விளிம்புக்கு மற்றொரு பெயர் செம்மரக் கடத்தல்
விளிம்புக்கு மற்றொரு பெயர் செம்மரக் கடத்தல் மனிதவதை ஒரு தனித்த உயிரி.மனித அகத்தில் வளரும் தேவதை அது.மனிதனின் ஒரு மாய உறுப்பு அது.ஆண்குறியைப் போலவும் அல்லது பெண்குறியை போலவும் அதற்கு அழகுண்டு.தவிர்க்க இயலா ஏழாம் பாகம் .அது குரூரமானது என்கிற பிரகடனத்தின் உள்பாகத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்வது.மனித நாகரிகம் வளருவதாக நம்பும் ஒவ்வொரு கணத்திலும் அதுவும் புதிய அழகுணர்ச்சிகளுடன் வளைந்து கொண்டே இருக்கிறது.இல்லையென்பாரிடம் முதுகில் எவ்வாறு இனிப்புடன் ஏறியமர்ந்து கூடுகட்டிக் கொள்வது என்பது அதற்குத் தெரியும் .பழைய காலங்களில் கரடு முரடாக இருந்ததைக் காட்டிலும் நவீன அமைப்புகளில் அதற்கு நேர்த்தி அதிகம்.அதனை பொய்யின் பேராலும் அனுமதித்தோமெனில் மிகவும் உற்சாகம் கொண்டு விடும்.இது எதிரிக்கானது என்பது போல அது முதலில் பாசாங்கு செய்யும்.அது சுயவதை என்பதை கண்ணுக்குப் புலப்படச் செய்யாதவரையில்தான் அது தனது சாமர்த்தியத்தை காக்க முடியும்.அதனை பொய்யின் பேராலும் அனுமதிக்கத் தொடங்கும் போது அது மனதின் பிற நுட்பமான உறுப்புகள் அத்தனையையும் கொன்று விடும்.அதன் சாமர்த்தியம் அதுவே . செம்மரக் கடத்தல் என்னும்...