Posts

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?

Image
கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ? கிறிஸ்தவ அரசியல் என்ற ஒன்று இருக்கிறது.இருக்கவும் வேண்டும்.அதுபோல நாடார் அரசியல்,தேவர் அரசியல் ,வன்னியர் அரசியல் , தலித் அரசியல் எல்லாம் இங்கே உண்டு.இவற்றிலும் கிறிஸ்தவ நாடார் அரசியல் வேறு.இந்து நாடார் அரசியல் என்பது வேறு.இந்து வெள்ளாளர்களின் அரசியலும் கிறிஸ்தவ வெள்ளாளர்களின் அரசியலும் ஒன்றல்ல.பிராமண அரசியல் தனிவகை.இன்று பா.ஜ.க ; ஆர்.எஸ் .எஸ் சக்திகளால் முன்வைக்கப்படுகிற இந்து அரசியல் என்பது இந்துக்களின் அரசியல் அல்ல.அது ஒற்றை இந்துத்துவாவின் அரசியல் .பன்முகத்தன்மையை ஏற்காத அரசியல் அது. இவை ஒவ்வொன்றும் என்னென்ன ,இவற்றின் சமூகவியல்,உளவியல் நாட்டமென்ன ? என்பதை புரிந்து கொள்ள விரிவான கண்ணோட்டம் அவசியம்.இதில் எது ஒன்றிற்கும் அர்த்தமில்லை,முக்கியத்துவம் இல்லை என்று விவாதிக்கும் குரல்கள் அனைத்துமே தங்கள் குழுவினரின் அரசியலுக்கு அப்பால் உள்ளவற்றை மறுதலிக்கும் குறுகிய தன்மை கொண்டவை.வன்னியர் அரசியல் மிகவும் பின்தங்கியது .நவீனமடையாதது. இந்த அரசியல் அனைத்திற்குமே சமூகத்தில் இடமுண்டு.குழு குழுவாக வாழ்கிற ஒரு சமூகத்தில் இவையெதுவுமே புறக்கணிக்கத்...

கண்டடைதலின் கவிதை

கண்டடைதலின் கவிதை லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதைகள் புதுக்கவிதையின் பழகிப்போன தேடல் ,சலிப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக கண்டடைதலை, அதில் உளம் அமைதலை காட்டுகின்றன. அதற்குரிய ஒரு ‘ நெஞ்சோடு கிளத்தல்’ மொழி அமைந்துள்ளது. இது இக்கவிதைகளை வீரசைவ வசன கவிதைகளை நினைவூட்டுவதாக ஆக்குகிறது. அக்கமாதேவியின் குகேஸ்வரன் நெஞ்சக்குகையில் வாழ்பவன் தானே ? கண்டடைதலின் கவிதை இக்கவிதைகளை வகுப்பேன். இவற்றை கருத்துக்கள், அறிவுறுத்தல்கள் என்று கொள்வது கவிதை வாசிப்பாகாது. அவ்வெளிப்பாடுகளினூடாக அவை நிகழ்ந்த அந்தத் தருணத்து உள நிலையை, அகஎழுச்சியை சென்றடைய முடியும் என்றால் வாசகனும் அக் கவிதையைப் பெற்றுக் கொள்கிறான் ### வெவ்வேறு தனிவெளிப்பாடுகள். ஒவ்வொன்றும் தனித்தவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையும்கூட. அவை இணைந்து உருவாகும் அந்த உளநிலையின் உச்சம் அச்சருகு. ஒரு காலால் விண்ணுக்கு எற்றப்பட்டு பறவையாகும் தருணத்தை அடைந்தது. அது காலனின், தருமனின் கால். - ஜெயமோகன் [ ஜெயமோகன் நமது படைப்புகள் பற்றி சொல்லும் போது பிறர் எவர் சொன்னாலும் ஏற்படாத மகிழ்ச்சி மனதிற்கு கிடைக்கிறது.தொடர்ந்து எழுதும் உத்வேகத்தை பெறுகிறோம் ...

நாளை வந்துருச்சுப்பா எழும்பு

Image
நாளை வந்துருச்சுப்பா எழும்பு 1  அம்மன் இன்று புன்னகை பூத்தாள் நேற்று புன் முறுவல் அதன் முன்பு மென் நகை அதன் முன்பு கோபம் அதன் முன்பு தாபம் அதன் முன்பு சோகம் அதன் முன்பு காதல் அதன் முன்பு வாய்விட்டுச் சிரித்தாள் தினந்தோறும் நானும் பார்த்து வருகிறேன் அம்மன் ஒருபோதும் ஒருபோல இருந்தததில்லை கல்லென்றாலும் காணும் கண்களில் வேறொன்று செய்கிறாள் நீல வேணி 2 காலைப் பொன்நிறத்தின் சாரல் மின்மினிகள் ஒழுகுவது போலும் நிலம் நோக்கி இறங்குகிறது மழையைப் பார்க்க வேண்டுமெனில் முதலில் மழை என்ற சொல்லை மறக்க வேண்டியிருக்கிறது அல்லாமல் காணும் மழை மழை என்கிற அர்த்தம் மழை அதற்கு வெளியில் பெய்து கொண்டிருப்பது 3 இன்று காலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு முப்பத்தியொரு நாட்கள் என தெரிந்து கொண்டேன் இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு இது வரும் என்பது தெரியாது தமிழ் மாதத்தில் முப்பத்திரண்டு நாட்கள் கூட இருக்கின்றன முன்பெல்லாம் மூட்டை மடக்கி பள்ளம் மேடு என அறியும் வழி ஒன்றினைத் தெரிந்து வைத்திருந்தேன் எப்படியோ அது கை நழுவிப் போய்விட்டது எதிர்பாராமல் ஒருமுறை வாரத்திற்கு எ...

வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி

Image
வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி ; மனதால் எழுந்து வந்த பாதை பெரும்பாலானவர்களை பாதித்தவர் கல்யாண்ஜி . கவிதை எழுத விரும்பும் ஒருவர் அவரால் பாதிப்படையவில்லையெனின் இனி பாதிப்படைவார் .இரண்டு வகையினர் இங்கே இருக்க முடியும் .ஒன்று அவரால் ஏற்கனவே பாதிப்படைந்தவர் இல்லையெனில் இனி பாதிப்படையவிருக்கிறவர்.அன்றாடத்தின் பல நுட்பங்களை அவர் வாசகனுக்கும் கடத்திவிடக் கூடியவர்.சீண்டும் பண்பும் கொண்டவர்தான் என்றாலும் அது அவரில் மிகவும் சிறிய பகுதி.அன்பால் மூடியிருக்கும் பகுதி அது.தமிழில் வாசகர்கள் அதிகம் உள்ள கவிஞரும் அவரே. கவிஞர்களில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படையாகப் பேசியவர்கள் மிகவும் குறைவு.நவீனத்துவ விமர்சகர்கள் அவரை பொருட்படுத்தி பலமாக நிராகரித்தார்கள்.அதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.இந்த நிராகரிப்பையும் மீறி அவர் ,தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார். தமிழ் சூழலில் இதழியல்,விமர்சனம் கலையிலக்கியம் எல்லாவற்றிலுமே ஏராளமான பாரபட்சங்கள் உண்டு.அவற்றில் பல கண்களுக்கு புலப்படாதவை.சாதி,மதம் ,கருத்தியல்,கொள்கை ,கட்சி என நிறைய . இவற்றையெல்லாம் ஒருவர் எதனால் எதனால் ? என்...

இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது

Image
இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது அவர்கள் அதிகாரத்தில் இருக்கத் தேவையில்லை.இருக்கலாம் இல்லாமல் போகலாம்,அது பிரச்சனையில்லை. கருத்தியல் ரீதியில் அவர்கள் வீழ்ச்சியடையக் கூடாது.மக்களை புரிந்து கொள்வதில் பிழை செய்யக் கூடாது.அப்படி ஏற்படும் பிழைகள் இந்தியாவில் காங்கிரசை வீழ்த்தும். வடிகட்டிய இடதுசாரித்தனத்தை கொண்டதுதான் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி.நேருவிடம் இருந்து இது உருவாகிறது,இந்திரா காந்தியிடம் தொடர்கிறது.நரசிம்ம ராவ் ,மன்மோகன் என அதற்கு நெடிய மரபு இருக்கிறது.முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் பேசுகிற குரல் கொஞ்சம் வடிகட்டிய இடதுசாரி குரல் அவ்வளவுதான் .எனவே இடதுசாரிகள் இந்தியாவில் ஜீவனை விட்டால் காங்கிரசும் உடன் சேர்ந்து மரிக்கும் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சி துவழக் கூடாது .அதற்காகவேனும் இடதுசாரிகள் இன்றியமையாதவர்கள்.உலகளாவிய விதத்தில் இடதுசாரிகளை காங்கிரஸ் உள்வாங்கிய விதமே அவர்களில் பெரும்பாலானோரை மக்களை நோக்கி சிந்திப்பவர்களாக வைத்திருக்கிறது. கொஞ்சம் ஆழ்ந்து கவனிப்பீர்களேயாயின் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும்.மம்தா வங்கத்தில் இடதுசாரிகளுக்கு எதிரானவரே.ஆனால் மம்தா...

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?

Image
ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ? 1 சாலையின் மத்தியில் ஆலிலை ஒன்று சற்றே பழுப்பு சற்றே பச்சை நிமிர்ந்து நிற்கிறது அந்த பக்கமாக வாகனம் செல்கையில் இந்த பக்கமாக சுழன்று திரும்புகிறது இந்த பக்கம் வாகனத்திற்கு அந்த பக்கம் ஒற்றைக்கால் நடனம் என்ன நினைத்தானோ சிறுவன் ஊடே புகுந்து இலையை ஓரத்திற்கு உயரே எறிந்தான் நடனம் இப்போது மேலே பறக்கிறது. 2 ஒன்பது மகன்களை பெற்ற அப்பாவின் இளைய மகன் அப்பாவின் ஒரு கைமட்டும் பறந்து செல்வது போல வாகனத்தில் விரைகிறான் அப்போதுதான் கவனித்தேன் மீதமுள்ளோர் மீதமுள்ள அவயங்களாயிருப்பதை ஒன்பது அவயங்கள் பதினெட்டு கைகள் கால்கள் கண்கள் செவிகள் ஒரே புருஷன் 3 ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ? மிச்சம் வைத்த ஆசைகள் மிச்சம் வைத்த தகிப்புகள் மீதமிருக்கும் தாகங்கள் மீதமிருக்கும் வஞ்சம் உறுப்பு தேடித் கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றும் 4 சரியாகவே வாழ்ந்ததாகச் சொல்லி ஒரு பிழை விட்டீர்கள் அந்த பிழையே நானாக வளர்ந்து பெரிதானது இந்த பிழையைக் கொண்டு போய் அந்த இடத்தில் நட்டு வைக்க வேண்டும் இல்லாமல் தர்க்கம் பண்ணுவதில் ஒரு பலனும் இல...

சிறிதிற்குள் பெரிது இருக்கிறது

Image
உடல் தன்னளவில் ஆனந்தம் 1 எல்லையில்லா பிரபஞ்சம்  நமக்கு ஒரு கூடு கூட்டிற்குள் எல்லையில்லா பிரபஞ்சம் 2 எல்லையில்லா அருள் கனி உடல் தன்னளவில் ஆனந்தம் 3 அவ்வளவு பாய்ந்து செல்லும் வெள்ளத்தில் இருந்து நமக்குத் தேவை கையளவு நதி எடுத்துக் கொள்ளும் நதி பின்னர் நம்மை எடுத்துக் கொள்கையில் கையளவு கடல் 4 நம்முடைய கூடு சிறிது கூட்டிற்குள்ளும் சூரியன் கூட்டிற்குள்ளும் சந்திரன் கூட்டிற்குள்ளும் இரவு பகல் வளர்பிறை பௌர்ணமி எல்லாம் மிக மிக பெரிது பெரிது 5 நாமெல்லோருமாகச் சேர்ந்து எவ்வளவு கவனமாக சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம் ? 6 எவ்வளவு பசித்தாலும் தேவையொரு சிறு தான்யமே 7 பசி ஒருபோதும் பெரிதாகப் புசிப்பதில்லை 8 நாம் நிச்சயம் நாமே தாமா ? 9 எடுத்ததையெல்லாம் விட்டுச் செல்ல வேண்டும் வேறு வழி கிடையாது 10 என் பாத்திரம் முழுக்க சோறு யாரேனும் எடுத்து தின்ன மாட்டார்களா ? 11 தின்னக் கொடுத்தால் தொலைந்து போகும் 12 பெரிதிற்குள் சிறிதாக இருக்கிறோம் சிறிதிற்குள் பெரிது இருக்கிறது