கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள்

கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள்

1

இசக்கியம்மையே
கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள்
அடைகாக்கிறாள்
காபந்து செய்கிறாள்
கோழிகளை மேய்க்கவும்
செய்கிறாள்

2

விஷ வேட்டாளிகள் நான்கைந்து கூடி
எனது படுக்கையறையில் கூடுகள் அமைத்திருக்கின்றன
பகலிரவு பாராத வேலைகள் அவர்களுக்கு
நான் எப்போதேனும் வருகிறேன் தூங்குகிறேன்
போய்விடுகிறேன்

முதலில் எல்லோரும் பயமுறுத்தினார்கள்
அவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் குடைந்து விடுவார்கள்
என்றெல்லாம்
சொன்னார்கள்
எரித்துவிடவேண்டும் என்றார்கள்

இந்த அறையில் அவர்கள் வேலைகளை அவர்கள்
செய்து கொண்டிருக்கிறார்கள்
எனது வேலைகளை
நான் செய்து கொண்டிருக்கிறேன்

காலையில் புலரி
எழுப்புகையில்
முதுகை சடவு வளைத்து
குட் மார்னிங் சொல்கிறார்கள்
அனைத்து களைப்பினையும்
நீரில் வடித்து
இரவில் அவர்களுக்கு
குட் நைட்
சொல்கிறேன்

3

 ###

மனிதர்கள் மிகவும் சுவாரஸ்யமாக தெரிகிறார்கள்

1

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு விதமான லௌகீகம்

சிறந்த பெண் சிறந்த லௌகீகம்
கடினமான பெண் கடினமான லௌகீகம்

அவளுடைய விலங்கு
அவளுடைய புன்சிரியில் இல்லை
அழகில் இல்லை
இடைவளைவில் இல்லை
மார்பிலும் இல்லை

காட்டிலிருந்து வேட்டைக்கு புறப்பட்ட
முதல் நாளில்
இருக்கிறது
அது .
எவ்வளவு தூரம் பின்னர்
பழக்கப்பட்டிருக்கிறது
என்பதில் இருக்கிறது
காட்டிற்கு உன்னை எப்படி பழக்கப்போகிறது
என்பதில்
இருக்கிறது

சிலசமயம் காட்டிலிருந்து எவ்வாறு உன்னை
மீட்டெடுக்கிறது
என்பதிலும் இருக்கிறது

2

லட்சுமிவிளக்கு வரிசையில்
ஏராளம்
முகங்கள்
ஒன்றுபோலும் இல்லை மற்றொன்று
மாமிமார்,சித்திமார்,அக்காள்மார் வரிசை
பார்த்தோர் கேள்விப்பட்டோரென
நிறைய முகங்கள்

முகத்தைத் திறந்து உள்ளே செல்ல முடிந்தால்
முற்றம் வீடு தோட்டம்
பழி பாவம் வீடு
தென்னைமரங்கள்
என
ஏராளம்
எதுவும் ஒன்றுபோலில்லை
வரிசையேனும் மாறிக்கிடக்கின்றன
அனைத்திலும் .
ஒவ்வொரு முகத்திற்கு
பின்பும் திறந்து விரிகின்றன
பகைசாம்ராஜ்யங்கள்

3

பூனை போல
பசு போல
நாய் போல நரி போல
குதிரை போல
அணில் போல
கரடி போல

வாயைச் சுழற்றுகையில்
சர்ப்பம் போல

மிருகமாக பார்க்கத் தொடங்கினால்
மனிதர்கள்
மிகவும்
சுவாரஸ்யமாக
தெரிகிறார்கள்

மிருகமாக காண்பது என்பது
காட்டில் வைத்து
அவர்களைக் காண்பது

###

4

ராணிக்கு இரண்டு
விஷப்பற்கள் உண்டு
உன்னிடம் அவள் அதனை நீட்டாதவரையில் நண்பன்
நீட்டிவிட்டாளெனில்
காதலன்

2

ராணியின் காதலனென்றால்
வேலைகள் குறைவாகத்தானே இருக்க வேண்டும் ?

ஆமாம் ஆமாம்

முல்லாவின் குதிரைக்கு
உடுப்பு தைத்துக் கொடுக்கவேண்டும்
தினமும் ராணிக்கு ஒருவேளையுணவில்
விஷம் வைத்து நீட்டுவார்கள்
தின்று பார்த்து
கண்டு பிடிக்கவேண்டும்

வீதிஉலா வருகையில்
கோலமிடா பெண்டிரின்
பிள்ளைகளை கைது செய்யவேண்டும்

மீதமுள்ள நேரத்தில்
வேலைகளே
கிடையாது
சும்மாதான் இருக்கவேண்டும்

2

போனால் போகட்டும் ராணியென்றால் என்ன
ராணியின் தோழியென்றால் என்ன
என்று துணிந்து முடிவெடுத்தான் பாருங்கள்
அவன் தான்
ராணிக்கு
இப்போது
முக்கிய மந்திரி

foto - Swaminathan Rajamani

Comments

  1. Strange "water hack" burns 2lbs overnight

    Over 160 000 men and women are using a simple and secret "water hack" to drop 2 lbs each night in their sleep.

    It's easy and it works with everybody.

    This is how to do it yourself:

    1) Take a drinking glass and fill it half glass

    2) Proceed to learn this strange hack

    and you'll become 2 lbs thinner as soon as tomorrow!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"