உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்
உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம் எனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத் தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100 கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன. தூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில் அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்னையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக் கொண்டே இழுத்து வந்தேன்.கழிந்த ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான் மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம் முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள் கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும் செய்யும்."அப்பாவை புனிதப்படுத்துதல் "கவிதை நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.பலர் ...