கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?



கிறிஸ்தவ அரசியல் என்ற ஒன்று இருக்கிறது.இருக்கவும் வேண்டும்.அதுபோல நாடார் அரசியல்,தேவர் அரசியல் ,வன்னியர் அரசியல் , தலித் அரசியல் எல்லாம் இங்கே உண்டு.இவற்றிலும் கிறிஸ்தவ நாடார் அரசியல் வேறு.இந்து நாடார் அரசியல் என்பது வேறு.இந்து வெள்ளாளர்களின் அரசியலும் கிறிஸ்தவ வெள்ளாளர்களின் அரசியலும் ஒன்றல்ல.பிராமண அரசியல் தனிவகை.இன்று பா.ஜ.க ; ஆர்.எஸ் .எஸ் சக்திகளால் முன்வைக்கப்படுகிற இந்து அரசியல் என்பது இந்துக்களின் அரசியல் அல்ல.அது ஒற்றை இந்துத்துவாவின் அரசியல் .பன்முகத்தன்மையை ஏற்காத அரசியல் அது.
இவை ஒவ்வொன்றும் என்னென்ன ,இவற்றின் சமூகவியல்,உளவியல் நாட்டமென்ன ? என்பதை புரிந்து கொள்ள விரிவான கண்ணோட்டம் அவசியம்.இதில் எது ஒன்றிற்கும் அர்த்தமில்லை,முக்கியத்துவம் இல்லை என்று விவாதிக்கும் குரல்கள் அனைத்துமே தங்கள் குழுவினரின் அரசியலுக்கு அப்பால் உள்ளவற்றை மறுதலிக்கும் குறுகிய தன்மை கொண்டவை.வன்னியர் அரசியல் மிகவும் பின்தங்கியது .நவீனமடையாதது.
இந்த அரசியல் அனைத்திற்குமே சமூகத்தில் இடமுண்டு.குழு குழுவாக வாழ்கிற ஒரு சமூகத்தில் இவையெதுவுமே புறக்கணிக்கத்தக்கன அல்ல.கிறிஸ்தவ நாடார் ஒருவர் இந்து நாடார் ஒருவரின் அரசியலை ஏற்க மறுப்பாரேயாயின் அவர் கிறிஸ்தவ அரசியலை அனைவருக்குமானது என்று நிறுவி மேலாதிக்கம் செலுத்த விரும்புகிறார் என்பது பொருள்.அது போலவே இந்து தலித்துகளுக்கான அரசியலும் ,கிறிஸ்தவ தலித்துகளுக்கான அரசியலும் ஒன்று அல்ல.நுட்பமான வேறுபாடுகள் கொண்டவை.புரிதலின் வசதிக்கான அடிப்படைகளாக இவற்றை கோட்டிட்டுக் காட்டுகிறேன் .இருக்கட்டும்.இப்படியாக நுட்பமான வேறுபாடுகளின் ஒருமுகம் நாம் வாழுகிற சமூகம்.
இந்துத்துவா அரசியல் என்பதை ,இஸ்லாம் அரசியல் என்பதையெல்லாம் இன்று ஓரளவுக்கேனும் மங்கலாகவேனும் தெளிவற்ற நிலையிலேனும் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் கிறிஸ்தவ அரசியல் என்பதை பற்றிய புரிதல் யாருக்கேனும் இருக்கிறதா ? அது என்ன ? அது எப்படியானது ? பல்வேறு சாதி பிரிவுகளாக செயல்படுகிற கிறிஸ்தவ மார்க்கிகளுக்கும் அதற்கும் தொடர்பு உண்டா ? அதாவது கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்தவ அரசியலுக்குமான தொடர்பு என்ன ? என்றால் கிறிஸ்தவ அரசியல் என்பது எழுபத்தைந்து சதமானம் கிறிஸ்தவனோடு தொடர்பு கொண்டதல்ல.அது பிரதானமாக கிறிஸ்தவ நிறுவனங்களோடும் ,கட்சி கொள்கை அரசியலோடும் தொடர்பு கொண்டது.
நேரடியாக தன் மக்களைக் கொண்டு கிறிஸ்தவம் அரசியலை முன்வைப்பதில்லை.பிற கொள்கை நிலைப்பாடுகளை ,கட்சிகளை பயன்படுத்தி தன் அரசியலை முன்வைக்கும் சாதுர்யம் கொண்டது கிறிஸ்தவம் .இங்கே தி.க ; தி.மு.க போன்ற தரப்புகள் கிறிஸ்தவ அரசியலையே முன்வைக்கின்றன.தமிழ்த்தேசியத்தின் பெரும்பகுதியினர்,மக்கள் அதிகாரம் ,மே 17 போன்ற தரப்புகள் கிறிஸ்தவ அரசியலை முன்னிறுத்தும் தரப்புகளே.கூர்மையாக அவற்றின் அரசியல் அணுகுமுறையை கவனிப்பவர்களுக்கு இது விளங்கும் .
இன்றைய காலகட்டத்தில் அனைத்துவிதமான பொதுமக்கள் தரப்பினரும் ஊடகத்தின் முன்பாகவே நிறுத்தப்பட்டிருக்கிறோம்.ஊடக விவாதங்களில் பாருங்கள் ; இந்துத்துவா தரப்பிற்கென்றானால் நேரடியாக இந்துத்துவா வலதுசாரிகள் முன்னிற்கிறார்கள்.இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தரப்பிற்காக இருப்பினும் சரி , இஸ்லாமிய தரப்பிற்கென்றாலும் சரி நேரடியாக இஸ்லாமியர்கள் முன்னிற்கிறார்கள்.
கிறிஸ்தவதரப்பிற்கு இப்படி யாரேனும் வருவதைக் காண்கிறீர்களா ? இயலாது.அதற்குப் பதிலாக கட்சிகள், கொள்கை அமைப்புகள் அவற்றின் பிரதிநிதிகளே வந்து சேர்வார்கள்.இதில் உளவியல் நிபுணர்கள் என்கிற போர்வையில் வருகிற மருத்துவர்கள் கூட இருக்கிறார்கள்.ருத்ரன்,ஷாலினி போன்றோரின் விவாத அணுகுமுறைகள் கிறிஸ்தவ அரசியலை முன்வைப்பவையே.தங்கள் தரப்பிற்காக நேரடியாக வருபவர்கள் ஒருவகையில் அப்பாவிகளே.பிக் பாக்கட் திருடர்களை போல , கிறிஸ்தவ அரசியலை முன்வைப்பவர்கள் பலசமயங்களில் கிறிஸ்தவராகவே இல்லாத ஆன்லைன் திருடர்களை போன்றவர்கள்.முகம் காண்பதரிது.
கிறிஸ்தவ தரப்பினர் எப்போதுமே தத்துவ பின்புலம் கொண்ட ,நீண்ட நெடிய மரபு கொண்ட ,சிந்தனைப் பின்புலம் கொண்ட சைவம் ,வைஷ்ணவ இந்து பிரிவினரையே தாக்குவதை நீங்கள் கவனிக்கலாம்.பல நூற்றாண்டுகளாக இந்த தொடர் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.ஆள் வைத்து தாக்குகிறார்கள் .தாக்குவார்கள் சித்த போதத்தோடுதான் தாக்குகிறார்களா ,இல்லை சித்த போதமின்மையோடு செய்கிறார்களா என்பது முக்கியமில்லை.கிறிஸ்தவம் உருவாக்கித் தந்திருக்கும் கருவிகளைக் கொண்டு இந்து உயர் சமயம் மீதான தாக்குதல் நடைபெற்று வருகிறது.ஏன் இப்படி செய்கிறார்கள் ? இந்து உயர் சமய சார்பு நிலையை ஏன் அவர்கள் மேல்நிலையாக்கம் என்கிறார்கள் ? அப்படியானால் கிறிஸ்தவத்திற்கோ,இஸ்லாத்திற்கோ,பௌத்தத்திற்கோ,சமணத்திற்கோ பூர்வீக வழிபாட்டு நெறிகளில் இருந்து நிலையுயரும் மக்கள் மேல்நிலையாக்கம் செய்யப்படவில்லை என கருதலாமா ? இருக்கட்டும்
எங்கள் பகுதி தொடர்ந்து கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு உட்படுகிற பகுதி.கிராம தெய்வ வழிபாட்டு நெறிகளில் இருந்து சைவம் நோக்கியோ வைணவ தாக்கம் அதிகமுள்ள அய்யா வைகுண்டரின் அய்யாவழி நோக்கியோ நிலை உயர்த்திக் கொள்ளும் மக்களிடம் மதம் மாறுவதற்கு இடமில்லை.பூர்வீக நெறிகளில் மட்டுமே இருந்து சமூகம் ,பொருளாதாரம் ,பண்பாடு ஆகியவற்றில் பல்வேறு காரணிகளால் பின்தங்கிவிடும் மக்களே கிறிஸ்தவ மதமாற்றிகளின் இலக்கு.
பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலும் சைவ சமய பண்புகளையோ ,அய்யாவழி பண்புகளையோ கொண்டிருப்போரிடம் அதற்கு வழி குறைவு.கிறிஸ்தவ மதம் மாற்றிகளின் இலக்கில் அவர்கள் வருவதில்லை.
நான்குபேர் கிறிஸ்தவ மதம் மாறினாலும் கூட நான்கு கோடிகளுக்கும் அதிகமான செலவில் அவர்களுக்கு ஆலயம் காட்டித் தரப்படுகிறது.சக சமூகத்தை பொருளாதாரத்தால் ,அதிகாரத்தால் மேலாதிக்கம் செலுத்த முயலுகிறார்கள்.ஒரு அம்மன் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்விக்க நூறு குடும்பங்களை உள்ளடக்கிய ஊருக்கு ஐம்பது வருடங்கள் ஆகும்.
ஐம்பது இந்துக் குடும்பத்தினர் வாழும் ஊர் எனில் இந்த கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய நான்பேர் வாழ்ந்த ஊரின் பெயரை கிறிஸ்தவத்துக்கு மாற்ற முயல்வார்கள்.பின்பு பின்பற்றிய கிராம தெய்வங்களை ஷைத்தான்கள் என விளிப்பார்கள்.சிவன் கஞ்சா கிறுக்கன் ஆகிவிடுவான்.கிருஷ்ணன் ஸ்திரி லோலன்.ராமன் துரோகி.தாங்கள் ராவணாதிகள்.இப்படி அவர்கள் பாதை சென்று கொண்டிருக்கும்.இங்குள்ள பாதிரிகள் ஒருவருக்கு கூட திறன் மிக்க சைவ பாண்டித்யம் அடைந்த மகான்களிடம் ,வைணவ ஆச்சாரியார்களிடம் சிறப்பாக பேசுவதற்கு ஒரு வாக்கியம் கூட கிடையாது.இந்து உயர் நிலைகளை ஆள் வைத்துத் தாக்குவதற்கு கிறிஸ்தவத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் கிடையாது.மதம் மாற்றமே அவர்களின் ஒரேயிலக்கு.இஸ்லாமியர்கள் எங்கள் பகுதிகளில் ஒருபோதும் மதம் மாற்றத்தை இலக்கு செய்து நடப்பதில்லை.அந்த விதத்தில் பாராட்டிற்குரியவர்கள் அவர்கள்,தங்களுக்கு இடையூறு ஏற்படுமாயின் மட்டுமே கிளர்ந்தெழுகிறார்கள்.கிறிஸ்தவர்களால் மத மாற்றத்தை இலக்காகக் கொள்ளாமல் எந்த காரியத்தையுமே செய்ய இயலாது.இந்து உயர்நிலை சமயங்கள் அதற்கு இடையூறானவை என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள்.
பூர்வீக நெறிகளில் இருந்து மக்கள் மேலுயர சிந்தனை மரபு கொண்ட மெய்ன்ஸ்டீமில் உள்ள மதங்களையே சென்று சேர முடியும் .அதுவே பிராசஸ்.கிறிஸ்தவம் ஏன் இந்து உயர்மரபுகளைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது என்பதற்கு பதிலும் இதுவே .இதற்கு வாதாடும் கட்சிகளும் கொள்கைகளும் ,சமூக சேவைகளும், கிறிஸ்தவத்தின் அல்லக்கைகள் என்பதறிக...பெரியார் அல்லக்கைகளின் பிரதான நாயகன் அன்றி வேறொன்றுமில்லை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"