R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ?

R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ? சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து தடியடி நடத்திய கையோடு R .S .S பேரணி நடத்தியிருக்கிறது.அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் 144 தடை அமலில் இருக்கும் காலத்தில் சென்னையில் இந்த பிரம்மாண்ட பேரணி நடைபெற்றிருப்பதுதான் வியப்பை தருகிறது. வழக்கமாகவே எந்த அரசு அதிகாரத்திற்கு வருகிறதோ அந்த காலங்களில் அந்த அரசுகளின் கடைநிலைக் குழுக்கள் கால்களை கொஞ்சம் அகட்டிவைத்து வேகமாக ஆட்டி நடப்பது வழக்கம்.இந்த கடைநிலைக் குழுக்கள்தான் பலசமயங்களில் அதிகாரத்தின் மூளையாக ,அதிகாரத்தை இயக்குபவர்களாக இருப்பார்கள்.இது அனைத்து விதமான கட்சிகளுக்கும் பொருந்தும்.தி.மு.க வந்தால் வட்டச் செயலாளரின் வயிறு பெருப்பதை போல .அ .தி.மு.கவில் புரோக்கர்கள் சட்டைக் காலரை கொஞ்சம் தூக்கி விட்டுக் கொண்டு அலைவார்கள்.கேரளாவில் பிரணராயின் கம்யூனிஸ்ட்கள் வந்ததிலிருந்து கட்சி மாபியாக்கள் தலை தூக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாமே வழக்கமான நடபடிகள்தாம் .வழக்கமாக காணும் அனுபவிக்கும் காட்சிகள்தான். ஆனால் பாருங்கள் பா.ஜ.கவி...