"பிரணவ் ஸ்கேன் சென்றர்" மற்றும் சில கவிதைகள்
பிரணவ் ஸ்கேன் சென்றர் ஸ்கேன் சென்றரில் மரணத்தின் முன்பாகக் காத்திருக்கும் முகங்கள் அனைத்தையும் தெரிவித்து விடுகின்றன போதும் போதும் எவ்வளவு பார்த்தாயிற்று ? இவ்வளவு விரைவாகவா ? முடிந்து விடுமோ ? இதற்காகத்தானா ? இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ ? பாதி கூட முடியவில்லையே ? நிறைய வலி இருக்குமோ ? சரியாகத்தான் போராடியிருக்கிறேன் ? எவ்வளவு தவறுகள் ? அகங்காரத்திற்கு ஒரு தலையணை தரக் கூடாதா ? ஒவ்வொரு முகத்திலும் தனித்தனி மொழி ஸ்கேனிங் தொடங்குவதற்கு முன்னரே முகங்கள் அனைத்தையும் பேசி விடுகின்றன எந்திரம் ஒவ்வொரு முகத்தையும் கூண்டுக்குள் மெல்ல நகர்த்தி அழைத்துச் செல்கிறது முகங்கள் பெற்றிருக்கும் உடல்களுக்காக # 2 குழந்தையை அழைத்து கடைவீதிக்கு வந்த அப்பன் முதலில் இல்லாததை கேட்டான் ஆனால் என்னிடம் அது இருந்தது இருக்கிறது என்றேன் இருந்ததில் இல்லாததைக் கேட்டான் ஒவ்வொன்றாக எடுத்து முன் வைத்தேன் எல்லாமே இருந்தது இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா என்றான் மீண்டும் உண்டு என்றேன் இருப்பதில் இல்லாத ஒன்று வைத்துக் கொள்ளச் சொல்லி குழந்தையைத் திருப்பித் தந்தேன் பேரம் பேசும் போது என் தோளின் மீதெறி நின்று தந்தையை...