Posts

14 Poems

Image
 1 நான் யாருக்கும் போட்டியில்லை என்னிடம் போட்டியிட்டால் நீங்கள் விறுதேதான் போகவேண்டி இருக்கும் ஒன்றுமே நடைபெறாது 2 அவற்றில் இல்லாதது 1 அத்தனை பொருட்களையும் எனது அறையில் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் வயோதிகர் அதன் வழியே அவையல்லாத வேறொன்றை அறிய விரும்புகிறார் ஏதேனும் தடயம் அவற்றில் இருக்கிறதா என நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவற்றில் இல்லை அவற்றின் தடயம் 2 கடுமையான சுய நலம் கடுமையான பொது நலம் போல பாவனை செய்தபடி இருக்கிறது 3 வீட்டின் புண்கள் வெளியே இறங்கியதும் சாலை விதிகளை மீறி நின்று கனைக்கின்றன 4 ஒத்தையடிப்பாதையில் தென்படும் கடைக்கு பலபக்க வாசல் ### 3 ஒருவர் இறப்பதற்கு ஒத்துழைத்துத்தான் ஆகவேண்டும் எவ்வளவு தூரத்திற்கு தீவிரமாக அதை எதிர்ப்பதற்கு ஒத்துழைத்தாரோ அதே அளவுக்கு தீவிரத்துடன் இறப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் மருந்துகளை குறைப்பார்கள் அறுவை சிகிழ்ச்சைக்கு தயாராக மாட்டார்கள் எப்படியும் வேறு வார்த்தைகளில் என்றாலும் ஒருவரிடம்தான் கேட்பார்கள் எதற்கு ஒத்துழைக்கப் போகிறீர்கள் என்று. இறப்பிற்கா ? இறப்பை எதிர்ப்பதற்கா ? பதில்படியே நடந்து கொள்வார்கள் ஒரு மாற்றமும் இல்...

எட்டு கவிதைகள்

Image
1 அன்பு எப்படிக் கிடைத்தாலும் வாங்கு எதிர்பார்த்துக் கிடைத்தாலும் வாங்கு ஏமாற்றிக் கொடுத்தாலும் வாங்கு போலியாகக் கிடைத்தாலும் வாங்கு பொய்யென்றாலும் வாங்கு விலைக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை வாங்கி வைத்துக் கொள் 2 நீங்கள் ஒரு காரணமும் இல்லாமலேயே தொடர்பற்று ஒருவரை உங்களுக்குள் வெட்டியாக கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள் அது வெளியில் கூட தெரிய வேண்டியதில்லை வளர்ந்து நீங்கள் கழுவி ஊற்றிய நீராலான சுவர் எழும்பிக் கொண்டிருக்கும் உங்களுக்குள் அந்தப்பக்கம் பார்க்க இயலாத அந்த சுவர் ஒரு நீர்ச் சுவரால் இருவரும் பிரிக்கப்பட்டிருப்பீர்கள் பிறகு நான் கழுவி ஊற்றிய சுவர்தான் இடையிலிருப்பது என்று நீங்கள் கதறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் கழுவி கழுவி ஊற்றி உருவாக்கும் சுவர் அத்தனை பெரியது. 3 கடல் தானாக வரும் 1 கடற்கரையில் இருந்து சிப்பி கொண்டு வந்தேன் சங்கு கொண்டு வந்தேன் சிறுமணல் கொஞ்சம் கடலும் உடன் வந்ததை கவனிக்கவில்லை நெடுநாள் கழித்து சிப்பியை தொட்டேன் அலையடித்தது சங்கில் கடற்காற்றின் விசில் சிறு மணலில் கடல் அப்போது பார்த்தது எப்போதோ வருகிறது எப்போதோ பார்க்கத் தானா அ...