் மண்டகப்படி அம்மனிடம் "சித்த நீ சும்மா இருக்கியா?" "வியாபாரத்தைக் கெடுக்கவென்றே இவளொருத்தி" ... "பிள்ளையை இவ இருந்து பிழைக்க விடமாட்டா போலிருக்கே ?" என முனகும் உமைதாணு உமைதாணு பேரன் முப்பாட்டன் வெங்கலச் சிற்பி கோலப்ப ஆசாரிக்கு ஊதுபத்திக் கொளுத்தி வெகு...

சிசேரியன்

Image
சிசேரியன் --------------- பத்திரகாளி அம்மன் வேடமிட்டார் ராஜாமணி நாடார் . ராஜாமணி நாடார் வேடமிட்டாள் பத்திரகாளி ,கைகள் பல கொண்ட கருங்காளி . இரண்டு வேடங்கள் உடல் ஒன்றே ராஜாமணி நாடாரும் ஒரு வேடம்தானே அன்றோ ? இவர் அங்கு செல்ல அவளிங்கு புறப்பாடு முதலில் ராஜாமணி நாடார்தான் பத்திரகாளியம்மனை தன் வேடத்திற்குள் அழைத்தார் விரதம் தொடங்க வேடத்தினுள் நுழையத் தொடங்கினாள் அம்மன். கஷ்டப்பாடுதான் அவளுக்கு இடங்கொடுத்துக் கொடுத்து வீங்கத் தொடங்கிற்று ராஜாமணி நாடாரின் உடல் அவள் ஒரேநாள் விரதத்தில் மேல்வந்து சாடிவிடமாட்டாள் என்பதை நன்கறிவர் அவர் ராஜாமணி நாடார். ஒவ்வொருபடியாக மெல்ல மேலேறி உடல் கட்டுமானத்தில் அவள் ஏறி உட்கார பரவெளியில் கைவிரித்தெழுந்தன அம்மனின் விஸ்வரூப கைகள் விரிந்த கோலம் . அம்மன் புத்தாடையாக தனது உடலை எடுத்துக் கொண்டதை அறியாத ராஜாமணி நாடார் அவசரமாக வேடம் கலைத்து விரதம் முறித்த அன்று கடலுள் இறங்கிச் சென்றது வேடம் மிஞ்சிய உடலெங்கும் பரவெளியில் அலையும் காளியின் கைகளின் நமநமச்சல் வேடம் விட்டகன்ற இடமெங்கும் முளைத்த உடல் கருங்காளியின் ஒரு பெரிய வடு "ஒரு கள்ளக் கோழியடித்து உண்...

நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால்

Image
நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால் என்னைப் பற்றிய கதைகள் எத்தனை என்று கணக்குப் பார்த்தால் ஒரு மனிதனாக வாழுவதற்குப் போதுமானவையாகவே அவை உள்ளன.பெரும்பாலானவை ஸ்வாரஸ்யத் தன்மை குன்றாதவை.சக மனிதன் கொள்ளவேண்டிய கற்பனைக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லையெனில் அப்படியொரு வாழ்க்கை வாழ அவசியமா என்ன ? பரிதாபகரமான எளிய கற்பனைகளை நான் பொருட்படுத்தவில்லை.ஒருவர் என்னை ஐயர் என்று எழுதுகிறார்.ஐயங்கார் என்றேனும் சொல்லக் கூடாதா ? மற்றொருவர் சைவப் பிள்ளைமார் என்கிறார் .நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்றேனும் கணக்கிடக் கூடாதா? இந்து நாடார் என்று கண்டு பிடிப்பதற்கெல்லாம் ஏதேனும் புத்திசாலித்தனம் தேவையா என்ன ? சாதித் சான்றிதழ் மட்டும் போதுமே ! பற நாய் என்று சதா என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு அம்மையாரும் இருக்கிறார்.நல்லது.சாதிக் கற்பனைகள் அலுப்பூட்டுபவை.கற்பனையின் சாத்தியப்பாடுகளே அற்றவை. என்னுடைய ஆண்குறியின் நீள அகலத்தை சதா கணக்கிட்டுக் கொண்டேயிருக்கும் பழைய நண்பர் ஒருவர் உண்டும்.ஆர்வத்திற்குப் பஞ்சமற்றவர் அவர்.என்னிடம் பழக்கம் கொண்ட எதிர்பால் நண்பர்கள் அனைவருக்கும் என்னோடு தொடுப்பு என்னும...

எழுதுகிறவனின் பொறுப்பு.

Image
எழுதுகிறவனின் பொறுப்பு. எங்கள் ஊரில் மண் வெட்டுபவனுக்குச் சம்பளம் ரூ 700 . காலையில் 9 மணிக்கு வந்தால் மதியம் இரண்டுமணிக்குக் கரையேறுவார்கள்.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் எனக்கு மண்வெட்டுக்குக் கூலியாக 600 வரையில் கிடைத்திருக்கிறது.மதியம் 2 மணிக்கு மேல் கரையேறிவிடலாம் என்பதே இந்த கூலி வேலையில் உள்ள சௌகரியம்.உடலுழைப்பு சார்ந்த பிற வேலைகளுக்கு கையாளாகச் செல்லும்போது மாலையில் ஆறுமணிக்குத் தான் கரையேற முடியும்.அதிலும் நிர்வாகி மறுநாள் வேலைக்கான பொருட்களை சேகரிக்கவோ , வேறு ஏதேனும் பணிக்கோ பின்னர் அழைத்தால் தட்டமுடியாது.வீடு வந்து சேர உடல் உண்டதும் உறக்கத்திற்கு அழைக்கும். ஒரு பனை ஏறி இறங்கச் சம்பளம் இப்போது நூற்றியைம்பது ரூபாய்.பத்து பனை ஏறி இறங்கத் தெரிந்தவன் நாளொன்றுக்கு ரூ 1500 பார்ப்பான்.அதில் 500 செலவென்றாலும் கூட ஆயிரம் மிஞ்சும்.பனையேற்றை கற்றுக் கொள்ளாமல் விட்டது தவறு.தென்னை ஏறத் தெரிந்தவன் ஆயிரத்திற்கு குறையாமல் சம்பாதிக்கிறான்.ஐயாயிரம் ரூபாய்க்கு மீன் வாங்கி விற்கத் தெரிந்த சாமர்த்தியத்திற்கு மதியத்திற்குள் 1500 பார்த்து விட முடியும்.கழிவறைத் துப்புரவு வேலைக்கும் செ...

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

Image
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. மருமக்கள் வழி மான்மியம் ,கவிமணி கவிதைகள் ஆகியவை சிறுவயதில் பள்ளிப்படிப்பு காலங்களில் மீண்டும் மீண்டும் படிப்பது என்பது ஒரு பழக்கமாக இருந்தது.தனக்கு ஏற்பட்ட சிரங்கை பற்றி அவர் எழுதிய சுய பகடிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. எனது பள்ளிக்காலத்தின் போது மறக்கவே இயலாத இரண்டு தமிழாசிரியர்கள் எனக்கு அமைந்தார்கள்.இருவருமே கவிமணி பேரில் பற்று கொண்டிருந்தவர்கள் . ஒருவர் ஆறு முதல் எட்டு வரையில் எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த ஆறுமுகம் பிள்ளை.பழந்தமிழ் மரபிலக்கியத்தில் வித்தகர் .கற்பிப்பதில் நிபுணர்.அதுபோல தமிழ்ப்பாடங்களை சொல்லித்தர இப்போது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை.அவர் என்மேல் ஒரு சாறு ஏற்றினார் என்று சொல்லலாம்.தமிழ் வகுப்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தமைக்கு அவரே காரணம்.மூல குரு.பின்னர் வேலாயுதம்பிள்ளை தமிழாசிரியர்.வேலாயுதம்பிள்ளை இலக்கணத்தை மணிமணியாக நடத்துவார்.மறக்கவே மறக்காது.எனினும் எனது மரமண்டைக்கு இப்போது மறந்து போனது.ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு அணியிலக்கணத்திற்கு தேர்வுத் தாள்களில் திருக்குறளை...