"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"
"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" நான் சந்திக்கிற இளைஞர்களில் பத்தில் ஏழுபேர் சொல்லுகிற குறை மிகவும் பொதுவானது." என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்று சொல்கிறார்கள்.பெரும்பாலும் அவர்களிடம் உங்களை எதற்காக பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? என்றே திருப்பி கேட்கிறேன்.நீங்கள் யார் யாரை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? இருக்கட்டும் .பிறர் உங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் யார் ? ஏதேனும் கறவை மாடுகள் வைத்து விவசாயம் செய்கிறீர்களா ? இல்லை வாத்து மேய்க்கிறீர்களா ? எதற்காக உங்களைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? நீங்கள் யார் ? இப்படி கேட்பதால் பெரும்பாலும் அவர்கள் அகம் உடைந்து போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.பிறகு இப்படி அகம் உடைப்பவனோடு வாழ்நாள் முழுதும் பகையாகவே இருப்பார்கள்.தமிழில் இப்படித்தான் நடக்கிறது.ஏனெனில் இது அகம் உடைகிற இடம் மட்டுமல்ல அகந்தை உடைகிற இடமும் கூட . பெரும்பாலும் இந்த குரல் செயலின்மையின் குரல்.நான் எதுவும் செய்ய மாட்டேன் ஆனால் என்னை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படி நடக்கும் ? எதையேனும் செய்து கொண்ட