எனக்கு வந்தா ரத்தம் ,எதிரிக்கு வந்தா தக்காளிச் சட்டினி ?
எனக்கு வந்தா ரத்தம் ,எதிரிக்கு வந்தா தக்காளிச் சட்டினி ? குண்டர் சட்டம் சரிதான் என்று மட்டுமல்ல,தேச பாதுகாப்புக்கு அவசியம் என வாதிடுகிறார் ஜென்ராம்.புதிய தலைமுறையில் வாதிட இதற்கு ஹென்றி டிபேனை அழைக்கவில்லை.அவருக்கு தன் வாய்கொண்டு கீறிய கோடுகள் இருக்குமாகையால் அதனைத் தாண்டுவதற்கு ஏராளம் பயிற்சிகளும் ஜாலங்களும் அவசியப்படும்.ஒருபடி மேலே போய் ஜனநாயகத்தைக் காத்திட குண்டர் சட்டம் அவசியம் என அவர் பாய்ந்து செல்கையில் அப்படியே புல்லரித்தது..அவர் ஒரு இடதுசாரி ஊடகவியளாளர். எனக்கு இந்த இடது முற்போக்குகள்,தி.க,தி.மு.க அல்லகைகள்,லிபரலஸ் ஆகியோர் நம்முடைய சமுகத்தில் நாலாந்தரமானவர்கள் என தோன்றுவதற்கு இந்த இரட்டை நிலையே பிரதானமான காரணம். கிஷோர் கே சாமியோடு உடன்படும் விஷயங்களும் அல்லாத விஷயங்களும் எனக்கு உண்டு.அவர் ஒரு பைத்தியக்காரர் அல்லர்.குற்றவாளியும் அல்லர்.அவருக்கு தெளிந்த அரசியல் பார்வைகளும் ,சார்பு நிலைகளும் உள்ளன.ஒரு அரசு இப்போது அவரை குண்டர் சட்டத்தில் சிறை பிடிக்கலாம்,மற்றொரு அரசு அவருக்கு பிறிதொரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி கூட வழங்கக் கூடும்.ஏனெனில் அவர் அரசியலாளர்.திருமுருகன் காந்...