கன்னியாகுமரி பகவதி தேவியலங்காரம்
1 இருநூறு வருட ஜமீன் வீடு சாலையில் பத்தடிக்கு தாழ்ந்து கிடக்கிறது ஆனால் ஜமீன் வீட்டு மாடுகளுக்கு ஆயிரம் வயது அவை சமவெளியில்தான் மேய்கின்றன தாழவில்லை ஒவ்வோர் ஆண்டும் மணல் அள்ளிப் போட்டு ஜல்லியடித்து உயரும் தார்ச்சாலைகளை பள்ளத்துக்குள்ளிருந்து தலைநீட்டி எம்மாம் பெரிய ரோடு என வியக்கும் சின்ன ஜமீனுக்கு இன்றைய தேதியில் துணை பக்கத்தில் வாழும் பொய்முலை இசக்கி 2 காந்திமதியம்மன் இரட்டைச் சடை பின்னல் போட்டு நகரப்பேருந்தின் ஜன்னலோரம் தூங்கிக் கொண்டிருக்கிறாள் தலையசைந்து மோதி மீட்டும் துயில் பிறைவடிவ மல்லித் தொடர் கூந்தல் திரையிசைப் பாடல்களுக்கு ஏன் பாடிக் கொண்டிருக்கிறோம் ? என்னும் திசைக் குழப்பம் உச்சி வெயிலில் நெல்லையப்பர் நடையடைத்திருக்கிறது 3 அபிராமி துவைத்துக் போட்ட ஆடைகள் மேல்மாடிக் கொடியில் ஆடுவது பார்த்து திரும்பிக் கொண்டிருக்கும் தம்பி நேற்றே குளியலறையில் யாருக்கும் தெரியாமல் சோப் திருடிய திருடருடன் சென்றிருக்கிறாள் திரும்பி வர நாளாகும் அபிராமிக்கு மட்டும் பின்புறம் எப்படி கச்சிதமாய் அமைந்திருக்கிறது என்று வியக்கும் பேய்முலைகள் கண...