எழுவர் விடுதலையில் உள்ள சிக்கல்

 எழுவர் விடுதலையில் உள்ள சிக்கல்




எழுவர் விடுதலைக்கு எதிரான சிக்கல் ; அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ,எதிர்மறைஅரசியல் தரப்புகளாலேயே ஏற்படுகிறது.உணர்ச்சிக் கொந்தளிப்புகளும்,தேசியத்திற்கு எதிரான பிளவு அரசியல் சக்திகளும் இந்த தாமதத்தை உண்டாக்குகிறார்கள்.இல்லையெனில் அனுதாபத்தின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்
இரண்டு விஷயங்கள் இந்த வழக்கை முன்னிட்டு முக்கியமானவை.முதலில் இவ்வழக்கு ஒரு நாட்டின் பிரதம மந்திரி கொல்லப்பட்ட வழக்கு.எழுவர் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் நாட்டின் எந்த அரசியல் குழுக்களிடமும் இதன் முக்கியத்துவம் குறித்த உணர்வு இல்லை.இந்த கொலையை,எழுவர் ஆதரவு அரசியல் சக்திகள் பெரும்பாலும் ஆதரிக்கிறார்கள்.வழக்கிற்காக பேசுவது ஒன்றாகவும் , பொதுவில் பேசுவது வேறொன்றாகவும் இருக்கிறது.அற்புதம்மாள் இந்த எதிர்மறைச் சக்திகளை தன்னை அண்டவிடாது தற்காத்துக் கொண்டிருப்பார் எனில் ,சாதகமாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.மாறாக எந்த நாடாக இருந்தாலும், தனது நாட்டின் பிரதம மந்திரியை கொன்றமைக்காக, இவர்கள் ஒராண்டிற்குள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்.

இந்தியாவின் ஜனநாயகப்பண்பால் மட்டுமே இவ்வளவு நாட்கள் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உணர்வே இன்றி இந்த எழுவர் ஆதரவு நிலைபாடு எடுப்பவர்கள் இந்திய தேசிய எதிரிகள் போல பேசிக் கொண்டிருப்பவர்கள்.சீமான் போன்றோர் ஒருபடி கூடுதலாகச் சென்று "நாங்கள்தான் செய்தோம்" என்கிற அளவிற்கு மார்தட்டுகிறார்.இவர்கள் விஷயத்தை உணராமல் இருப்பது மாத்திரமில்லாமல் மேலும் சிக்கலாக்குகிறார்கள்.இந்திய தேசியத்திற்கு எதிரான சக்திகள் எல்லோரும் அற்புதம்மாளை கூடி நிற்பது ;அவருக்கு எவ்வளவு பெரிய பாதகத்தை ஏற்படுத்தக் கூடியது என்று யோசித்துப் பாருங்கள்.
அதிலும் மக்கள் இந்த வழக்கை மறக்கவும் இல்லை.மன்னிக்கவும் இல்லை.மக்களிடம் போய் இவர்கள் தினந்தோறும் சரியென்று வாதிடுகிறார்கள்.
சாதாரணமான கொலை வழக்குகளிலேயே தப்பிப்பதற்கு எவ்வளவு சாதுர்யம் தேவைப்படும் ? இதுவோ இந்தியாவின் பிரதமரின் கொலை வழக்கு.சாதாரண வழக்குகளானாலும் "நான் தான் கொலை செய்தேன்" என்று மார்தட்டியவாறே ஜெயிக்க முடியாது.நெஞ்சை மலர்த்தி நின்றால் அனைத்தும் காலியாகி விடும்.இந்த வழக்கின் அதிமுக்கியத்துவத்தை யோசித்துப் பாருங்கள்.எதிரிகளுக்கு ஆதரவு நிலைபாடு எடுக்கும் யாரிடமிருந்தேனும் நெஞ்சை மலர்த்தாமல் குரல் வருகிறதா பார்த்தீர்களா? இப்படி செய்து கொண்டிருப்பதால் என்ன நடக்கும் ? இப்படி எதிர்கொள்வதால் என்ன நடக்க வேண்டுமோ அதுவே இதுவரையில் நடந்து கொண்டிருக்கிறது.
கூட்டு சரியில்லாதவர்களுடன் கூட்டு வைத்தால் எதுவும் சரிப்படாது.வைகோ,சீமான் ,நெடுமாறன் ,குளத்தூர் மணி,கோவை ராமகிருஷ்ணன்,வீரமணி போன்ற எவர்பெயரிலும் மக்களுக்கு மதிப்பில்லை.இவர்கள் வந்து ஒரு பிரச்சனையில் தலையிடுகிறார்கள் என்றாலே அந்த விஷயத்தை எதிர்மறையாகவே மக்கள் கணிக்கிறார்கள்.இதனை ஏன் சொல்கிறேன் எனில் இந்த கொலை வழக்கு மக்களின் ஆழ்மனதுடன் தொடர்பு கொண்ட அதி முக்கியத்துவம் கொண்டது
அற்புதம்மாளுக்கான வாய்ப்பு இந்த அரசியல் எதிர்மறை சக்திகளிடம் இருந்து முற்றிலும் விலகி ;தனித்து இந்த வழக்கை எதிர்கொள்வதிலேயே அடங்கியிருக்கிறது.
மக்களின் மன்னிக்கும் குணத்தையும் கோரி நிற்கும் கொடிய கொலை வழக்கிது.நினைவில் இருக்கட்டும்

[ மீள் ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1