Posts

வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி

Image
வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி ; மனதால் எழுந்து வந்த பாதை பெரும்பாலானவர்களை பாதித்தவர் கல்யாண்ஜி . கவிதை எழுத விரும்பும் ஒருவர் அவரால் பாதிப்படையவில்லையெனின் இனி பாதிப்படைவார் .இரண்டு வகையினர் இங்கே இருக்க முடியும் .ஒன்று அவரால் ஏற்கனவே பாதிப்படைந்தவர் இல்லையெனில் இனி பாதிப்படையவிருக்கிறவர்.அன்றாடத்தின் பல நுட்பங்களை அவர் வாசகனுக்கும் கடத்திவிடக் கூடியவர்.சீண்டும் பண்பும் கொண்டவர்தான் என்றாலும் அது அவரில் மிகவும் சிறிய பகுதி.அன்பால் மூடியிருக்கும் பகுதி அது.தமிழில் வாசகர்கள் அதிகம் உள்ள கவிஞரும் அவரே. கவிஞர்களில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படையாகப் பேசியவர்கள் மிகவும் குறைவு.நவீனத்துவ விமர்சகர்கள் அவரை பொருட்படுத்தி பலமாக நிராகரித்தார்கள்.அதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.இந்த நிராகரிப்பையும் மீறி அவர் ,தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார். தமிழ் சூழலில் இதழியல்,விமர்சனம் கலையிலக்கியம் எல்லாவற்றிலுமே ஏராளமான பாரபட்சங்கள் உண்டு.அவற்றில் பல கண்களுக்கு புலப்படாதவை.சாதி,மதம் ,கருத்தியல்,கொள்கை ,கட்சி என நிறைய . இவற்றையெல்லாம் ஒருவர் எதனால் எதனால் ? என்...

இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது

Image
இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது அவர்கள் அதிகாரத்தில் இருக்கத் தேவையில்லை.இருக்கலாம் இல்லாமல் போகலாம்,அது பிரச்சனையில்லை. கருத்தியல் ரீதியில் அவர்கள் வீழ்ச்சியடையக் கூடாது.மக்களை புரிந்து கொள்வதில் பிழை செய்யக் கூடாது.அப்படி ஏற்படும் பிழைகள் இந்தியாவில் காங்கிரசை வீழ்த்தும். வடிகட்டிய இடதுசாரித்தனத்தை கொண்டதுதான் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி.நேருவிடம் இருந்து இது உருவாகிறது,இந்திரா காந்தியிடம் தொடர்கிறது.நரசிம்ம ராவ் ,மன்மோகன் என அதற்கு நெடிய மரபு இருக்கிறது.முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் பேசுகிற குரல் கொஞ்சம் வடிகட்டிய இடதுசாரி குரல் அவ்வளவுதான் .எனவே இடதுசாரிகள் இந்தியாவில் ஜீவனை விட்டால் காங்கிரசும் உடன் சேர்ந்து மரிக்கும் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சி துவழக் கூடாது .அதற்காகவேனும் இடதுசாரிகள் இன்றியமையாதவர்கள்.உலகளாவிய விதத்தில் இடதுசாரிகளை காங்கிரஸ் உள்வாங்கிய விதமே அவர்களில் பெரும்பாலானோரை மக்களை நோக்கி சிந்திப்பவர்களாக வைத்திருக்கிறது. கொஞ்சம் ஆழ்ந்து கவனிப்பீர்களேயாயின் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும்.மம்தா வங்கத்தில் இடதுசாரிகளுக்கு எதிரானவரே.ஆனால் மம்தா...

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?

Image
ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ? 1 சாலையின் மத்தியில் ஆலிலை ஒன்று சற்றே பழுப்பு சற்றே பச்சை நிமிர்ந்து நிற்கிறது அந்த பக்கமாக வாகனம் செல்கையில் இந்த பக்கமாக சுழன்று திரும்புகிறது இந்த பக்கம் வாகனத்திற்கு அந்த பக்கம் ஒற்றைக்கால் நடனம் என்ன நினைத்தானோ சிறுவன் ஊடே புகுந்து இலையை ஓரத்திற்கு உயரே எறிந்தான் நடனம் இப்போது மேலே பறக்கிறது. 2 ஒன்பது மகன்களை பெற்ற அப்பாவின் இளைய மகன் அப்பாவின் ஒரு கைமட்டும் பறந்து செல்வது போல வாகனத்தில் விரைகிறான் அப்போதுதான் கவனித்தேன் மீதமுள்ளோர் மீதமுள்ள அவயங்களாயிருப்பதை ஒன்பது அவயங்கள் பதினெட்டு கைகள் கால்கள் கண்கள் செவிகள் ஒரே புருஷன் 3 ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ? மிச்சம் வைத்த ஆசைகள் மிச்சம் வைத்த தகிப்புகள் மீதமிருக்கும் தாகங்கள் மீதமிருக்கும் வஞ்சம் உறுப்பு தேடித் கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றும் 4 சரியாகவே வாழ்ந்ததாகச் சொல்லி ஒரு பிழை விட்டீர்கள் அந்த பிழையே நானாக வளர்ந்து பெரிதானது இந்த பிழையைக் கொண்டு போய் அந்த இடத்தில் நட்டு வைக்க வேண்டும் இல்லாமல் தர்க்கம் பண்ணுவதில் ஒரு பலனும் இல...

சிறிதிற்குள் பெரிது இருக்கிறது

Image
உடல் தன்னளவில் ஆனந்தம் 1 எல்லையில்லா பிரபஞ்சம்  நமக்கு ஒரு கூடு கூட்டிற்குள் எல்லையில்லா பிரபஞ்சம் 2 எல்லையில்லா அருள் கனி உடல் தன்னளவில் ஆனந்தம் 3 அவ்வளவு பாய்ந்து செல்லும் வெள்ளத்தில் இருந்து நமக்குத் தேவை கையளவு நதி எடுத்துக் கொள்ளும் நதி பின்னர் நம்மை எடுத்துக் கொள்கையில் கையளவு கடல் 4 நம்முடைய கூடு சிறிது கூட்டிற்குள்ளும் சூரியன் கூட்டிற்குள்ளும் சந்திரன் கூட்டிற்குள்ளும் இரவு பகல் வளர்பிறை பௌர்ணமி எல்லாம் மிக மிக பெரிது பெரிது 5 நாமெல்லோருமாகச் சேர்ந்து எவ்வளவு கவனமாக சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம் ? 6 எவ்வளவு பசித்தாலும் தேவையொரு சிறு தான்யமே 7 பசி ஒருபோதும் பெரிதாகப் புசிப்பதில்லை 8 நாம் நிச்சயம் நாமே தாமா ? 9 எடுத்ததையெல்லாம் விட்டுச் செல்ல வேண்டும் வேறு வழி கிடையாது 10 என் பாத்திரம் முழுக்க சோறு யாரேனும் எடுத்து தின்ன மாட்டார்களா ? 11 தின்னக் கொடுத்தால் தொலைந்து போகும் 12 பெரிதிற்குள் சிறிதாக இருக்கிறோம் சிறிதிற்குள் பெரிது இருக்கிறது

தூரம் சென்று நீ திரும்பு

Image
தூரம் சென்று நீ திரும்பு 1 என்னுடைய ஊரே அதற்குள் வேறொரு இடத்தில் வாழ்கிறேன் தூரம் சென்று திரும்பியதால் கிடைத்தது அது என்னுடைய வீடே அகத்தில் இருக்கிறேன் தூரம் சென்று திரும்பியதால் வாய்த்தது இது என்னுடைய உடலில் நான் வாழ்கிறேன் மரணம் சென்று திரும்பியதால் அமைந்தது இது ஏதுவாகவேனும் இருக்கட்டும் தூரம் சென்று நீ திரும்பு 2 அம்மா எனக்குள் ஒரு பௌர்ணமி நிலவைப் போட்டாள் அது உடலின் கடிகாரம் ஆனது அப்பா அதனை கசப்பால் கசந்து ஒளிரவும் வைத்தார் சுழலத் தொடங்கியது ஆசான் அதன் மேல் நெய்யை ஊற்றினார் ஏற்கனவே இருந்த நெய்யுடன் இணைந்த நெய்யும் வாழ்வு முழுவதும் பற்றியெரிகிறது இருந்தாலும் இறுதியில் எரிக்கத்தான் செய்கிறார்கள் ஒன்றுமில்லாததென்று 3 துயரத்தை நோண்டிக் கொண்டேயிருக்காதீர்கள் அதுவொரு ஆதி மிருகம் ஆமைக்கு ஓட்டை அதுதான் கொடுத்தது ஏசுவை சிலுவையில் அடித்தது மேரியின் கையில் குழந்தையும் ஆனது கடையக்கடைய பாற்கடல் ஆனது அது எல்லோரும் ஆதி மிருகமாவதையே விரும்புகிறது அது மிகவும் தொன்மையான ரசம் தன் கண்ணீரிலேயே பரசவமுண்டாக்கும் தன் ரசம் ஒரு துளி பருக ஒரு ...

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

Image
எழுத்தாளனுக்கு வாசகனே உறவு எழுத்தாளனுக்கு வாசகனே உறவு தென்காசியில் சில கோயில்களை பார்த்து விட்டு திரும்பும் வழியில் விக்ரமாதித்தன் அண்ணாச்சி "நானோ நீயோ பத்துப் பதினைந்து வாசகர்களேனும் அமையாமற் போயிருந்தால் இந்நேரம் இருந்திருக்க முடியாது இல்லையா ? என்று கேட்டார்.பெருந்துர்க்கையை கண்டு திரும்பும் வழி அது.அவருடன் செல்கையில் வினோதமான கடவுள்களையெல்லாம் கண்டிருக்கிறேன்.பிறர் கண்டிருக்கிறார்களா தெரியாது.ஒருவேளையில் நானும் அவரும் இணைகையில் காணும் தெய்வங்கள் தாமோ அவை ! வெறி கொண்ட கோலம் .விஸ்வரூபம்.பெண் சாதாரணமாக இருக்கையிலும் விஸ்வரூபமே.இதில் விஸ்வரூபத்தில் நின்று கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? தமிழின் பெருங்கவிஞன் ஒருவன் ,தனது வாழ்வின் அநேக காலத்தை தெருவிலேயே முடித்தவன்,பெருந்துர்க்கை கண்ணிலேயே நின்று கொண்டிருக்கும் போதே கேட்ட கேள்வி இது.ஒரு சில வாசகர்கள் தான்.இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உடன் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.ஒருவன் அலுக்கும் வேளையில் மற்றொருவன் பிறந்து விடுகிறான்.செய்ய நினைப்பவை எதுவாயினும் எந்த தடங்கலும் ஏற்பட்டதில்லை.குறையில்லை. எப்படி தமிழில் எழுதுகிற கலைஞன் ஒ...

ஜெயமோகன் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடங்கள் - 1

Image
ஜெயமோகன் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடங்கள் - 1 சுந்தர ராமசாமி மீதோ ,அல்லது ஒருவேளை நாம் அருகிருக்கும் போதே வைக்கம் முகம்மது பஷீர் மீதோ இப்படியானதொரு தாக்குதல் நடந்திருக்குமாயின் எப்படியானதொரு நிலை குலைவு ஏற்பட்டிருக்குமோ அப்படியானதொரு நிலைகுலைவே எனக்கு ஏற்பட்டது.ஆனால் ஜெயமோகனின் இடம் என்பது அவர்களிலும் மேலானதொரு இடம் என்பதே என்னுடைய மதிப்பீடு.அவர்களின் தொடர்ச்சியிலிருந்து எழுந்து வந்த வேறொரு காலகட்டத்தின் இடம் ஜெயமோகனுடையது.புதுமைப் பித்தனிலும் சிறப்பானது.தொடர்ச்சியாக அவரை வாசிக்கும்தோறும் இந்த எண்ணம் வலிமையடையவே செய்கிறது.அவர் முகத்திலும் கழுத்திலும் உடலின் பிற பாகங்களிலும் காயங்களை காண மிகவும் கடினமாக உணர்ந்தேன் .சொற்கள் விக்கின. தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ,புற நகர்களில் தலித்தாக வாழ்வது எவ்வளவு சிரமானதோ,அதே அளவிற்கு தனி மனிதனாக வாழ்வதும் சிரமமானது.தலித்தாக ஒருவர் இருந்தால் அவர் தலித் என்பதற்காகவும் ,தனிமனிதனாக இருந்தால் அவன் பிறரில் இருந்து ஒதுங்கியிருக்கிறான் என்பதாகவும் சமூகம் தொந்தரவிற்குள்ளாக்கும்.தனி மனித வாழ்வை மேற்கொள்ளும் பலரும் தங்கள் சொந்த சாதியினருக்கு க...