நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு

நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு நாகர்கோயில் "நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு "ஜெயமோகனுடன் ஒரு நாள் " சந்திப்பு நடைபெற உள்ளது.காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா.தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும். நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும் ,சக படைப்பாளிகளுக்கும் உள்ளது.அவர்கள் பலமுறை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள்.அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது. ஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை.ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும்...