ஐரோம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல.

ஐரோம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல. ஐரோம் ஷர்மிளாவின் திருமணம் இங்கே பிரச்சனையாகவில்லை.அவர் இந்தியாவின் எந்த இடத்திலும் தனது அமைதியான வாழ்க்கையைத் தொடரமுடியும் .இந்த போராளிகள் எங்கு சென்றாலும் தங்கள் விதியின் சுருளையும் எடுத்துக் கொண்டுதான் செல்கிறார்கள் .அதுதான் பிரச்சனையே.அவர்கள் கொண்டிருக்கும் தன் முனைப்பின் இருள் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை.கொடைக்கானலிலும் ஒரு போர்ச் சூழலை ஏற்படுத்துவேன் என அவர்கள் சபதமேற்பதுதான் சிக்கலாகிவிடுகிறது. இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துவேன் என்கிற விதத்தில் ஊடகங்களில் இவர்கள் ஏற்படுத்துகிற அச்சமே சிக்கலுக்கு காரணம்.மக்கள் இவற்றை ஏற்பதில்லை. பிரபலமான ஒரு மனிதர் தான் செல்கிற இடமெங்கும் தன் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவேன் என கோசமிட்டுக் கொண்டே சென்றால் என்னவாகும் ? இந்த போராளி மனோபாவத்தின் சிக்கலான அம்சம் ,தங்களை சாமானியர்கள் இல்லை என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.அவர்கள் எப்போதும் தங்களை குட்டி சாம்ராஜ்யத்தின் எஜமானர்கள் என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.பல போராளிகளின் உளப்பாங்கு இதுதான்.நிலவுடைம...