கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

 கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்




இங்குள்ள லிபரல்ஸ் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.அதற்குரிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்துவார்கள்.கோவிட் தொற்றும் அதற்கு விதிவிலக்கில்லை.அவர்கள் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளையும் சிறுமை செய்பவர்கள்.ஊடகங்களில் ,கட்சிகளில் என்று இன்று நிறைந்திருப்பவர்கள்.இன்று அவர்கள் தமிழ் நாட்டில் அதிகாரத்தின் ஆயிரம் கரங்கள் கொண்டவர்கள்.பிழைப்பு உடன்பாடு கொண்டவர்கள்.அசுரர்கள்.
அவர்கள் எழுப்புகிற வாதங்களை மனதில் கொண்டு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் இராதீர்கள்.அவர்கள் நள்ளிரவுகளில் சென்றேனும் எடுத்துக் கொள்வார்கள்.அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் எடுத்துக் கொண்டாயிற்று.மீதம் பேர் வரிசையில் நிற்கிறார்கள்.அவர்களைக் காது கொடுத்து நீங்கள் ஏமாந்து போகாமலிருங்கள்.ஏனெனில் இது உங்களுடைய ,என்னுடைய உயிர் சம்பந்தபட்ட விஷயம்.
கோவிட் தொற்று பற்றி நிபுணர்கள் மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.ஆனால் நம் காதுகளில் அது வந்து சேருவதற்கு முன்னரே லிபரல்ஸ் உண்டாக்கும் குழப்பங்கள் நம்மை வந்தடைந்து விடுகின்றன.தடுப்பூசிகள் வருவது வரையில் இந்தியா ஒரு நாடா ? எப்போது தடுப்பூசிகள் கண்டுபிடிப்பீர்கள் என்றவர்கள் தடுப்பூசிகள் அரசு மருந்தகங்களுக்கும் ,சந்தைக்கும் வந்து சேர்ந்த உடன்தானே இவை பயனற்றவை ,விளைவு கொண்டவை என்கிற குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.கோவிட் தடுப்பூசி விஷயத்தில் மக்களைப் பெருவாரியாக தடுக்கும் சக்தி இவர்களே.ஆனால் புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் எடுத்தாயிற்று.எங்கேனும் ஒரு லிபரலேனும் இன்னும் எடுக்காமலிருப்பானா ? என்றால் அது அரிதே.
உங்களையும் என்னையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் தடுப்பதுதான் அவர்கள் இலக்கே அன்றி,அவர்களுக்கு எடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்சனைகள் கிடையாது.அனைத்தையும் சந்தேகிக்கிற நம்முடைய குல மனப்பாங்கை அவர்கள் இவ்விஷயத்திலும் பயன்படுத்துகிறார்கள்.தடுப்பூசி இதுவரையில் எடுத்துக் கொள்ளாதவர்கள் இதன்மூலம் ஏகதேசமாக ஒருமாத காலத்தை வீணடித்துவிட்டு கோவிட் தொற்றின் காட்டுத்தீ பரவலுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறோம்.
கோவிட் தடுப்பூசி பற்றி சில விஷயங்களைச் சொல்கிறேன்.இன்னும் எடுத்துக்கொள்ளாதிருப்பவர்கள்,உடனடியாகச் சென்று அதிக முண்டுதல் இல்லாத அரசு,தனியார் மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் முன்பதிவு செய்தேனும் வைத்திருங்கள்.வரிசையில் உங்களுக்கான அழைப்பு வருகையில் அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தொற்றுக்கான ஆபத்தின் முன்பாகத்தான் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.
தொற்றின் தொடக்கத்தில் முகக் கவசம் அணிவது பற்றி முச்சந்தியில் ஏளன வசனம் செய்து பேசிய பலர் இப்போது உயிருடன் இல்லை.இந்த காலத்தில் கறுப்பு வெள்ளை புகைப்படமானவர்கள் அனேகம்பேர்கள்.நீங்களும் நானும் கூட அந்த வாய்ப்பின் முன்பாகத்தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக நினைவில் இருக்கட்டும்.
இரண்டாவது அலை கொத்துக் கொத்தாக இளைஞர்களைத் தாக்கி முதியவர்களை வந்தடைகிறது.இளையவர்களிடம் அது கடந்து போய்விடும்.ஆனால் 45 லிருந்து 65 மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.ஏனெனில் இந்தியாவில் 45 லிருந்து 65 வயதில் இருப்பவர்கள் நிரம்பிய பொறுப்புகளில் இருந்து கொண்டிருப்போம்.ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கூட்டிய கனவுகள் பலவீனம் பெறுதல் ஆகாது.இரண்டாவது அலை கோவிட் தொற்றுக்கு அசாதாரணத்தன்மைகள் இருக்கின்றன.முன்னதைப் போலில்லை
கோவேக்ஸின் தடுப்பு மருந்து
அரசு ஆரம்ப சுகாதார மையங்கள்,மருத்துவமனைகள்,மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் போடப்படுகின்றன.இரண்டு நாட்கள் ஆற்றும் பணிகளுக்கு அதிக குந்தகம் ஏற்படாத வகையில் சில சிரமங்கள் உண்டு.சிறிய காய்ச்சல் வரும்,வராதவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் பொதுவாகவே எந்தவொரு தடுப்பு மருந்தும் சில சிறிய எதிர்விளைவுகளை உண்டாக்கினால் மட்டுமே அது வேலை செய்கிறது என்று பொருள்.இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு 80 சதமானம் நோய்தடுப்பு உத்திரவாதத்தை உடலில் அடைகிறார்கள்.இதுவே மிகப்பெரிய கவசம்.
எனினும் எச்சரிக்கையாயிருத்தல் அவசியம்.முகக் கவசம்,கைகளைக் கழுவுதல் ஆகியவற்றில் சமரசத்திற்கே இடமில்லை.நம்முடைய துப்பும் பழக்கம் நோய் பரவும் விதத்தில் கணிசமான பங்கினை ஆற்றுகிறது.தெருக்களில் மூக்கு சீந்தி,காறி உமிழ்ந்து செல்லுதல் எல்லாம் நடத்தைக் கோளாறுகளே. நம்மில் அனேகம் பேருக்கு இந்த நடத்தை கோளாறுகள் இருக்கின்றன.
கோவி ஷீல்டு
தனியார் மருத்துவமனைகள் கோவி ஷீல்டு.கொஞ்சம் கவரேஜ் அதிகம்.அதுபோல எதிர்விளைவுகளும் சற்று அதிகம்.கோவேக்ஸின் இரண்டு நாட்கள் சிரமம் எனில் இது மூன்று நாட்கள் சிரமம்.இல்லாதவர்களும் இருப்பார்கள்.
எதனை வேண்டுமாயினும் நீங்கள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.எடுத்துக் கொள்ள வேண்டும் அதுவே முக்கியமானது.
வீட்டில் இருக்கும் முதியவர்களை அழைத்துச் சென்று போட்டுவிடுங்கள்.ஒருவேளை அவர்கள் இருப்பதால் நீங்கள் இடையூறு அடைபவர்களாக இருக்கலாம்.ஆனாலும் அதற்கு இந்த சந்தர்ப்பத்தை தயை செய்து பயன்படுத்தாதீர்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"