இந்த வெற்றி மிகவும் முக்கியமான வெற்றி ஒன்றும் அல்ல

 இந்த வெற்றி மிகவும் முக்கியமான வெற்றி ஒன்றும் அல்ல



இந்த வெற்றி மிகவும் முக்கியமான வெற்றி ஒன்றும் அல்ல
பத்தாண்டு காலத்திற்குப் பிறகு ,சிலபல வீட்டுப்பாடங்கள்,கூலி யுக்திகள் வழியே இந்த சிறிய வெற்றியை தி.மு.க அடைந்திருக்கிறது.இது உண்மையாகவே உயிர் போராட்டம் அவர்களுக்கு.
மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த வெற்றி மிக மிக தற்காலிகமானது.ஏற்கனவே அவர்களுக்கான இந்த இடத்தைப் பிடிப்பதற்கே இந்த தேர்தலில் பெரும் முக்கு முக்கியிருக்கிறார்கள்.இந்த வெற்றி பலரும் எதிர்பார்த்த வெற்றியும் கூடத்தான்.இருபது தொகுதிகள் குறைவாக வந்திருப்பார்களேயானால் எதிர்தரப்பினர் வகுத்த இடத்தில் இந்த வெற்றி அமைந்திருக்கும்
பா.ஜ.க,கமல் ,சீமான் ஆகியோர் வந்திருக்கும் அளவிற்குக் கூட இந்த தேர்தலில் தி.மு.க அடைந்திருப்பது முக்கியமானது அல்ல.கேரளத்தில் கம்யூனிஸ்ட்கள் அடந்திருப்பது வெற்றி,பூரணமான வெற்றி.சந்தேகமே இல்லை.மக்கள் அவர்களை முழுமையாக நம்புகிறார்கள் என்பதையே முடிவுகள் தெரிவிக்கின்றன.தமிழ் நாட்டில் தி.மு.க அடைந்த வெற்றியை தற்கொலையை தடுத்தாட்கொண்ட வெற்றி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.மேற்கு வங்கத்தில் மம்தா அடைந்ததைக் காட்டிலும் அங்கே பா.ஜ.க இவ்வளவு இடங்கள் வந்திருப்பதுதான் வெற்றி.ஏகதேஸம் அங்கே கம்யூனிஸ்ட்கள் இருந்த இடத்தை நோக்கி பா.ஜ.க அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் கடந்த ஒருவார காலமாகவே முதலமைச்சாராக நடிக்கத் தொடங்கியிருந்தார்.பிரசாந்த் கிஷோர் சொல்லிக் கொடுத்த நடிப்புகள், கிஷோர் விரைவாக விட்டுவிலகும்
அளவிற்கே ஸ்டாலினுக்கு பயன்பட்டிருக்கின்றன.அதுவொரு தொழில் முறை ஏமாற்று வேலை என்பதே எனது எண்ணம்.கடந்த ஒரு வாரத்தில் சுயமாகவே ஸ்டாலின் முதலமைச்சராக நடித்துப் பார்த்தார்.
ஒருவேளை தோற்க நேர்ந்துவிட்டால் இவர் என்ன நிலைமைக்கு உள்ளாவார் ? என கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.வெற்றிக்கு முன்னரே வெற்றியை நடிப்பவர்கள் ,தோல்வியில் பலத்த பாடத்தைப் பயில்வதுண்டு.என்றாலும் அந்த சுய நடிப்பு அவருக்கு இனியுள்ள ஐந்தாண்டுகளைக் கடக்க கைகொடுக்கும்.அண்ணாமலையாரை மகள் கிரிவலம் சுற்றி வந்தது கைவிடவில்லை.பிரசாந்த் கிஷோரின் உபயோகத்தைக் காட்டிலும் இதுவே வீரியமானது என்பது எனது எண்ணம்.
எப்படியிருந்தாலும் அவரை கவனித்துக் கொள்ள குடும்பத்திலேயே பலபேர் இருக்கிறார்கள்.இந்த நடிப்பு வரவில்லை என்பதே பலருக்கும் கவலையாக இருந்தது.குற்றச்சாட்டாகவும் இருந்தது.ஏகதேஸம் அவர் இதுவரை வாழ்ந்தது இருபத்திமூன்றாம் புலிக்கேசி தளபதியாவே.இப்போது பிறிதொன்று கைவந்துவிட்டது.முதலமைச்சர் நாற்காலியே தனக்கு இல்லை போலும் என்றிருந்தவர் அவர்.அந்த இழுக்ககன்றது.மற்றபடி அவர் கைவிடும்,தவறும் இடங்களை உடனுக்குடன் இட்டு நிரப்ப ,உதவ நிறைய பேர் இருக்கிறார்கள்.மருமகன் சபரியே சிறந்த திறமைசாலி என்றுதான் சொல்கிறார்கள்.ஸ்டாலின் மகனுக்கு அடித்திருப்பது உண்மையாகவே கேரளா பம்பர் லாட்டிரிதான்.அதில் ஒரு சந்தேகமும் இல்லை.
தமிழ் நாட்டு மக்கள் திரைப்படங்களில் ஒரு இடைவேளை விட்டு பிஸ்கட்,பன்,தேனீர் எல்லாம் சாப்பிட்டு வருவது போல ,இந்த தேர்தலில் ஒரு இடைவேளையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.மகா புத்திசாலிகள் அல்லவா அவர்கள் ? யாரால் அறியக் கூடும் தமிழர்களின் மனோதர்மங்களை ? ரூபங்களை ? சேஷ்ட்டைகளை ?
நிலத் தரகர்கள்,மணல் மாபியாக்கள் மதியமே வெடிவெடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.சத்தத்தை நானும் காதால் கேட்டேன்.பத்தாண்டு பட்டினி .கொலைப்பட்டினியில் இருப்பவர்கள்.நிர்வாகம் ஒரளவேனும் நினைவைத் தரும் விதம் இருக்குமா தெரியவில்லை.பார்க்கலாம்.இருந்தாலும் இந்த கொளுத்தும் வெயிலில் விடிந்துவிட்டது எனக் கூவும் மேட் பீப்புளைத்தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.பரிதாபத்திற்குரியவர்கள் அவர்களே.
இடைவேளைக்குப் பிறகு மீதி படம் இனி ஓடும்.நன்றாக உள்ளதா இல்லையா என்று பார்த்துத்தான் சொல்ல முடியும்🤣🤘

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்